வா இப்படி வாழலாம்!
கல்லையே கரைக்கும் நமது
பேச்சால் கரைப்போம்,
உன் தாய், தந்தை, அண்ணனை!
காத்திருப்போம்
கல்யாணம் செய்வோம்,
கண்ணாடி வீடு கட்டி
அண்ணாந்து நிலா பார்ப்போம்!
நாம் நிலா மூவர் மட்டும்
தினம்தோறும் விழித்திருப்போம்!
பைக்கில் பயணம் செய்து
தாஜ்மஹாலில் இளைப்பாறுவோம்!
விடுமுறைக்கு சுற்றுலா செல்வார்கள்,
நாம் உலகம் சுற்றிவிட்டு
விடுமுறைக்கு மட்டும் வீடு வருவோம்!
தப்பில்லாமல் சமையல் செய்ய,
சில மாதம் எடுத்துக்கொள்வோம்!
கதவு இல்லா வாசல் வைத்து,
வந்தவர்க்கெல்லாம் உணவளிப்போம்!
வாடி நிற்கும் அனைவருக்கும்
தேடிச்சென்று உதவி செய்வோம்!!
காலையில் இயற்கையோடு ஓட்டம் ஓடுவோம்,
மாலையில் கால்பந்து
ஆடுவோம்!
மழை பெய்தால் நனைந்துகொண்டே
காகிதக் கப்பல் விடுவோம்!
கை கோர்த்து கதைகள் பேசி
நெடுந்தூரம் நடந்து செல்வோம்!
உன் மடியில் படுத்து வானம் பார்க்கையில்
தியானத்தை மிஞ்சும் என் மனநிலை
வகிடு எடுத்த உன் தலைமுடியை நான் கோதுகையில்,
வருத்தம் எப்படி உனக்கு இருக்கும்!
மாமரத்தில்
மாம்பழம் பறிப்போம்!
பசும்பாலில் பால்கோவா செய்வோம்
வெங்காய பஜ்ஜி,
தேங்காய் சட்னி செய்வோம்!
நாம் சொர்க்கத்தை
தேட வேண்டாம்.
உன் மடியும்
என் தோளும்
சொர்க்கத்தை மிஞ்சும்
இடம் அல்லவா!
விண்ணை தாண்டும்
நமது காதலுக்கு
சின்னம் ஒன்று கட்டுவோம்!
கணவன் மனைவி ஆனாலும்
தோழியும் தோழனுமாய்
தொன்நூறை தண்டுவோம்.
திகட்டாத காதலால்
அனைவரையும் திகைக்க வைப்போம்!
தோல் சுருங்கிய வயதிலும்
தோளில் சாய்ந்து கதை பேசுவோம்!
நாம் கண்ட கனவுகளை நினைவாக்க
நம் காதலோடு சேர்ந்தே பயணிப்போம்!
இருக்கும்போதும் இருவரும் ஒன்றாக இருப்போம்!
இறக்கும்போதும் இருவரும் ஒன்றாக இறப்போம்!!
நம் காதலோடு…..
Arunbalaji Thangamani
56, Thopputheru, Kollidam
Mayiladuthurai dk,Tamilnadu