“தமிழ்நாட்டின் சிறப்புகள்” – அட இவ்வளவு இருக்கா?
உலகில் இன்று பேசப்படக்கூடிய மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி என்று தமிழ் மொழியை கூறலாம். அத்தகைய தமிழ் மொழியானது தமிழ்நாட்டில் பேசப்படுகின்ற மொழி என்பதால் தான், இதனை தமிழ் நாடு என்று அழைக்கிறார்கள். பாரம்பரியமான செம்மொழியாக தமிழ் மொழி விளங்குகிறது.
இந்திய தேசிய கொடியை தனது முத்திரையில் கொண்டிருக்கக் கூடிய மாநிலம் எது என்று கேட்டால் அதற்கு தமிழ்நாடு என்ற பதிலை நீங்கள் கூறலாம்.
தமிழ்நாட்டில் இருக்கும் மகாபலிபுரம், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், கங்கைகொண்ட சோழபுரம் கோயில், தாராசுரத்தில் உள்ள கோயில் தமிழ் மன்னர்களின் கட்டிடக்கலையை பலருக்கும் பறைசாற்றும் விதத்தில் அமைந்துள்ளது. மேலும் இந்த சின்னங்கள் அனைத்தும் யுனெஸ்கோவால் பாரம்பரிய நினைவுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக் காவல்துறையில் அதிக அளவு பெண்கள் பணிபுரிவதால் இந்திய அளவில் அதிக அளவு பெண்களைக் கொண்ட காவல் துறையாக தமிழ்நாட்டு காவல்துறை இந்தியாவிற்கு முன் உதாரணமாக விளங்குகிறது என கூறலாம்.
இந்திய பொருளாதாரத்தில் தமிழகத்திற்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவில் கண்டறியப்பட்ட மொத்த கல்வெட்டுகளில் 60% தமிழ்நாட்டில் உள்ளது.
வாழை, மஞ்சள், மலர்கள் மற்றும் மரவள்ளி கிழங்கு உற்பத்தியில் இந்தியாவிலேயே முதல் இடத்தை பிடித்திருக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. இங்கு தோன்றிய பத்தி இயக்கம் இந்தியாவின் மற்ற பகுதிகளில் பரவி தமிழகத்திற்கு பெரும் பெருமையும் சேர்த்து உள்ளது.
சூரிய மின்னாற்றல், காற்று மின்னாற்றல் உற்பத்தியில் தமிழகத்திற்கு இந்தியாவிலேயே முதல் இடம் கிடைத்துள்ளது. அது மட்டுமல்லாமல் வாகன ஏற்றுமதியில் மொத்தம் 60 சதவீதம் சென்னையில் நடைபெற்று வருவது மகிழ்ச்சிகரமான விஷயம் ஆகும்.
சென்னையில் இருக்கும் வண்டலூர் உயிரியல் பூங்கா இந்தியாவில் பரப்பளவில் மிகப்பெரியது. அதுமட்டுமல்லாமல் முதல் பொது வனவிலங்கு பூங்காவாக இது திகழ்கிறது.
அதுபோலவே சென்னையின் கோயம்பேடு பகுதியில் அமைந்திருக்கும் பேருந்து நிலையம் தான் ஆசியாவிலேயே மிகவும் பெரிய பேருந்து நிலையம் ஆகும். இந்தியாவிலேயே மிகவும் பழமையான ஷாப்பிங் மாலாக சென்னையில் இருக்கும் ஸ்பென்சர் பிளாசா விளங்குகிறது.
தமிழகத்தில் தான் இந்தியாவிற்கு அதிகளவு ஜனாதிபதிகள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். டாக்டர் ராதாகிருஷ்ணன், வெங்கட்ராமன், டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் போன்றவர்கள் தான் அவர்கள்.
இந்தியாவில் இருக்கும் பூக்கும் தாவரங்களில் 24 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ளது. அதுபோலவே ஊட்டியில் அமைந்துள்ள மிகப்பெரிய ரோஜா தோட்டத்தில் 22,000 வகையான பூக்கள் காணப்படுகிறது.