• November 23, 2024

ஜோதா பாய் அக்பரை திருமணம் செய்தாரா? – முகலாய வரலாறு என்ன சொல்கிறது…

 ஜோதா பாய் அக்பரை திருமணம் செய்தாரா? – முகலாய வரலாறு என்ன சொல்கிறது…

Akbar Jodha Bai

முகலாயப் பேரரசின் மிக முக்கிய மன்னராக திகழ்ந்தவர் அக்பர். இந்த அக்பரின் மனைவி ஜோதா பாய் என்பது உண்மையா? அல்லது போர்ச்சுகீசிய பெண்ணா? என்பது பற்றி பல விதமான கருத்துக்களும் வரலாற்று ஆசிரியர்களின் மத்தியில் நிலவி வருகிறது.

இந்த சூழ்நிலையில் ஜோதா பாய் என்பவர் அக்பரின் மனைவி தான் என்று சில வரலாற்று ஆய்வாளர்களும்.. இல்லை இவர் ஜஹாங்கீர் மனைவி என்று வேறு சில ஆய்வாளர்களும் கூறிவரக்கூடிய நிலையில் இதன் உண்மை என்ன? என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

Akbar Jodha Bai
Akbar Jodha Bai

சர்ச்சைக்குரிய உரிய பெண்ணாக திகழும் ஜோதா பாய் அக்பரின் மனைவி இல்லை இவரது மகன் ஜஹாங்கீரின் மனைவி என்றும் முரண்பட்ட கருத்துக்கள் இன்று வரை நிலவி வருகிறது. அக்பர் ஒரு ராஜபுத்திர இளவரசியை மணந்தார். அவள் பெயர் தான் ஜோதா பாய் என்ற குறிப்புகள் எந்த ஒரு வரலாற்று நிகழ்விலும் சுட்டிக் காட்டப்படவில்லை.

எனினும் சிலர் அக்பரின் சுயசரிதை நூலான அக்பர் நாமா, இவர் ராஜ்பூர் இளவரசியை மணந்ததாக கூறுகிறது. ஆனால் அந்த புத்தகத்தில் அந்த இளவரசியின் பெயர் ஜோதா பாய் என்று குறிப்பிடப்படவில்லை.

இந்த சர்ச்சையில் அக்பர் அமேரின் ஆட்சியாளரான ராஜா பிகாரி மாலின் மூத்த மகள் இளவரசி ஹீரா குன்வாரியை மணந்தார்.அவள் தான் ஜஹாங்கீரை பெற்றெடுத்த பிறகு அக்பர் ஹீரா மரியம் உஸ் ஜமானி என்ற பட்டம் பெற்றார்.

Akbar Jodha Bai
Akbar Jodha Bai

ஜோதா பாய் என்பது ஜோத்பூர் பெண்மணி என்ற பொருள் படும் என கூறலாம். மேலும் 1970 ஆம் ஆண்டு ராஜஸ்தானின் புத்தக ஆசிரியரான வில்லியம் குரூக் அன்னல்ஸ் அண்ட் ஆண்டிக்விட்டிஸ் என்ற நூலில் இது பற்றி விளக்கி இருக்கிறார். இதில் ராஜ்புத் இளவரசியான இவர் ஜோத்பூர் ஆட்சியாளரான ராஜா உதவி செஞ்சின் மகள். இவர் மற்றொரு ராஜபுத்திர இளவரசி ஜஹாங்கீரை மணந்தார், அக்பருடன் அல்ல என்ற கருத்தை தெரிவிக்கிறது.

இன்னும் ஒரு சில வரலாற்று ஆய்வாளர்கள் முகலாயப் பேரரசர் அக்பரை மணந்த ராஜபுத்திர இளவரசி ஜோதா பாய் என நம்புகிறார்கள்.டோனா மரியா மஸ்கரென்ஹால் என்ற போஸ்ட் பேசிய பெண்ணாக இருக்கலாம் என்ற கருத்து போஸ்ட் பேசிய இந்தியா மற்றும் முகலாய உறவுகள் 1510 மற்றும் 1735 என்ற புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது.

Akbar Jodha Bai
Akbar Jodha Bai

டோனா மரியா மஸ்கரென்ஹால் அக்பரின் நீதிமன்றத்திற்கு வந்தபோது அக்பர் அவரை காதலித்தார். 18 வயது ஆன அக்பர் 17 வயதான இவரை அக்பர் காதலித்த மேலும் இவரது சகோதரியான ஜூலியானவை அரண்மனையிலேயே தங்க வைத்துக் கொண்டார். இந்த கருத்து பனாஜியில் புத்தக வெளியீட்டு விழாவின் ஓரத்தில் கொரியா ஐஏஎன்எஸ் இடம் கூறினார்.

அந்த வகையில் ஜோதா பாய் உண்மையில் அக்பரின் மனைவியா? என்ற புதிர் இதுவரை விடுவிக்க முடியாத ஒன்றாகவே உள்ளது. ஏனெனில் அதற்கான தகுந்த ஆதாரங்களோ, தடயங்களோ கிடைத்துவிடாத நிலையில் அதை ஓர் கற்பனை கதாபாத்திரமாக தான் கூற வேண்டும்.

உங்களுக்கும் இந்த கருத்தில் ஏதாவது புதுமையான விஷயங்கள் தெரிந்திருந்தால் அவற்றை எங்களோடு தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.