உதயகிரி கோட்டை போர்த்துக்கீசிய வீரரால் கட்டப்பட்டதா? – வரலாறு சொல்லும் உண்மை என்ன?
தமிழக வரலாற்றைப் பொறுத்தவரை பலவிதமான கோட்டை கொத்தளங்களை கட்டி சீரான முறையில் மூவேந்தர்களோடு மற்றவர்களும் ஆட்சி செய்து இருக்கிறார்கள். மேலும் அவர்கள் கட்டிய ஒவ்வொரு கோட்டைக்கு ஒவ்வொரு தனி சிறப்புகள் உள்ளது.
அந்த வரிசையில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் ஆளப்பட்ட தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம் தாலுகாவில் அமைந்துள்ள உதயகிரி எனும் உதகையில் சோழ மன்னர்கள் சிறப்பான முறையில் ஆட்சி செய்த போது முதலாம் இராசராசன் மற்றும் சோழர்களுக்கும் சேரர்களுக்கும் ஒரு மாபெரும் யுத்தம் நடந்தது என கூறலாம்.
இந்தக் கடுமையான யுத்தத்தில் சோழர்கள் உதகையை கொள்ளை அடுத்து பல ஆயிரக்கணக்கான தங்கம் மற்றும் யானைகளுடன் தஞ்சையில் இருக்கும் தங்களது கோட்டைக்கு திரும்பினார்கள்.
எப்போது சேர சாம்ராஜ்யம் காந்தளூர் சாலையை கைப்பற்றியதோ, அப்போது இருந்தே சோழர்களுக்கும், சேரர்களுக்கும் இடையே போர் துவங்கி விட்டது என கூறலாம். இதனை சோழர் கால கல்வெட்டு காந்தளூர் சாலை கலமரத்தருளிய ஸ்ரீ ராஜ ராஜ தேவன் பற்றிய வார்த்தைகளை கொண்டு அறிந்து கொள்ளலாம்.
இதில் சேர மன்னரான ராஜராஜன் வெற்றி பெற்ற விஷயமும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இன்றைய கேரளாவில் விளிஞ்சம் துறைமுகத்திற்கு அருகில் தான் இந்த காந்தளூர் சாலை இருந்ததாகவும், கலாம் என்றால் பாய்மரக் கப்பல்கள் என்று சிலர் வரலாற்று ஆய்வாளர்கள் தங்களது கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.
சேரனுக்கும், சோழர்களுக்கும் இடையே நடந்த போரில் மிகப்பெரிய கோட்டைகளால் சூழப்பட்ட அரண்மனைகள் வீடுகள் பெரிய நகரங்களை சோழர் இராணுவம் இடித்து நகரத்தை தீர்க்கிறையாக்கியது.
இங்கு இருக்கக்கூடிய உதயகிரி கோட்டையைப் பற்றி பல மர்ம கதைகள் நிலவி வருகிறது. இந்த கோட்டைகளை சேர, சோழர்கள் கட்டினார்களா? அல்லது வேறு யார் இதை கட்டினால் என்ற மர்மம் என்று வரை தொடர்கதையாக உள்ளது.
இந்த மர்மத்தை விடுவிக்க கூடிய வகையில் போர்ச்சுகீசிய வீரரான யூஸ்டாசியஸ் டி லானாய் என்பவரால் கட்டப்பட்ட 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உதயகிரி கோட்டை பின்னாளில் திருவிதாங்கூர் ராணுவத்தின் வசமானது.
இப்போது உங்களுக்கு தெளிவாக புரிந்திருக்கும் உதயகிரி கோட்டையானது போர்த்துக்கீசியர்களால் கட்டப்பட்டது. இந்த கோட்டையைப் பற்றிய விஷயங்கள் உங்களுக்கும் தெரிந்திருக்கலாம் அப்படி தெரிந்திருந்தால் நீங்கள் அவற்றை பற்றி எங்களோடு கட்டாயம் பகிந்து கொள்ளுங்கள்.