யார் இந்த கணங்கள்? – விரிவான ஆய்வு அலசல்..
இந்துத்துவாவின் படி கணங்கள் என்பது 18 இன குழுக்கள் என்று கூறலாம். இதற்கு காரணம் 18 வகையான கணங்கள் காணப்படுவது தான். இந்த கணங்களுக்கு அதிபதியாக பரமேஸ்வரன் மற்றும் கணபதி விளக்குகிறார்கள். எனவே தான் இவருக்கு கணபதி என்ற பெயர் உருவாகியுள்ளது.அதாவது கணங்களுக்கெல்லாம் அதிபதி என்பதைத்தான் இந்தப் பெயர் விளக்குகிறது.
கணங்களில் ஒன்றாக திகழும் பூதகணங்கள் சிவபெருமானின் கைலாய மலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவை சிவபெருமானின் பல்வேறு வடிவங்களோடு இணைந்து எப்போதும் சிவனோடு இருக்கும்.
இந்த பூதகணங்கள் இசைக்கருவிகளை வாசித்தும், நடனமாடியும், பலவகையான குறும்புகளை செய்தும், சிவபெருமானை மகிழ்விக்க கூடிய தன்மையை கொண்டிருக்கும். அத்தகைய பூதகனங்களின் சிற்பங்களை சிவ ஆலயங்களில் நீங்கள் காண முடியும்.
18 வகை கணங்களில் முதலில் சப்த ரிஷிகள், தேவர்கள், அரம்பையர்கள், அசுரர்கள், தனவார்கள், விஞ்சையர்கள் நாகர்கள், கருடர்கள், கங்கனர்கள், கிம்புருசர்கள் யட்சர்கள், வித்யாதாரர்கள், அரக்கர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், சாரணர்கள், பூதகணங்கள், பிசாசுகள் போன்றவற்றை கூறி இருக்கிறார்கள்.
இந்த கணங்களில் மிகவும் முக்கியமாக கருதப்படுபவர்கள் நந்தி, வீர பத்திரன் மற்றும் சண்டேஸ்வர் ஆவார்.
இதில் நந்தி எப்போதும் சிவபெருமான் சன்னதிக்கு முன்னாள் எப்போதும் சிவனை பார்த்தபடி அமர்ந்த நிலையில் காட்சி அளிப்பார். முதலில் நந்தியை வணங்கிய பிறகு நந்தியின் இரண்டு காதுகளுக்கும் மத்தியில் இருந்து சிவலிங்கத்தை தரிசிப்பது மிகவும் நல்லது. மேலும் நந்தியின் காதுகளில் நீங்கள் வந்த நோக்கத்தை கூறுவதின் மூலம் உங்களது கோரிக்கை சிவனை நேரடியாக சென்று அடையும்.
இந்த நந்தி தான் உலகில் சிவ போதனைகளை வழங்கி உள்ளது. மேலும் கணங்களின் தலைவராகவும் சிவனின் முதல் சீடராகவும் இருக்கிறார்.
புராணங்களின் கூற்றுப்படி பிருகி முதலில் அந்தகாரன் என்ற அரக்கனாக இருந்து பிறகு சிவனின் பக்தனாக மாறினார். சிவனின் படையில் கனா சேனைத் தளபதியாக சேர்க்கப்பட்டார்.
வீரபத்ரா என்பது சிவனின் வடிவமாகவே பார்க்கப்பட்டது. இதற்கு காரணம் சிவன் கோபம் கொண்டிருந்த சமயத்தில் தன் தலைமுடியின் ஒரு இழையைப் பிடிங்கி எறிகிறார். அதிலிருந்து மூர்க்கமான வீரபத்திரர் தோன்றி சதி தேவி தன்னைத்தானே எரித்துக்கொண்ட யாகத்தை அளித்தார். மேலும் தக்ஷனின் தலையை வெட்டி நெருப்பில் வீசினார்.
மனித வடிவில் இருக்கின்ற சண்டியின் அம்சம் தான் சண்டிகேஸ்வரர் சிவனுக்கும் சந்திக்கும் துர்கா தேவிக்கும் இடையே இருக்கின்ற தொடர்பை இது உணர்த்துகிறது.