• November 21, 2024

வ உ சிதம்பரம் பிள்ளை ! வெள்ளையனை வேரறுத்த வேங்கை !

 வ உ சிதம்பரம் பிள்ளை ! வெள்ளையனை வேரறுத்த வேங்கை !

வலியால் உயர்ந்த சிகரம் வஉசியே!
வல்லமை உணர்த்திய சிங்கம் வஉசியே!
வழிகளை உருவாக்கிய சிந்தனை வஉசியே!

பேராற்றலில் ஒளிர்ந்த பெரும் பேரொளியே!
பேரேட்டினை திறந்த பேராசிரயப் பெருந்தகையே!
பெரிதெனும் பெரிதான செல்வச் சீமானே!

நீதியரசர்களின் ஊழலை
உடைத்து சூளுரைத்து!
நீதிமானாய் நின்று வென்று
திகழ்ந்துரைத்து!
பொதுமறைக்கு அன்று எழுந்த புகழுரையே!

வெள்ளையனின் கொடும் கொள்ளை சூழ்ச்சியை!
தொல்லைகள் தந்தே சுட்டு வீழ்த்திய!
எல்லை இல்லா வீரத் தீப்பிழம்பே!

கப்பலை இயக்கிய ஒட்டப்பிடார கவிதையே!
சுயநலம் உடைத்து முளைத்த சரிதமே!
ஏந்திய சுதந்திர சுடர் தீபமே!

தொழிலாளர் துயர் துடைத்த தூய்மையே!
செழுமை நழுவிய ஏழ்மையின் கொடுமையிலே!

நாட்டிற்கு உழைத்த
சீர்மிகு மின்னலே!
சிறைவதையின் போதிலே
செக்கிழுத்தச் செம்மலே!

கப்பலோட்டிய தமிழனாய் போற்றினார் மாபொசியே!
தூத்துக்குடி துறைமுகம்
அமைத்த சுதேசியே!

பாரதி, சிவாவின் நட்பியல் இலக்கணமே!
இன்பத் தமிழ் பதித்திட்ட இலக்கியமே!
திலகரில் இணைந்த தியாகத் திலகமே!

கவிஞர் சென்

கவிஞர் சென்