“சனாதன தர்மம்” சர்ச்சைக்கு உள்ளான உதயநிதி..! – அப்படி என்னதான் சனாதனம் சொல்கிறது..
செப்டம்பர் 1ஆம் தேதி சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கள் இன்று தேசிய அளவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அது மட்டுமில்லாமல் அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்த இந்திய கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை இந்த பேச்சை ஏற்பட்டு விட்டதாக பிரபல தேசிய கட்சிகளை சார்ந்த தலைவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இதற்குக் காரணம் சனாதனம் பற்றி அவர் கூறிய கருத்துக்களும், அதை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று சொன்ன விதமும் இந்திய அளவில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அப்படிப்பட்ட சனாதன தர்மத்தின் பொருள் என்ன? என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
சனாதன தர்மம் என்பது ஒரு பழமையான பண்பாடு வாழ்வியல் நெறிமுறை என்று கூட கூறலாம். இதற்கும் இந்து மதத்திற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை. ஒவ்வொரு மக்களும் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை பண்புகளை மனிதர்களுக்கு எடுத்து இயம்புகிறது.
உதாரணமாக தாய், தந்தையை மதிக்க வேண்டும், இறைவனை மதிக்க வேண்டும், அனைவரிடமும் அன்பு செலுத்த வேண்டும் என்பது சனாதன தர்மத்தில் மிக முக்கியமாக கூறப்பட்டுள்ளது. இந்த சனாதன தர்மமானது திருக்குறள் உட்பட்ட பல்வேறு அறநெறி நூல்களில் காணப்படுகிறது.
மேலும் இந்த தர்மத்தின் நீட்சி தான் இந்து மதம் என்று மருதாச்சல அடிகள் குறிப்பிட்டு இருக்கிறார். இதில் ஜாதிகள் பிற்காலத்தில் வந்து சேர்ந்தது. இந்த தர்மத்தின் நெறிமுறையானது ஒவ்வொரு மதத்திலும் அவர்கள் எப்படி கடவுளை பார்க்கிறார்களோ, அதன் அடிப்படையில் எழுந்ததாக கூறுகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் சைவ பேரவையின் கலையரசி நடராஜன் இந்த சனாதனம் தமிழ் மக்கள் மற்றும் இந்தியாவில் உள்ள மக்களின் வாழ்வியல் முறையை எடுத்துக் கூறவில்லை என்று பேசுகிறார்.இது முழுக்க முழுக்க ஆரியர்களின் வாழ்வியலை சார்ந்ததாகவும், தமிழர்களுக்கும் இதற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று அவர் வாதாடுகிறார்.
இந்த தர்மத்தில் தான் வர்ணாசிரம முறைப்படி மக்களை பிரிப்பார்கள். எனவே இந்த தர்மம் வர்ணாசிர தர்மம், மனுதர்மம் என எந்த வகையில் கூறினாலும் அது மனித குலத்திற்கு பேராபத்தானது என அவர் கூறியிருக்கிறார்.
சனாதன தர்மம் என்பது நித்திய மதம், பண்டைய காலச்சட்டம், பல வருடங்களுக்கு முன் கொடுக்கப்பட்ட வேதம் மற்றும் புராணங்களில் மையங்களை கூறக்கூடியது. இந்து மதம், ஆரியமதம் என்று அழைக்கப்படுகிறது. இது தான் ஆரிய இனத்திற்கு கொடுக்கப்பட்ட முதல் மதம் என சில ஆய்வு நூல்கள் கூறுகிறது.
இந்த தர்மத்துக்கு அடிப்படையாக ஸ்ருத்தி உள்ளது. இது தான் நான்கு வேதங்களையும் கொண்டது. வேதம் என்றால் அறிவு என்று தான் பொருள். இவையே இந்து மதத்தின் அடிப்படை.
சனாதன தர்மம் என்பது ஒரு சமஸ்கிருத சொல். இது அனைவருக்கும் ஒரு பொதுவான கடமையை கற்றுத் தருகிறது. இந்த தர்மத்தின் பத்து வகைகள் காணப்படுகிறது. மேலும் இது ஒரு தனி மனிதன் முதல் ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இந்த தர்மமானது இந்து மதம் மட்டுமல்லாமல் பௌத்த, ஜெயின மதத்தவர்களும் பயன்படுத்தக்கூடிய சொல்லாக உள்ளது. 19 – ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு சனாதன தர்மம் என்பது மற்ற மதங்களில் இருந்து வேறுபட்டு இந்து மதத்தை குறிக்க ஆரம்பித்ததுள்ளது.