அட்ரா.. சக்க .. ரெண்டு பொண்டாட்டி கதையா?.. வளையாபதி ..! – அன்றே ஜாதி மாற்று திருமணம்..!
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாக திகழக்கூடிய வளையாபதி ஒரு சமண சமய நூல் என்பது பலருக்கும் தெரியாது. மேலும் இந்த நூலின் ஆசிரியர் யார் என்றும், இந்த நூல் இயற்றப்பட்ட ஆண்டு எது என்றும், கதையின் தலைவன் பெயர் என்ன என்பது பற்றிய விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை.
எனினும் இந்த நூலில் 72 பாடல்கள் தான் கிடைத்துள்ளது. அவற்றில் 66 பாடல்கள் 14 ஆம் நூற்றாண்டில் தோன்றி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
வளையாபதியில் கதை இது தான் என்று நாம் உறுதியாக கூற முடியாதவாறு உள்ளது. மேலும் இந்த நூல் 19ஆம் நூற்றாண்டுக்கு பின் எப்படியோ அழிந்துவிட்டது. இதன் பிரதியை திருவாவடுதுறை ஆதீனத்தில் பார்த்ததாக உ.வே சாமிநாதர் குறிப்பிட்டு இருக்கிறார்.
இதனை அடுத்து இந்த காப்பியத்தை பதிப்பிக்கும் நோக்கத்தோடு தேடிய போது அது எங்கும் கிடைக்கவில்லை என்று வருத்தத்தோடு அவர் சொல்லி இருப்பார்.
வளையாபதியை பொறுத்த வரை கதை இது தான் என்று நாம் உறுதியாக சொல்ல முடியாத நிலையில் வளையாபதி பற்றி முழு தகவல்களும் நமக்கு கிடைக்காததால் தான் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
எனினும் வளையாபதி கதை என்ன என்று பார்க்கும் போது நவகோடி நாராயணன் என்ற ஒரு வணிகன் ஒருவன் தன் குலத்தைச் சேர்ந்த பெண்ணையும், வேறு குலத்தைச் சேர்ந்த பெண்ணையும் திருமணம் செய்து கொள்கிறான்.
இதை எடுத்து அவனை அக்குலத்தில் இருந்து தள்ளி வைத்து விடுகிறார்கள். இதனால் கடுமையான சோகத்திற்கு உள்ளான அவன் வேறு வழி இன்றி அவன் திருமணம் செய்த வேறு குல பெண்ணை தள்ளி வைத்து விடுகிறான்.
அப்படி தன்னை திருமணம் செய்து கொண்ட நவகோடி நாராயணனின் வேறு குல பெண் தனக்கு மறுவாழ்வு வேண்டும் என வேண்டி காளி தேவியை வழிபடுகிறாள். இதனை அடுத்து காளி தேவியின் வரத்தால் அவளுக்கு அழகிய ஆண் குழந்தை பிறக்கிறது.
மேலும் அந்தக் குழந்தை வளர்ந்து பெரிதாகி புகார் நகர் வணிகர் அவையில் இருக்கும் நாராயணன் தான் தன் தந்தை என்று கூற, காளிதேவியையும் அதற்கு சாட்சி சொன்னதை அடுத்து இந்த குடும்பம் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ்கிறது.
இந்தக் கதையில் காளி தேவியை பற்றிய செய்திகள் உள்ளதால் இது எப்படி ஒரு சமண நூலாகும் என்ற கேள்விகளை பலரும் எழுப்பி வருகிறார்கள். மேலும் இந்த நூல் பற்றிய முழு விவரமும் கிடைக்காத நிலையில் இந்த கதை மட்டுமே தற்போது வரை வளையாபதியின் கதை கருவாக உள்ளது.