• December 3, 2024

Tags :காதல்

கூடு கட்டி காதல் வெல்லும் தூக்கணாங்குருவி: நீங்கள் அறியாதவை

இயற்கையின் அற்புதங்களில் ஒன்றான தூக்கணாங்குருவி, தனது அழகிய கூடு கட்டும் திறமைக்காக அறியப்படுகிறது. ஆனால், இந்த சிறிய பறவையின் வாழ்க்கை முறை மற்றும் நடத்தைகள் பற்றி நாம் எவ்வளவு அறிந்திருக்கிறோம்? இந்த கட்டுரையில், தூக்கணாங்குருவியின் வியக்கத்தக்க உலகத்திற்குள் நுழைந்து, அதன் காதல் கதைகள், கூடு கட்டும் கலை, மற்றும் வாழ்க்கை முறை பற்றி விரிவாக அலசுவோம். தூக்கணாங்குருவி: ஒரு சுருக்கமான அறிமுகம் தூக்கணாங்குருவி, அறிவியல் பெயர் ‘பிளோசியஸ் பிலிப்பைனஸ்’, தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளில் காணப்படும் ஒரு […]Read More

விருப்பத்திற்கும் விலகலுக்குமான ஊசலாட்டங்கள்!

நினைவுகள் வற்றாத உன் கண்களில்நிறைந்திருப்பது எனக்கான நேசமா? நெருக்கம் உணர்ந்த பொழுதுகள்!நெருஞ்சி முள்ளான காலங்கள்!! விருப்பத்திற்கும் விலகலுக்குமானஉணர்வின் ஊசலாட்டங்கள்!!! வெப்பத்தணலாய்… நான்!வேட்கைக்கான அக்னிப்பிழம்பாய்…நீ! அகலாத நினைவுகளின்கொழுந்திட்ட தீயாக…நான்!! என் சுவாசித்தலின்சுடராய்…நீ!!விலகாத…விலக்காத நின்நுதல்; சுட்டெரிக்கும் சூரியன்!கானலான நம் நேசங்கள்;குளிர் நிலவு!! நித்தம் நெருடிடும் என் மனதின்நிஜம் நீ என்பதை அறிவிப்பாயா?Read More

வா காதல் பெருமழையில் நனையலாம்!

மோனத்தின் வலிமைமெல்லிசையின் இனிமைஆன்மாவின் அடியாழத்தில்பேரொலியை எழுப்புகிறது! உயிரளவான என் நேசிப்பை;வாழ்தலுக்கான இருத்தலை;தொலைதூரம் சென்று தேடவில்லை… !களிப்பூட்டும் உன்குரலின்;மாயாஜாலத்தில் வாழ்கிறேன்!! பருகிப் தீர்ந்துவிடநினைக்கும் வாழ்க்கையில்,தீராத காதலைநினைவில் நிறுத்திவிடும்மாயவித்தைக்காரனே!!! இன்று நான்அருகில் வர நினைத்தாலும்சூழலின் கைதியாய்எட்டவே நிற்கிறாய்….!அதனாலென்ன…? மனங்களின் இடைவெளியைத்தகர்த்து நெருக்கிஇணைத்துவிட்ட இதயங்களுக்குதூரமும் தூறல்போலத்தான்வா காதல் பெருமழையில் நனையலாம்!!Read More

நீயே என் ஓளடதம்!!

எனக்கான உன் நினைவுகள்;வேதாளம் போல முதுகு மீதேறிஅமர்ந்து இறங்க மறுக்கின்றன…! நினைத்து புதைந்து போவதற்கானவரிகள்… எழுத்துக்கள்,லாவகமாக விரல் பிடித்துமார்பின் மீது தலை வைத்துசில்லென்ற ஸ்பரிசம் தொடுக்கின்றன…!! கண்ணீர் துளிகள்…பெருமூச்சுகள்,வாழாத வாழ்க்கையின் தேடல்கள்;யாருமற்ற தனிமையின் உணர்வுகள்;எல்லாவற்றிலும் எனதாகிப்போனவனேதூரத்தில் நின்று ஏன்வேடிக்கை பார்க்கிறாய்…?! என் பொழுதுகளைஆக்கிரமித்துக் கொள்ளும்,மறந்திருந்த…மறைந்திருந்தஉணர்வின் நினைவுகளைதட்டி எழுப்பும்… நீநீயே என் ஓளடதம்!!!Read More

என் ஆருயிர் காதலே

என் கவிதையின் கவியே,காதல் அழகே!கதிரவன் கண் விழிக்கும் முன்உன் கண் முன்னால் – உன்னைக் காண,விழி மூடா விண்மீன்களாய் – வந்தேனடி! என் வருகை உணராமல் உறங்கிய காலங்கள் பல,உன்னை எழுப்ப முடியாமல் தவித்த நேரங்கள்,நாட்களை விழுங்கியது.அறிவில் மூத்தவள் நீ,அதனால் ஏனோ!அழகைக் கொண்டு, அழுகையை தருகிறாய்.சந்தோக்ஷங்கள் சில தந்து,சங்கடங்கள் பல தருவாய்! சொல் ஒன்று சொல்லி, செயல் ஒன்று செய்கையில்,என்னை உயிரோடு உருக்கினாய்!அடி மேல் அடி விழுந்தும்,அறிவில்லாமால் உன் அருகில்ஆசையோடு வந்தேனடி! விடைத்தெரியாமல், வெளிச்சம் இல்லாமல்,வாழ்க்கை பயணத்தின் […]Read More

மனதின் தேடல்

இரவின் மடியில் உன்னை நினைத்தேன்என்னைத் தேடி கண்களை விழித்தேன்நிலவின் ஒளியில் பனி வீசும் பொழுதில்ஓர் நதியாய் நாளும் மிதந்தேன்மழைவீசி மலராட சிறு துளியாக என் கைகளில் சேர்ந்தாய்!Read More

மழைத்துளிகளின் நடுவே!

கட்டி இழுத்திடும்,காற்றினில் கரையாமல்…மின்சாரமாய் தாக்கும்,மின்னலில் மிரளாமல்…இருதயமுறைய இடிக்கும்,இடியினில் இடியாமல்…உயிரே…உறவாய்…உன்னைக் கண்டேனடி!மழைத்துளிகளின் நடுவே!! சனோஃபர் எழுத்தாளர்Read More

வா இப்படி வாழலாம்!

கல்லையே கரைக்கும் நமதுபேச்சால் கரைப்போம்,உன் தாய், தந்தை, அண்ணனை! காத்திருப்போம்கல்யாணம் செய்வோம்,கண்ணாடி வீடு கட்டிஅண்ணாந்து நிலா பார்ப்போம்! நாம் நிலா மூவர் மட்டும்தினம்தோறும் விழித்திருப்போம்! பைக்கில் பயணம் செய்துதாஜ்மஹாலில் இளைப்பாறுவோம்! விடுமுறைக்கு சுற்றுலா செல்வார்கள்,நாம் உலகம் சுற்றிவிட்டுவிடுமுறைக்கு மட்டும் வீடு வருவோம்! தப்பில்லாமல் சமையல் செய்ய,சில மாதம் எடுத்துக்கொள்வோம்! கதவு இல்லா வாசல் வைத்து,வந்தவர்க்கெல்லாம் உணவளிப்போம்!வாடி நிற்கும் அனைவருக்கும்தேடிச்சென்று உதவி செய்வோம்!! காலையில் இயற்கையோடு ஓட்டம் ஓடுவோம்,மாலையில் கால்பந்துஆடுவோம்! மழை பெய்தால் நனைந்துகொண்டேகாகிதக் கப்பல் விடுவோம்!கை கோர்த்து […]Read More

பசலை போக்கு

நீயில்லா பொழுதுகளில்தொட்டாச்சிணுங்கியாகிப் போகிறதுமனமும் நினைவும் வா… வந்தென்பசலைப் போக்குயுகங்களாகுமென்இரவுகளைசூல் கொள்பிரசவிகக் காத்திருக்கிறேன்வா… வந்தென்பசலை போக்குRead More

காதல் துளி!

தீண்டும் திங்களின் துகள்களில் ஒளிறவே,மீண்டும் பூமியில் மலர்ந்தேன்!ஓடும் நதியின் ஓசை கேட்கவே,கரையினில் மண்ணென சேர்ந்தேன்!!காலைக் கதிரவன் கதிரினில் திரவமாய்,தீயை மூட்டி தடம் ஒன்று செய்தேன்!!! விழிகளில் விழுந்த விதையெனமுளைத்தாய்…உணர்வினில் மதுரமாய் கலந்தெனைச் சாய்த்தாய்…! நீங்காமல் நீங்கியே சேராமல் சேர்வோம்;காதலின் உள்ளே மழையென பொழிவோம்! – இரா.கார்த்திகாRead More