உன்னை நீ கேட்டுப்பார்!
மழையில்லாக் காட்டிடம் கேட்டுப்பார்
வறட்சியின் வலி தெரியும்!
பகையில்லா பிள்ளையிடம் கேட்டுப்பார்
அன்பின் மொழிப் புரியும்!
வீடில்லா விலங்கிடம் கேட்டுப்பார்
வாழ்வின் வேதனை விளங்கும்!
வாயில்லா பறவையிடம் கேட்டுப்பார்
காற்றின் மொழி புரியும்!
நீ உன்னையே கேட்டுப்பார்
நீ யாரென்று உனக்கே தெரியும்
உன் வலிமையும் புரியும்!