• December 3, 2024

துள்ளிக்குதித்த மனமே!

 துள்ளிக்குதித்த மனமே!

இரவில் பூத்த மல்லிகையை போல,
தேனில் மூழ்கிய வண்டைப் போல,
மழைத் தீண்டிய மயிலைப் போல,
சூரியனால் மலர்ந்த தாமரையைப் போல,
திருமாலைத் தரிசித்த ஆண்டாலைப் போல,

உன்னை கண்டபின் மானைப் போல
என் மனம் துள்ளிக் குதித்து ஓடியது!

– இரா. கார்த்திகா