• September 8, 2024

Tags :காதல் கவிதைகள்

பசலை போக்கு

நீயில்லா பொழுதுகளில்தொட்டாச்சிணுங்கியாகிப் போகிறதுமனமும் நினைவும் வா… வந்தென்பசலைப் போக்குயுகங்களாகுமென்இரவுகளைசூல் கொள்பிரசவிகக் காத்திருக்கிறேன்வா… வந்தென்பசலை போக்குRead More

என் கையில் தவழும் கைபேசியே!

என் கண்களைத் திறந்து,இந்த நாட்டின் நடப்பையும்அறிய பல விஷயங்களையும்எனக்குக் கற்றுக் கொடுத்தது நீதான்! என்னைக் கையால் ஆக்கியதும் நீதான்!காதல் ஒன்றால் மட்டும் தான்,ஒரு மனிதனை முழுமனிதனாக்கி முன்னேற்றவும் அழிக்கவும் முடியும்!! நீயே என் காதல் கைபேசியே ! – இரா. கார்த்திகாRead More

விடைதேடி உயிர்வாழும் ஜீவன்!

கனவே நீ கைகூட நான் என்ன செய்வேனோ!கண்ணீரும் கதைச் சொல்ல நீ என் கையில் சேர்வாயோ!! உடல் மட்டும் உயிர் வாழ, உன்னைத் தேடி திரிந்தேனே!கனவே நீ சூரியனா!உன் ஒளிக்காக தவிக்கின்றகண்மணி நானும் தாமரையா!! நம்பிக்கை ஒன்றைத் தவிரஎன்னிடமும் ஒன்றும் இல்லை..என் கையில் சேர்வாயோஎன்னைத் தாங்கிச் செல்வாய்யோ!! – இரா. கார்த்திகாRead More

காதல் துளி!

தீண்டும் திங்களின் துகள்களில் ஒளிறவே,மீண்டும் பூமியில் மலர்ந்தேன்!ஓடும் நதியின் ஓசை கேட்கவே,கரையினில் மண்ணென சேர்ந்தேன்!!காலைக் கதிரவன் கதிரினில் திரவமாய்,தீயை மூட்டி தடம் ஒன்று செய்தேன்!!! விழிகளில் விழுந்த விதையெனமுளைத்தாய்…உணர்வினில் மதுரமாய் கலந்தெனைச் சாய்த்தாய்…! நீங்காமல் நீங்கியே சேராமல் சேர்வோம்;காதலின் உள்ளே மழையென பொழிவோம்! – இரா.கார்த்திகாRead More

ஓரு பொறியாளனின் காதல்!

மாயவளே!உன்னை என்னுள் பதிவிறக்கம் செய்த நேரம்…என் செவியின் கடவுச்சொல் நீயனாய்!என் விழியின் காட்சிப்படம் நீயனாய்!! தூயவளே!உன்னை என் தரவுத்தளத்தினில் நிரப்பிய தருணம்…என் கருத்துகளின் மறையாக்கம் நீயனாய்!என் வார்த்தைகளின் மறைவிலக்கம் நீயனாய்!! என்னவளே!உன்னை என் உதிரத்தில் உள்ளீடு செய்த நேரம்…என் இதயத்தின் நிரல்பெயர்ப்பி நீயனாய்!என் உயிரின் பயன்பாட்டு நிரலர் நீயனாய்!! விரும்புகிறேன்…என் தீர்வுநெறி நீயாக…உன் மூலக்குறிமுறை நானாக…நம் காதல் மையச்செயலியாக!!! Translations for Tamil Words From This Kavithai Sanofar WriterRead More

துள்ளிக்குதித்த மனமே!

இரவில் பூத்த மல்லிகையை போல,தேனில் மூழ்கிய வண்டைப் போல,மழைத் தீண்டிய மயிலைப் போல,சூரியனால் மலர்ந்த தாமரையைப் போல,திருமாலைத் தரிசித்த ஆண்டாலைப் போல, உன்னை கண்டபின் மானைப் போலஎன் மனம் துள்ளிக் குதித்து ஓடியது! – இரா. கார்த்திகாRead More

அழியாத காதல்

மொழி பேசாத காலத்திலேமொழி பேசிய காதலடி! நிறம் அறிந்த காலத்திலேஇனம் அறியாத காதலடி! போர் கொண்ட காலத்திலேபகை நாட்டவர் போற்றிய காதலடி! விழியற்று போனாலும்மனம் பார்க்கும் காதலடி! செவியற்ற நிலையிலும்இசை கேட்கும் காதலடி! நீ சொல்ல மறுத்தாலும்உன் விழி சொல்லும் காதலடி! Sarath Kumar WriterRead More

காதல் பித்துப்பிடித்தவளாய் நான்!

கை அருகில் நீஇருந்தும் இல்லாமல் நான்…!!ஏதுவும் பிடிப்பதில்லைஅழைத்தாலும் செவிமடுக்கவில்லை;சொல்வதற்கு ஏதுமில்லை…,சற்றே பித்துப்பிடித்தவளாய் நான்…!!! உன் சுவாசக் காற்றில்ஊசலாடும் இதயம்…! ‘நீதான்’ வேண்டும்அடம்பிடிக்கும் மனது…!கொடுக்கவியலா தூரத்தில் நீ…!ஸ்பரிசம் உணரா தவிப்பில் நான்…!!பெரிதாக ஒன்றுமில்லை..சற்றே பித்துப்பிடித்தவளாய் நான்…!!! கொடியாய் படர்கிறாய்மலராய் மணக்கிறாய்ஆலகால விஷமானவனே…!என் காதலில் குரூரம்… நீசொல்வதற்கு ஏதுமில்லை..!!சற்றே பித்துப்பிடித்தவளாய் நான்…!!! உன் அருகாமைவேண்டி தவமிருக்கும் மனது;சாத்தியமாக்க வந்து சேர்….!இணைந்து மகிழப்போகும்வாழ்வின் நினைவுகளில்,வாழ்ந்து கொண்டிருக்கிறேன்…!!பெரிதாக ஒன்றுமில்லை…,சற்றே பித்துப்பிடித்தவளாய் நான்…!!!Read More

சிரிப்பால் சிறைப்பிடித்தாள்..

உன் முத்துப் பற்களால் நீ சிரிக்கஅதை பார்த்து என் மனம் பரிதவிக்க! உன் உதட்டோர புன்னகை என்னைக் கொல்லுதடி!அதை தொடர்ந்து என் கண்கள் செல்லுதடி!! என் மனம் கவர்ந்தவள் நீயடி..உன்னை பிரியும் நொடி என் மரணமடி!! – இரா. கார்த்திகாRead More

வேந்தனின் வர்ணனை

ரம்பா, ஊர்வசி, மேனகையிடமே மதிமயங்காத மன்னனடி,உன்னைக் கண்டதும் கண்கள் பூத்தது,அது உன் கூந்தல் செய்த மாயமடி!பூமியில் பிறந்த மேனகை நீயடி!! உன்னைக் கவர அந்த விஸ்வாமித்ரனை வீழ்க்கும் வேந்தன் நானடி..உன் கூந்தல் வாசம் என்னைக் கூப்பிடும் நேரம்மனதின் ஓரம் ஏதோ ஒரு பாரம்.. – இரா.கார்த்திக்காRead More