தனி உலகத்தில் ஒருவனாய்!
உயிராகவும் உறவாகவும்
ஒட்டிக்கொண்டவளே!
இன்ப மழையில் என்னை பாதியில் விட்டு சென்றவளே!
எண்ணிய எண்ணங்களை நான் சொல்ல வந்தேன்.
பற்பல வண்ணங்களை காட்டி
என்னை தனி உலகத்தில் மிதக்க செய்தாய்…
தனி ஒருவனாய் நிற்க செய்தாய்….
உனக்காக நான் காத்து இருக்கிறேன்
நீ என்னை விட்டு சென்ற இடத்தில்!!!