தமிழகத்தின் தென் பகுதியை ஆண்ட சேர மன்னர்கள்..! – ஓர் வரலாற்று அலசல்..!
தமிழகத்தை மூவேந்தர்கள் ஆண்டது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். அந்த வகையில் சேர அரசர்கள் தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியை ஆண்டு வந்திருக்கிறார்கள்.
சோழர்கள் கிழக்குப் பகுதியையும், பாண்டியர்கள் தெற்கு பகுதியும், ஆண்டு வந்ததற்கான ஆதாரங்கள் உள்ளது. அந்த வகையில் இந்தப் பகுதிகளை குணபுலம், தென்புலம் குடபுலம் என்று சங்க இலக்கியங்கள் கூறி வருகிறது.
கடல் சார்ந்த நிலப்பரப்பானது அதிகமாக உள்ள பகுதிகளை “சேர்ப்பு” என்ற சொல்லால் நமது முன்னோர்கள் அழைத்து வந்திருக்கிறார்கள். அதாவது நீர் சூழ்ந்த கடலும், நிலமும் சேரும் இடத்தை தான் நம் முன்னோர்கள் “சேர்ப்பு” என்றனர்.
இந்த சேர்ப்பு பகுதி அதிகம் உள்ள நிலத்தை ஆண்டவன் தான் சேர மன்னர்கள் ஆவார்கள். இதனால் தான் என்னமோ இவர்களுக்கு சேரர் என்ற பெயர் வந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் சேர நாட்டை ஆண்ட மன்னர்கள் அனைவரையுமே சேரமான் என்ற அடைமொழியில் அழைத்து இருக்கிறார்கள். சேரர்கள் கொடி, வில் கொடி என்பது அனைவருக்கும் நன்றாகவே தெரியும். இந்த சேரர்கள் வில்லால் அம்பினை எய்துவதில் கை தேர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் இவர்கள் கரூரையும், வஞ்சியையும் தலைநகராகக் கொண்டு ஆண்டிருக்கிறார்கள். வேறு சில சேர மன்னர்கள் தொண்டியை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்திருக்கிறார்கள்.
சங்க கால சேரர்களைப் பற்றிய குறிப்புகள் மிகவும் குறைந்த அளவு தான் காணப்படுகிறது. குறிப்பாக பதிற்றுப்பத்து பாடல்களில் சேரர்கள் பற்றிய குறிப்புக்கள் உள்ளது.
அது மட்டுமல்லாமல் சங்க கால சேரர்களின் எல்லைகள் கொங்கத்தின் எல்லைகளான கொல்லம் வரை இருந்தது. எனினும் கேரள வர்மாக்கள் சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவத்தை கொடுத்ததால் அங்கு தமிழ் அழிந்தது.
சேரர்களின் துறைமுக நகரங்களாக முசிறி மற்றும் தொண்டி விளங்கியது. சேர மன்னர்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தவராக கருதப்படுபவர் இமய வரம்பன் நெடுஞ்சேரநாதன் சுமார் 58 ஆண்டுகள் இவர் அரசாட்சி செய்திருக்கிறார்.
சேர நாடு புவியியல் ரீதியாக இந்திய பெருங்கடல் பகுதியின் அருகில் இருந்ததால் கடல் வர்த்தகம் செழிப்பாக நடைபெற்றது. இந்திய மசாலா, மரம், முத்து, ரத்தினங்கள் போன்றவற்றை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யதார்கள்.
பதிற்றுப்பத்து நூலில் எட்டு சேர மன்னர்கள் பற்றியும், அவர்கள் ஆண்ட பகுதிகள் பற்றியும் குறிப்புகள் உள்ளது. மேலும் கரூர் அருகே உள்ள புகலூர் கல்வெட்டுக்கள் மூன்று தலைமுறை சேர மன்னர்களை குறிப்பிடுகிறது.
சேரர்கள் செம்பு மற்றும் ஈய நாணயங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். இந்த நாணயங்கள் ரோமானியர்களால் அதிகளவு ஈர்க்கப்பட்டது. மேலும் இந்த நாணயங்கள் அமராவதி ஆற்று படுக்கையில் அகழ்வாய்வின் போது கண்டெடுக்கப்பட்டது.
இவர்களின் நாணயங்களில் வில் மற்றும் அம்புச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. இவர்களது பூ பனம்பூ. பனைமரம் வளைந்து, நெளியாமல் செங்குத்தாக வளர்வது போன்று நிமிர்ந்த நன்னடை கொண்டவர்களாக சேரர்கள் திகழ்ந்து இருக்கிறார்கள்.
சேரர்கள் இமயம் வரை சென்று போரிட்டு வெற்றி பெற்றதை அடுத்து சேர மன்னர்களுக்கு இமயவர்மன் என்ற பட்டப்பெயர் கொடுக்கப்பட்டது. அதே போல இன்று இருக்கும் திபெத் நாட்டை வென்றதால் வானவரம்பன் என்ற பெயரும் அவர்களுக்கு உள்ளது.