“சோழர்களின் வரலாறு பேசும் திருப்புறம்பியம் போர்..!” – எப்படி திருப்புமுனையானது..
சோழர்களின் மாபெரும் எழுச்சிக்கு காரணமாக இருந்த திருபுறம்பியம் போர் அவர்களுக்கு எப்படி திருப்புமுனையாக அமைந்தது என்பது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
கிபி 80 ஆம் ஆண்டில் பல்லவ மன்னன் அபராஜித வர்மருக்கும் பாண்டிய மன்னன் வரகுண பாண்டியனுக்கும் இடையே திருப்புறம்பியம் எனும் இடத்தில் நடந்த போரை தான் திருப்புறம்பியம் போர் என்று நாம் கூறுகிறோம்.
இந்த போரில் ஆச்சரியம் தரக்கூடிய விஷயம் என்னவென்றால் பல்லவர்களுக்கு ஆதரவாக சோழர்களும், பாண்டியர்களுக்கு ஆதரவாக முத்தரையர்களும் போரில் ஈடுபட்டது தான். அது சரி பல்லவர்களுக்கு ஆதரவாக போரிட்ட சோழர்களுக்கு இந்தப் போர் எப்படி திருப்புமுனையாக இருந்தது என்று உங்களுக்குள் கேள்விகள் எழலாம்.
இனி அதற்கான பதிலை பார்க்கலாம். அதற்கு முன் எந்த போரில் அபராஜித வர்மனுக்கு துணையாக கங்க நாட்டு மன்னன் பிரதிவீபதி போரிட வந்திருந்தான். இதனை அடுத்து விஜயாலய சோழ மன்னனின் மகனாகிய முதலாம் ஆதித்த சோழன், சோழப் படையில் மார்த்தாண்ட நாயக்கராக போரிட்டார்.
போர் படு தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் போர்க்களத்தில் தனது மகனின் வீரத்தை பார்ப்பதற்காக தன் இரண்டு கால்கள் செயலிழந்த நிலையில் விஜயாலய சோழன் பல்லக்கில் வந்திருந்தார்.
இதனை அடுத்து போர்க்களத்தில் பல்லவ சோழப் படைகள் கிட்டத்தட்ட தோல்வியடைய கூடிய நிலைக்கு தள்ளப்பட்டவுடன் சரணடைந்து விடலாமா? என்று ஆலோசித்து வந்ததைப் பார்த்து கடுமையான கோபத்தில் விஜயாலயச் சோழன் அனலாக இருந்தான்.
இதனை அடுத்து இரண்டு சோழ வீரர்களின் தோள்களில் ஏறிக்கொண்டு வாளை சுழற்றி போரில் களம் இறங்கினார். இதை கண்ட சோழ படையினர் அவர்களுக்குள் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய உத்வேகத்தை கொண்டு மீண்டும் துணிந்து போராடி அந்தப் போரில் வெற்றி பெற்றார்கள்.
அதுமட்டுமல்லாமல் இவர்களுக்கு எதிராக போரிட்ட கங்க மன்னர் பிரதிவீபதி இந்த போரில் வீர மரணம் எய்தானார். இதனை அடுத்து இந்தப் போரில் முத்தரையர்களை வீழ்த்தி சோழர்கள் தஞ்சையை மீண்டும் தன் வசம் கொண்டு வந்தார்கள்.
என்னதான் இந்த போரில் பல்லவர்கள் வெற்றி பெற்றிருந்தாலும் அவர்கள் வலிமை குறைந்தவர்களாகவே இருந்தார்கள். இதனை அடுத்து வரகுண பாண்டியனை கொள்ளிடம் ஆற்றைக் கடந்து விரட்டி அடைத்த விஜயாலய சோழன் அவர்களின் மீன்கொடியோடு தொடர்ந்து ஓடினால் ஆபத்து ஏற்பட்டுவிடும் என்று கருதி மீன் கொடியை சுருட்டிக் கொண்டு வரகுண பாண்டியனை ஓடவிட்டதால் தான் இன்று மீன் சுருட்டி என்ற பெயரில் அந்த ஊர் அழைக்கப்படுகிறது.
இந்த திருப்புறம்பியம் போரில் சோழர்களுக்கும் முத்தரையர்களுக்கும் இடையே நடைபெற்ற மாபெரும் போரில் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் மரணம் அடைந்தனர். ரத்த ஆறு ஓடியது, அதிக அளவு ரத்தம் சிந்தப்பட்ட அந்தப் பகுதி உத்திரை என்று அழைக்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் போரில் தோல்வியடைந்து மரணம் அடைந்த பிரதிவீபதி மன்னருக்காக நடுகல் நடப்பட்டு பின்னாளில் அந்தப் பகுதியில் பகவதி அய்யனார் கோயிலை சோழர்களே கட்டினார்கள்.
ராஜராஜ சோழனின் தாத்தாவாகிய விஜயாலய சோழன் மீண்டும் சோழ சாம்ராஜ்யம் வீறு கொண்டு எழவதற்கு காரணமாக அமைந்தவர் இவர் மூலம் தான் ராஜராஜ சோழன் தஞ்சையை ஆள வழி ஏற்பட்டது என்று கூறலாம்.