இந்து மதத்தில் கூறப்படும் சாபங்கள்..! – அட இதில் இவ்வளவு வகைகள் இருக்க..
உலகில் மனித இனம் என்று தோன்றியதோ, அன்று முதல் அவர்களுக்குள் அவர்கள் செய்த தொழிலில் அடிப்படையில் பிரிவுகள் ஏற்பட்டது. அந்த வகையில் பிரபஞ்சம் தோன்றிய நாளிலிருந்து இந்து மதம் இருந்திருக்கலாம் என்ற நம்பிக்கையை தரக்கூடிய வகையில் இது கூறப்பட்டிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் எக்காலத்திற்கும் பொருந்தும் படி உள்ளது.
மேலும் இந்து மதத்தின் வளர்ச்சி தொடர்ந்து தான் பிற மதங்கள் அவற்றைத் தழுவியே ஏற்பட்டு உள்ளது என்றும், இந்து மதத்தில் கூறப்பட்டிருக்கக் கூடிய கருத்துக்களும் சிந்தனைகளும் மற்ற மதத்தை பிரதிபலிக்கிறது என்பதை அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மை உள்ளது.
அந்த வகையில் இன்று இந்த கட்டுரையில் இந்து மதத்தில் கூறப்பட்டிருக்க கூடிய சாபத்தை பற்றியும் அவற்றின் வகைகளைப் பற்றியும் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஒரு மனிதன் செய்யக்கூடிய தீமை அவனுக்கு சாபமாக மாறுகிறது. அந்த சாபத்தை பித்ரு சாபம், பெண் சாபம், பிரேத சாபம், பிரம்ம சாபம், சர்ப சாபம், கோ சாபம், பூமி சாபம், கங்கா சாபம், விருச்ச சாபம், தேவ சாபம், ரிஷி சாபம், முனி சாபம், குலதெய்வ சாபம் என பல வகைகளாக பிரித்திருக்கிறார்கள்.
மொத்தம் 13 வகை இருக்கும் இந்த ஆபத்தால் என்னென்ன நடக்கும் என்பதை இனி விரிவாக பார்க்கலாம்.
1. பெண் சாபம் ஒருவருக்கு ஏற்படும் போது அவர்களின் வம்சமே அழியக்கூடிய நிலை ஏற்படும். இதற்கு காரணம் பெண்களை ஏமாற்றுதல் உடன்பிறந்த சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பது, மனைவியைக் கைவிடுவது, போன்றவை. இந்த சாபத்திற்கு காரணமாக அமையும்.
2. பிரேத சாபம் என்பது ஒவ்வொரு மனிதனின் ஆயுளை குறைக்கும். இது ஏற்படுவதற்கு காரணம் இறந்தவரின் உடலை வைத்துக்கொண்டு அவரைப் பற்றி இழிவாக பேசுதல், இறந்தவரின் உடலை தாண்டி சென்று நடத்தல், இறந்தவருக்கு உரிய இறுதி கடமைகளை செய்யாமல் இருப்பது, இறந்தவர்களை மற்றவர்கள் பார்க்க அனுமதிக்காமல் இருப்பதால் ஏற்படுவது.
3. பிரம்ம சாபம் என்பது நமக்கு வித்தையை கற்றுக் கொடுத்த குருவை மறப்பது, அவர்களை தவறாக பேசுவது. இதன் மூலம் கற்றுக் கொடுத்த கல்வி கூட சில சமயங்களில் நமக்கு மறக்க நேரிடும்.
4. சர்ப சாபம் என்பது காலசர்ப்பதோஷம் ஏற்பட்டு திருமண தடைகளை ஏற்படுத்தும். இது தேவையில்லாமல் பாம்புகளை கொல்வதாலும் அதன் வாழ்விடங்களை அளிப்பதாலும் ஏற்படுவது.
5. பித்ரு சாபம் என்பது ஆண் குழந்தை பிறக்காமல் இருக்கும். இதனை தடுக்க நமது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ம காரியங்களை செய்வது நல்லது.
6. கோ சாபம் பசுவை வதைப்பது பசுவை கொல்வது, கன்றுடன் பசுவை பிரிப்பது, தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காமல் இருப்பதால் ஏற்படுவது. இதனை தடுக்க பசுவுக்கு உரிய உணவினை வழங்கலாம்.
7. பூமி சாபம் என்பது நரக வேதனையை ஏற்படுத்தும். பூமியை தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவது, அடுத்து வரும் பூமியை அபகரிப்பது பாத்திரத்தில் பூமியை உதைப்பது போன்றவற்றால் ஏற்படுகிறது.
8. கங்கா சாபம் இருந்தால் எவ்வளவு தோன்றினாலும் உங்களுக்கு நீர் கிடைக்காது. பலரும் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வது, ஓடும் நதியை அசுத்தம் செய்வது போன்றவற்றின் காரணத்தால் இந்த சாபம் ஏற்படுகிறது.
9. விருட்ச சாபம் மூலம் கடன் மற்றும் நோய் உண்டாகும். பச்சை மரத்தை வெட்டுவது கனி கொடுக்கும் மரத்தை அழிப்பது மரத்தை எரிப்பது போன்றவற்றால் இந்த சாபம் ஏற்படும்.
10. தேவ சாபத்தின் காரணத்தால் உறவுகள் பிரிந்து விடும். கடவுளின் பூஜையை பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இழிவாக பேசுவது போன்றவற்றால் இந்த சாபம் ஏற்படும்.
11. ரிஷி சாபம் வம்சத்தை அழிக்கும். உண்மையான பக்தர்களை அவமதிப்பது, ஆச்சாரியார்களை கேலி, கிண்டல், பேசுவது போன்றவற்றால் இந்த சாபம் ஏற்படும்.
12. முனி சாபம் செய்வினை கோளாறுகளை ஏற்படுத்தும். எல்லை தெய்வங்கள் காவல் தெய்வங்களுக்கு தர வேண்டிய மரியாதையை தராமல் பூஜை செய்யாமல் இருப்பதால் எந்த சாபம் ஏற்படும்.
13. குலதெய்வ சாபம் என்பது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்காமல் இருக்க வேண்டும். குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒருபோதும் மகிழ்ச்சி ஏற்படாது. துக்கம் நிலவும். எனவே ஆண்டுக்கு ஒரு முறையாவது குலதெய்வத்தை வழிபடுவது நல்லது.