• December 21, 2024

“மறுபிறவி யாருக்கு ஏற்படுவதில்லை..!” – சாஸ்திரம் சொல்வது என்ன?.

 “மறுபிறவி யாருக்கு ஏற்படுவதில்லை..!” – சாஸ்திரம் சொல்வது என்ன?.

reincarnation

இறப்பு என்பது எப்படி இயற்கையில் ஒரு நியதையோ, அது போலவே இறப்பு என்பதும் இயற்கையால் அழிக்கப்பட முடியாத ஒரு தீர்ப்புதான். அப்படி பிறப்பு, இறப்பு இந்த இரண்டுக்கும் மத்தியில் மறுபிறவி என்று ஒன்று உள்ளதா?.

அப்படி அந்த மறு பிறவி இருந்தால் மறுபிறவி எடுக்க முடியாத நபர்கள் யார்? யார்? எதனால் என்பது பற்றி விரிவாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

மரணத்தோடு ஒரு மனிதனின் வாழ்க்கை முற்றுப் பெறுவதில்லை. அது மேலும் மேலும் தொடர்கிறது. யாருக்கு மறுபிறவிகள் ஏற்படாது என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். 

reincarnation
reincarnation

இதற்கு சாஸ்திரங்கள், கருட புராணம், கடோபநிஷதம் போன்றவை மறுபிறவி பற்றிய சில செய்திகளை கூறியிருக்கிறது. அவற்றைப் பற்றி தெளிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

 பொதுவாக பூமியில் அனுபவிக்க வேண்டிய அனைத்தையும் அனுபவித்து முடித்த மனிதர்களுக்கு மீண்டும் மறுபிறவி ஏற்படுவதில்லை. இது கர்ம பூமி அதனால் தங்களின் கர்மத்தை அனுபவிக்கவே உயிர்கள் பிறப்பெடுக்கின்றன. 

அவற்றை முற்றிலுமாக அனுபவித்து விட்டு இனி அனுபவிக்க சஞ்சித கர்மா,பிராரப்த கர்மா,ஆகாம்ய கர்மா என எதுவும் இல்லாதவர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை. 

reincarnation
reincarnation

இவ்வுலக ஆசைகள் ஏதும் இல்லாமல் பற்றற்ற வாழ்க்கை வாழ்பவர்களுக்கும் யோகிகளுக்கும் மறுபிறவி இல்லை. சிறந்த தவத்துடன் பக்தியுடன் வாழ்ந்து இறைவன் ஒருவனையே தங்கள் பற்றுக் கோடாகக் கொண்டு தாங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் இறைவனுக்கே அர்ப்பணித்து வாழ்பவர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை. 

மனிதர்கள் செய்த பாவக் கணக்கும், புண்ணியக் கணக்கும் சரியாகி கழிக்க ஏதும் கர்மவினைகள் இல்லாதவருக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை. தன்னலம் கருதாது வாழ்ந்து மறைந்த மகான்களுக்கு மறுபிறவி கிடையாது. 

reincarnation
reincarnation

இறைவனின் கட்டளைப்படி மட்டுமே அவர்களது அவதாரம் நிகழும் பந்தம், பாசம் ,மோகம், அகந்தை காமம் போன்ற மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு இவ்வுலக வாழ்வை வெறுத்து இறைவனையே சதா தியானித்து அவன் நாமத்தையே எப்போதும் கூறி வரும் உண்மையான பக்தர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை. 

நமது சாஸ்திரங்கள் கூறும் முறைப்படி பரமாத்மாவில் இருந்து பிரிந்து வந்த ஜீவாத்மாக்கள் அனைவரும் ஏதாவது ஒரு காலத்தில் அந்தப் பரமாத்மாவோடு இணைந்து தான் ஆக வேண்டும். எனவே எந்த சமயத்திலும் ஒரு பிறவியிலும் நிகழலாம்.