Site icon Deep Talks Tamil

கொள்ளை கொள்ளும் வெள்ளை அழகம்மா நீ!

tamil moon kavithai

நிலவே!
நீ…
இரவின் மகளா?
இல்லை ஒளியின் அழகா?

உந்தன் வெளிச்சத்தில்
வெறுமையை மறந்தேன்.
வெளியுலகை வெறுத்து,
வேடிக்கையாய், வேறொரு
பூமிக்கு கொண்டு சென்றாய்.

உன் வெட்கத்தினால்,
விண்மீன்களும் சற்று விலகியது.
மின்னலாய் நாள்தோறும் வந்து – எந்தன்
மனத்தினை உருக வைத்தாய்!

மின்மினியாய் பறந்து – எங்கள்
சந்தோஷத்தை சிறகடித்து விட்டாய்!
ஓயாமல் ஓடும் வாழ்க்கையில்,
ஒய்யாரமாய் ஓர் குடும்பமாய்!!

அமர்ந்து பேச, உண்ண, உறங்க,
உன்னுள் களைப்பாற – காத்திருந்தோம்!
உந்தன் வருகையை எண்ணி ,
கொள்ளை கொள்ளும் வெள்ளை அழகம்மா நீ!

K. கார்த்திக்

செஞ்சிக் கோட்டை,
விழுப்புரம் மாவட்டம்.

Exit mobile version