• December 4, 2024

வீரபாண்டிய கட்டபொம்மன் பெயர் காரணம் என்ன? – தெரிந்து கொள்ளலாமா.?

 வீரபாண்டிய கட்டபொம்மன் பெயர் காரணம் என்ன? – தெரிந்து கொள்ளலாமா.?

Veerapandiya Kattabomman

அழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில் (இன்றைய ஒட்டப்பிடாரம்) ஆட்சி புரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்கர் வம்சம்) அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு) இடம்பெற்று இடம்பெற்றிருந்தார். 

இவரது பூர்வீகம் ஆந்திரமாநிலம் பெல்லாரி ஆகும். வீரம் மிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று. 

ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதி கட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன். 

Veerapandiya Kattabomman
Veerapandiya Kattabomman

ஜிந்தா பொம்மு மரபில் வந்தவர்களே (திக் விஜய கட்டபொம்மன்) ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமகத்தம்மாள் தம்பதியர். இவர்களின் புதல்வரே வீரபாண்டியன் எனும் இயற்பெயர் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மன் ஆவார். 

இவர் நாயக்க வம்ச அரசாட்சியில் தொடர்ந்து வருவதால் இவர் பொம்மு நாயக்கர் என்று மக்களால் அழைக்கப்பட்டார். ஜனவரி மூன்றாம் தேதி 1760 அன்று ஆறுமுகத்தம்மாள், திக்குவிஜய கட்டபொம்மு தம்பதியருக்கு பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன்.

பிப்ரவரி 2, 1790 அன்று 47 வது பாளையக்காரராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார் . இவரது துணைவியார் வீரசக்கம்மாள் இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைசிங்கம் என்ற இரு சகோதரர்களும் ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். இவர் 9 ஆண்டுகள் 8 மாதம் 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.

கும்பினியார்  கிபி 1797 கப்பம் கேட்டார். கிபி 1797 இல் முதன் முதலாக ஆங்கிலேய ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்தார். 1797 – 1798 இல் நடந்த முதல் போரில் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன் துரை தோற்று ஓடினார்.

பின்னர் நெல்லை மாவட்டக் கலெக்டர் ஜாக்சன் வீரபாண்டிய கட்டபொம்மனை சந்திக்க அழைத்தார். கட்டபொம்மனை அவமானப்படுத்த நினைத்து வேண்டுமென்றே பல இடங்களுக்கு அலைக்கழித்தார்.

இறுதியில் செப்டம்பர் 10 ஆம் தேதி 1798 இல் இராமநாதபுரத்தில் சந்தித்தார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். அதை முறியடித்து வீரபாண்டியக் கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தார். செப்டம்பர் 5, 1799 இல் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டது.

Veerapandiya Kattabomman
Veerapandiya Kattabomman

அங்கு கடும் போர் நடைபெற்றது போரில் பல ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் கோட்டை வீழ்ந்துவிடும் என்ற நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார். 

கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட அதோடு பாஞ்சாலங் குறிச்சியின் வரலாறு முடிந்து விடவில்லை. ஆங்கிலேயர்களால் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரை பாஞ்சாலங்குறிச்சி வீரர்களால் மீட்கப்பட்டார்.

இதனால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை புத்துயிர் பெற்றது. இதனை அடுத்து கைது செய்ய வந்த மேஜர் மெக்காலே கோட்டையினுள் செல்ல முடியாமல்  திரும்பினார். பின்னர் அவர் தலைமையில் ஒரு பெரும் படை கோட்டையை முற்றுகையிட ஆரம்பித்து  1801-இல் கைப்பற்றியது.

இந்த காரணத்தால் தம்பி காளையார் கோவில், விருப்பாட்சி, திண்டுக்கல் என்று ஓடிய ஊமைத்துரையும், அவர் தம்பி துரை சிங்கம் கைது செய்யப்பட்டு பாஞ்சாலக் குறிச்சி பீரங்கி மேட்டில் தூக்கிலிடப்பட்டனர். பாஞ்சாலங்குறிச்சி என்கிற பெயரையே தமிழகத்தின் வரைபடத்திலிருந்து நீக்கினர் வெள்ளையர்.