சென்னையில் உள்ள பழமையான பாரம்பரிய இடங்கள்..! – நீங்களும் விசிட் செய்யுங்க..
யுனெஸ்கோ அறிவித்த உலக பாரம்பரிய தளங்கள் இந்தியாவில் மட்டும் 36 தளங்கள் இருக்கின்றன. இதன் அடிப்படையில் சென்னையில் நாம் அன்றாடம் கடந்து செல்லக்கூடிய பாரம்பரியமான இடங்களில் ஏழு முக்கியமான இடங்களின் பட்டியலைஉங்களுக்கான இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இதில் முதலாவதாக வருவது புனித ஜார்ஜ் கோட்டை இந்தியாவில் பிரித்தானியர்களால் கட்டப்பட்ட முதல் கோட்டையாக புனித ஜார்ஜ் கோட்டை கருதப்படுகிறது. பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் என்ற இரண்டு ஆங்கில அதிகாரிகளின் முயற்சியால் 1963 ஆம் ஆண்டு இந்தக் கோட்டையின் கட்டுமான பணி தொடங்கியது.
புனித ஜார்ஜ் நாளான ஏப்ரல் 23 ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்டதால் புனித ஜார்ஜ் கோட்டை என்று பெயரிடப்பட்டது. சுற்றுலா வரும் அனைவரும் விரும்பி பார்க்க வேண்டிய இடங்கள் ஒன்றுதான் இந்த புனித ஜார்ஜ் கோட்டை.
இரண்டாவதாக வருவது ரிப்பன் கட்டிடம். சென்னையில் இருக்கும் பழமையான கட்டிடங்கள் ஒன்றாக ரிப்பன் கட்டிடம் இருக்கிறது. லோகநாத முதலியார் என்பவரால் அக்காலத்திலேயே 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் 1909 ஆம் ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு 1913ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. உள்ளாட்சி நிர்வாகத்தில் பல சிரமங்களை செய்த ரிப்பன் பிரபுவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மூன்றாவதாக வருவது மெட்ராஸ் போர் கல்லறை. இரண்டாம் உலகப் போரில் இறந்தவர்களின் நினைவாக 1952 ஆம் ஆண்டு 2.75 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டதுதான் இந்த மெட்ராஸ் போர் கல்லறை .இது சென்னை நந்தம்பாக்கத்தில் அமைந்துள்ளது .இந்த கல்லறையில் இறந்தவர்களின் உடல் எதுவும் போடாமல் அவருடைய பெயர் அச்சடிக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது.
நான்காவதாக சென்னை சாந்தோம் தேவாலயம். சென்னையின் மிக முக்கியமான தேவாலயமாக கருதப்படும் சாந்தோம் தேவாலயம். பதினாறாம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்கள் கட்டப்பட்டது .பின்னர் 1893ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் விரிவுபடுத்தப்பட்டது. சாந்தோம் என்ற சொல்லுக்கு புனித தோமா என்று பொருள்.
ஐந்தாவதாக சென்னை உயர்நீதிமன்றம் .உலகின் இரண்டாவது மிகப்பெரிய நீதிமன்ற வளாகமாக சென்னை உயர் நீதிமன்ற வளாகம் கருதப்படுகிறது.
ஆறாவதாக சென்னை அரசு அருங்காட்சியகம். சென்னை எழும்பூர் பகுதியில் சென்னை அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. 16 புள்ளி 25 ஏக்கர் பரப்பளவில் 1851 ஆம் ஆண்டு இந்த அருங்காட்சியகம் நிறுவப்பட்டது.இங்கு தொல்லியல் நாணயவியல் ,சிற்பம் முதலிய உள்ளடங்கிய 46 காட்சிக் கூடங்கள் சென்னை அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளது.
ஏழாவதாக வருவது நேப்பியர் பாலம். புனித ஜார்ஜ் கோட்டையும் மெரீனா கடற்கரையும் இணைப்பதற்காக நேப்பியர் பாலம் அமைந்திருக்கிறது. சென்னை மாநகரின் மிகப் பழமையான பாலங்களில் ஒன்றாக இந்த பாலம் கருதப்படுகிறது. சென்னையில் உள்ள பெரும்பாலான கடந்து செல்லும் பாலமாகவும் நிறைய தமிழ் பட காட்சிகளிலும் இப்பாலம் இருக்கிறது.
நம் பாரம்பரியத்தை காக்கும் இது போன்ற கட்டிடங்களை பொது மக்களாகிய நாம் பாதுகாப்பது கடமை அவற்றை மிகவும் தூய்மையுடனும் சுகாதாரம் பாதுகாக்க வேண்டும்.