
50 ஆண்டு நல்ல செயலுக்கு தண்டனையா?
நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு என்பது வெறும் நிர்வாக முறையிலான மாற்றம் அல்ல – அது தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் அரசியல் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் முக்கியமான அம்சமாகும். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறுகையில், இது தென் மாநிலங்களுக்கான “தண்டனை” என்றே குற்றஞ்சாட்டுகிறார். ஆனால் ஏன் இது ஒரு தண்டனையாக பார்க்கப்படுகிறது?

கடந்த 50 ஆண்டுகளாக தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் கல்வி, சுகாதாரம் மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டில் செய்த முதலீடுகள் காரணமாக இந்த மாநிலங்களில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது. அதே நேரத்தில், உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்களில் மக்கள்தொகை வேகமாக அதிகரித்துள்ளது.
தொகுதி மறுசீரமைப்பும்
நமது அரசியல் சாசனத்தின் 84வது சட்டத் திருத்தத்தின்படி நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு 2026ஆம் ஆண்டு வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த மறுசீரமைப்பை எப்படி மேற்கொள்வது என்பது குறித்து எந்த தெளிவான விளக்கமும் இதுவரை மாநிலங்களுக்கு வழங்கப்படவில்லை.
அரசியல் சாசனத்தின் 81ஆவது சட்டப் பிரிவின்படி, “ஒவ்வொரு மக்களவை உறுப்பினரும் கூடுமானவரையில் சம-எண்ணிக்கையிலான மக்களுக்குப் பிரதிநிதியாக இருக்க வேண்டும்” என்ற கோட்பாடு (equal population representation for each MP) வலியுறுத்தப்படுகிறது. இது “ஒரு வாக்கு-ஒரு மதிப்பு” (One vote-one value) என்ற ஜனநாயகக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது.

ஆனால் இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட கூட்டாட்சி நாட்டில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் சமமான பிரதிநிதித்துவம் இருப்பதும் முக்கியமான ஜனநாயகக் கோட்பாடாகும்.
Unlimited High-Quality Audiobooks
Best Devotional Audiobooks
Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.
Listen DevotionalCrime Series
Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.
Discover Crime SeriesRajesh Kumar Collection
Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.
Listen Nowபுதிய மக்கள் தொகையால் ஏற்படும் விளைவுகள்
விஜய் தெரிவிக்கையில், புதிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டால், தென் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறையும் அபாயம் உள்ளது.
“கடந்த 50 ஆண்டுகளாகக் கல்வி, சுகாதாரம் மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டில் முதலீடு செய்து, தனது மக்கள்தொகை வளர்ச்சியைத் திறம்படக் கட்டுப்படுத்தியுள்ள தமிழ்நாடு மற்றும் இதர தென்மாநிலங்களுக்கு இது ஒரு பெரும் தண்டனையே அன்றி வேறு இல்லை.”
புதிய நாடாளுமன்ற கட்டிடம் – ஒரு சான்று?
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மக்களவையில் 888 இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது ஒன்றிய அரசு நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் நீண்டகால திட்டத்தில் இருப்பதைக் காட்டுகிறது.
தொகுதிகளை அதிகரிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்:
- தற்போதே பேச வாய்ப்பு இல்லை – 543 உறுப்பினர்கள் இருக்கும்போதே அனைவருக்கும் கேள்வி கேட்க போதிய நேரம் இல்லை. மேலும் உறுப்பினர்களைச் சேர்த்துக்கொண்டால் அவர்கள் “அலங்கார பொம்மைகளாக” மட்டுமே இருப்பார்கள்.
- மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் வேறு – விலைவாசி உயர்வு, வேலையின்மை, தரமான கல்வி மற்றும் சுகாதார வசதியின்மை, சாலை மற்றும் குடிநீர் வசதியின்மை போன்றவையே மக்களின் உண்மையான பிரச்சனைகள். “நாடாளுமன்ற உறுப்பினர்களின் பற்றாக்குறை” என்பது மக்கள் பிரச்சனையே அல்ல.
- செலவு அதிகரிப்பு – ஏற்கெனவே பல லட்சம் கோடி கடன் சுமையில் இருக்கும் நிலையில், கூடுதல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செலவு தேவையா?
விஜயின் பரிந்துரை என்ன?
விஜய் தெரிவிக்கையில், 1971 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தற்பொழுது ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை மாற்றம் இன்றி காலவரையின்றி நீட்டிப்பு செய்யப்பட வேண்டும் என்கிறார்.

அவர் சுட்டிக்காட்டுகையில், அமெரிக்காவில் மக்களவைப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 435 என நிரந்தரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. “Equal population representation from each MP” என்ற கோட்பாடு 50 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது கூட பெரிய பிரச்சனையாக இல்லை என்கிறார்.
ஜனநாயகத்தை உண்மையில் பலப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்
விஜய் கூறுகையில், ஒன்றிய அரசு உண்மையில் ஜனநாயகக் கோட்பாடுகளை காக்க விரும்பினால் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்:
- சுதந்திரமான தேர்தல் ஆணையம் – தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட வேண்டும்.
- நீதித்துறையின் சுதந்திரம் – உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனங்களில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்.
- சுதந்திரமான ஊடகங்கள் – ஊடகத் துறை எந்த அச்சுறுத்தலும் இன்றி செயல்பட வேண்டும். CBI, IT, ED போன்ற அமைப்புகள் அரசியல் தலையீடு இன்றி செயல்பட வேண்டும்.
- நியாயமான நிதிப் பகிர்வு – மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில் கூட்டணி மற்றும் தேர்தல் கணக்குகளை விடுத்து, பாரபட்சமற்ற அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
- மாநிலங்களவை சீர்திருத்தம் – மாநிலங்களவையில் அனைத்து மாநிலங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் வழங்குவது குறித்து பொது விவாதம் நடத்தப்பட வேண்டும்.
விஜயின் எச்சரிக்கை
விஜய் எச்சரிக்கையில், “equal population representation from each MP” என்ற போர்வையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பை ஒன்றிய அரசு முன்னெடுக்குமானால், அது தென் மாநிலங்களின் அரசியல் முக்கியத்துவத்தை அழிப்பதற்கான முயற்சியாகவே பார்க்கப்படும் என்கிறார்.





ஒரு சில வட மாநிலங்களில் மட்டும் வெற்றி பெற்று, ஒன்றியத்தில் ஆட்சி அமைக்க முடியும் என்ற சூழ்நிலை உருவானால் அது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று அவர் வலியுறுத்துகிறார்.
ஒற்றுமையான போராட்டம்
இந்த விவகாரத்தில், தமிழக வெற்றிக் கழகம் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் இணைந்து போராடத் தயாராக உள்ளதாக விஜய் உறுதி அளிக்கிறார்.
“இந்தத் தலையாய பிரச்சனையில் தமிழ்நாட்டின் நலனுக்காக யார் இருக்கிறார்கள்; தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக யார் இருக்கிறார்கள் என்பதை அடையாளப்படுத்த இது உதவட்டும்” என்று அவர் தெரிவிக்கிறார்.
விஜய் வலியுறுத்துகையில், அண்ணல் அம்பேத்கர் வழங்கிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை விழுமியங்களில் ஒன்று “கூட்டாட்சித் தத்துவ முறை” (Federalism) என்கிறார்.
ஆகவே, ஒன்றிய அரசு இந்த மறுசீரமைப்பு பற்றிய முடிவை அனைத்து மாநிலங்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே எடுக்க வேண்டும் என்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு.
“இதுவே நம் அரசியல் சாசனத் தந்தை அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு நாம் செய்யும் உரிய மரியாதை ஆகும்” என முடிக்கிறார் விஜய்.