என் ஆருயிர் காதலே
என் கவிதையின் கவியே,
காதல் அழகே!
கதிரவன் கண் விழிக்கும் முன்
உன் கண் முன்னால் – உன்னைக் காண,
விழி மூடா விண்மீன்களாய் – வந்தேனடி!
என் வருகை உணராமல் உறங்கிய காலங்கள் பல,
உன்னை எழுப்ப முடியாமல் தவித்த நேரங்கள்,
நாட்களை விழுங்கியது.
அறிவில் மூத்தவள் நீ,
அதனால் ஏனோ!
அழகைக் கொண்டு, அழுகையை தருகிறாய்.
சந்தோக்ஷங்கள் சில தந்து,
சங்கடங்கள் பல தருவாய்!
சொல் ஒன்று சொல்லி, செயல் ஒன்று செய்கையில்,
என்னை உயிரோடு உருக்கினாய்!
அடி மேல் அடி விழுந்தும்,
அறிவில்லாமால் உன் அருகில்
ஆசையோடு வந்தேனடி!
விடைத்தெரியாமல், வெளிச்சம் இல்லாமல்,
வாழ்க்கை பயணத்தின் நடுவே !
நம்முள் உணர்வுகள் உருவெடுத்தன.
உறவுகள் மறந்து உன் அருகில்,
கால நேரம் பார்க்காமல்,
கண் மூடித்தனமாய் – காத்திருந்தேனடி!
உன் வருகை எண்ணி,
காயத்தை மட்டும் தந்து விட்டு சென்றாயே,
காதல் கவியே!
என் காதல் உணராமல்!!
K. கார்த்திக்
செஞ்சிக் கோட்டை,
விழுப்புரம் மாவட்டம்.