தமிழர்களின் சம்பிரதாயங்களில் மா இலை? – எதற்காக இந்த சூட்சுமம்..
தமிழர்கள் பெரும்பாலும் சமய விழாக்கள் மற்றும் திருமணம் முதலிய மங்களகரமான நிகழ்வுகளின் போது கட்டப்படும் மாவிலைத் தோரணங்கள் தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாகவும் கலாசார மிக்க அலங்காரப் பொருளாகவும் இந்த மாவிலை திகழ்கிறது.
பூஜைகள் செய்யும்போது கலசத்தின் வாயில் தேங்காய் வைப்பதற்கு முன் சில மாவிலைகளை இட்டு அதன் மீது தேங்காயை வைத்து தான் சுவாமியை ஆவாஹனம் செய்வார்கள். பூஜை முடிந்த பின்னர் கலசத்தில் உள்ள புனித நீர் பக்தர்கள் மீதும் மா விலை கொண்டு தெளிக்கப்படும்.
இப்படி விழாக்களில் முதன்மை பெறுவது மாவிலை .மாவிலையில் மகாலக்ஷ்மி வசிப்பதாக ஐதீகம் உள்ளது. விசேஷ நாட்கள் மட்டுமல்லாது அடிக்கடி தலைவாயிலில் மாவிலை தோரணம் கட்டுவது வாஸ்து குறைபாடுகளை தீர்க்க வல்லது என்று சில புராணங்கள் கூறுகிறது. .
மாவிலைத் தோரணம் கட்டுவதால் லஷ்மி கடாட்சம் ஏற்படும். அத்தோடு எதிர்மறை அதிர்வுகளை நீக்கக் கூடிய சக்தி இந்த மாவிளக்கு உண்டு .அது மட்டுமல்ல நச்சுக்காற்றை சுத்தப் படுத்தக் கூடிய ஆற்றல் இந்த மாவிலைக்கு உள்ளது.
தலை வாயிலில் இருக்கும் தேவதையின் காதில் எதிர்மறை வார்த்தைகள் விழாது தடுக்கும் ஆற்றல் இந்த மாவிலைத் தோரணத்திற்கு உண்டு. மாவிலை காய்ந்தாலும் அதனுடைய சக்தி மட்டும் குறையாது. அதனால் பிளாஸ்டிக்கில் உள்ள மாவிலைகளை வாங்கித்தந்த விடுவதை விட வாரத்துக்கு ஒருநாள் மாவிலையை தோரணமாகக் வீட்டின் வாயிலில் கட்டுவது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
மாவிலைக்கு இன்னொரு தனிச்சிறப்பு உண்டு மரத்திலிருந்து வெட்டப்பட்ட பின்னரும் கூட சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் சக்தி மாவிலைக்கு மட்டுமே உண்டு. இது அலங்காரத்துக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியது தான்.
இந்த மாவிலை என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
வீட்டில் உள்ளவர்கள் உடல் ஆரோக்கியம் நன்றாக அமைய இந்த மாவிலை தோரணங்கள் பயன்படுகிறது என்று நமது முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். மாவிலைகளை நம் வீட்டில் தோரணம் கட்டும் போது வீட்டில் நுழையும் துர்தேவதைகளை தடுக்கக்கூடிய ஆற்றல் இதற்குண்டு.
இதனை அறிவியல் ரீதியாக பார்த்தால் கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை அதிகளவு வெளியிடக் கூடிய தன்மை இந்த மாவிலைக்கு உண்டு. அதனால் தான் வாயிலுக்கு முன்பாக இதனை கட்டுகிறோம்.
அது மட்டுமல்ல மாவிலைகள் ஒரு நல்ல கிருமி நாசினியாகவும் உள்ளது. நம் வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை நீக்கவல்லது. இதற்கு 11 அல்லது 21 அல்லது 101 அல்லது 1001 என மாவிலை தோரணமாக கட்டி தொங்க விடுவது மிகவும் நல்லது.
இப்போது கூறுங்கள் நமது முன்னோர்கள் கூறிச் சென்றிருக்கும் சம்பிரதாயங்களில் எத்தகைய அறிவியல் கருத்துக்கள் இருக்கிறது என்று இப்போது புரிந்து இருக்கும்.