“தமிழ் இலக்கியங்களில் விருந்தோமல்..!” – வேறு மொழிகளில் இல்லாத அதிசயம்..
தமிழ் இலக்கியங்களில் ஆய்வு செய்து பார்க்கும் போது விருந்தோம்பல் என்ற விருந்தினரை உபசரிக்க கூடிய முறையானது, தொன்று தொற்று நம் பாரம்பரியத்தில் வழக்கத்தில் இருந்துள்ளது.
இதனை ஆங்கிலத்தில் சொல்லும்போது welcoming and entertaining guest என்று கூறலாம். உலகில் வேறு எந்த இலக்கியங்களிலும் காணப்படாத இந்த விருந்தோம்பல், தமிழ் இலக்கியங்களில் பல இடங்களில் பதிவு செய்யப்பட்டு இருப்பது தமிழர்களின் விருந்தோம்பலை உலகிற்கு பறைசாற்றி உள்ளது.
சங்க இலக்கியங்களில் விருந்தோம்பல் பற்றிய வரிகள் பல உள்ளது. இதில் தமிழின் தொன்மையான நூலான தொல்காப்பியத்தில் தொல்காப்பிய விருந்தோம்பலை பற்றி கூறியிருக்கிறார்.
“விருந்து புறந்தருதலும் சுற்றம் ஒம்பலும் பிறவும் அன்ன”
என்ற நூற்பா அடிகள் குறிப்பிடுகின்றன. இதன் மூலம் அந்த காலத்து மக்கள் விருந்தோம்பலை தங்கள் கடமைகளில் ஒன்றாக கருதி இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.
பரிமேல் அழகர் விருந்தினரை புறம் தருதல் என்ற வாக்கியத்தை கூறியதைக் கொண்டு நாம் உணவினை உண்ணக்கூடிய சமயத்தில் புதிதாக யார் வந்தாலும் அதை பகுத்து உண்ண வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் சங்க இலக்கியமான ஆற்றுப்படை இலக்கியங்களும் அரசனைக் காணச் செல்லும் பாணர் போன்றவர்களுக்கு அறிமுகம் இல்லாமலேயே உணவை கொடுத்து உபசரித்தல் இருந்துள்ளது என்பதை தங்களது பாடல் வரிகளில் மிக தெளிவான முறையில் விளக்கி இருக்கிறார்கள்.
அதுமட்டுமா? திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் விருந்தோம்பல் என்ற அதிகாரத்தை படைத்ததோடு எப்படி ஒருவரை உபசரிக்க வேண்டும் என்பதை மிகச் சிறப்பான முறையில் கூறியிருக்கிறார்.
இல் வாழ்க்கையின் நோக்கம் என்னும்: “விருந்தினன் ஒருவன் இல்லின் புறத்ததாக அமையத்தான் ஒரு பொருளை விரும்புதல் சாவா மருந்தெனினும் வேண்டாம்” – என கூறியிருக்கிறார்.
விருந்தோம்பல் நிலையில் சிறப்பாக இருப்பவர்களின் வீட்டில் திருமகள் இருப்பாள். அவர்கள் வீட்டில் இருக்கும் நிலம் தானாக விளையும். வானோர்கள் அவர்களுக்கு மகிழ்ந்து அனைத்தையும் அளிப்பார்கள் என்று திருவள்ளுவர் சிறப்பாக விருந்தோம்பல் பற்றி கூறியிருக்கிறார்.
விருந்துக்கு செல்லும் போது தகுதி உடையவர்களின் வீட்டுக்கு தான் செல்ல வேண்டும். ஏழை வீட்டுக்கு செல்வந்தர் விருந்துக்குச் செல்லக்கூடாது என்று என்ற விருந்தோம்பல் கருத்தை பழமொழி நானூறில் மிகச் சிறப்பாக கூறியிருக்கிறார்கள்.
“நல்கூர்ந்தவர்க்கு நனி பெரியர் ஆயினர்
செல்விருந்து ஆகிச் செலல் வேண்டா – ஒல்வது
இறந்து அவர் செய்யும் வருத்தம் -குருவி
குறுங்கு அறுப்பச் சோரும் குடர்”
மேலும் நான்மணிக்கடிகையில் அன்பில்லாதவர்கள் வீட்டில் உணவை உண்ணக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்கள். அது மட்டுமா, உணவே விருந்துக்கு சமைத்து இருந்தாலும் அதை எப்படி உன்ன வேண்டும் என்பதை ஆசாரக்கோவை உணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை மிகத் தெளிவாக கூறியிருக்கிறார்கள்.
அதில் உணவை உண்ணும் முன் நீராடி, கால் கழுவி வாயை துடைத்து உண்ணும் தட்டை சுற்றி நீர் தெளித்து உண்ண வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.
மேலும் உண்ணும்போது கிழக்கு நோக்கி அமர்ந்து ஆடாமல், அசையாமல் வேறு எதையும் பார்த்து உங்கள் பார்வையை வேறு திசையில் செலுத்தாமல் பேசாமல் உணவை சிந்தாமல் உண்ண வேண்டும்.
ஆனால் என்றோ நிலைமை மாறிவிட்டது. விருந்தோம்பல் பண்பு இன்று மங்க துவங்கி விட்டது என்று கூறலாம். மேலும் உணவினை நின்று கொண்டும், நடந்தபடியும் உண்ண வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இவை அனைத்தும் உங்கள் உடலுக்கும், உணர்வுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.