“தன்னைக் கொல்ல நினைத்த கணவனை கொன்ற பெண்” – அட அந்த கதை தானா.. குண்டலகேசியா?
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாக கருதப்படும் குண்டலகேசியின் கதையை கேட்டால் நீங்கள் அதிர்ந்து விடுவீர்கள். பௌத்த சமயத்தைச் சார்ந்த இந்த நூலை இயற்றியவர் நாதகுத்தனார்.
இந்த நூல் முழுமையாக கிடைக்கவில்லை. எனினும் இதன் கதையை மேற்கோள் நூல்களின் மூலம் மிக நன்றாக தெரிந்து கொள்ள முடிகிறது.
இக்கதையின் நாயகி பத்திரை என்ற பெண் இவள் காவிரிப்பூம்பட்டினம் பகுதியில் ஒரு செல்வந்தரின் மகளாக வளர்ந்து வந்தாள். இளம் வயதில் தாயை இழந்தவள் என்பதால் இவள் கேட்ட பொருட்களை எல்லாம் அந்த செல்வந்தர் உடனுக்கு உடனே வாங்கி கொடுத்து சீரும் சிறப்புமாக தன் மகளை வளர்த்தார்.
அந்த சமயத்தில் சோழ மன்னரின் காவலர்கள் ஒரு வழிப்பறித் திருடனை விலங்கிட்டு அழைத்துச் செல்லும் போது திடீர் என்று, அந்த திருடன் மீது பத்தரையின் பார்வை பட்ட உடனேயே காதல் பற்றி கொண்டது.
இதனை அடுத்து அந்த கள்வனை மணக்க வேண்டும் என்று அவள் உறுதி கொள்ள, பலரும் பலவிதமான அறிவுரைகளை கூறிய போதும் அதை ஏற்றுக் கொள்ளாமல் அவள் இருந்தாள்.
இதனை அடுத்து மகளின் விருப்பத்தை அப்பா அரசனிடம் கூற, அரசரும் சரி ஒரு பெண்ணின் ஆசையை பாழாக்க வேண்டாம் என்று அந்த கள்வனை விடுதலை செய்து விடுகிறார்.
அந்த கள்வனின் பெயர் சத்துவான் என்பதாகும். இதனை அடுத்து சத்துவானுடன் வீடு திரும்பிய பின் பத்தரையின் தந்தை அவர்களுக்கு யானையும், பொன்னையும், பொருளையும் கொடுத்து திருமணத்தை முடித்து வைக்கிறார்.
மேலும் திருமணம் முடிந்த கையோடு அவர்கள் இருவரும் காவேரி பூம்பட்டினத்தில் இல்லற வாழ்க்கையை இனிதே ஆரம்பித்தார்கள்.
நாட்கள் மெல்ல நகர்ந்து செல்கிறது. தன் கணவன் மீது தீராத அன்பைப் பொழிந்து வரும் அவள் திடீரென்று ஒரு நாள் தன் கணவனை நீங்கள் கள்வனாக இருந்தீர்கள் அல்லவா என்று விளையாட்டுக்கு கேட்க விதி விளையாட ஆரம்பித்தது.
பத்தரை விளையாட்டாக கேட்டதை வன்மமாக அவரது கணவன் மனதில் அப்படியே வைத்துக் கொண்டார். இதனை அடுத்து தன் மனைவியை எப்படியும் பழி தீர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் சதி திட்டத்தை தீட்ட ஆரம்பித்தான்.
அந்த வகையில் தனது மனைவி பத்தரையிடம் தான் தூக்கு தண்டனையிலிருந்து தப்பியதின் காரணமாக குலதெய்வ கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று நேர்ந்திருப்பதாகவும், அதற்கு இருவரும் செல்ல வேண்டும் என்று கூற மிகுந்த சந்தோஷத்தோடு இருவரும் குல தெய்வ கோயிலை நோக்கி செல்கிறார்கள்.
அங்கு சென்று தெய்வத்தை வழிபட்ட பிறகு பத்திரையிடம் கடினமான குரலில் உன் நகைகளை அனைத்தையும் என்னிடம் கழட்டி கொடு என்று அதிகாரத்தோடு, கேட்க பத்தரை மென்மையாக ஏன்? இப்படி என்னிடம் நடந்து கொள்கிறீர்கள் என்று வினவினாள்.
இதனை அடுத்து அவளின் கணவன் நீ என்னை கள்வன் என்று சொன்னாய் அல்லவா? இப்போது பார் கள்வன் என்ன செய்வான் என்று சிரித்த வண்ணம் பேச… பதறிப் போய் நகைகளை கொடுத்து பத்தரை சமயோகிதமாக தன்னை கொல்ல நினைத்த கணவரை கொல்ல திட்டமிட்டாள்.
இதனை அடுத்து அவள் தன் கணவரை மூன்று முறை சுற்றி வந்து வணங்க வேண்டும் என்று கூறி அதற்காக சந்திரப்பத்தை வழங்குமாறு அவனிடம் கேட்க, அவனும் சரி என்று சொல்ல இவள் இரண்டு முறை தன் கணவனை சுற்றி வந்த பின் கடைசி முறையாக சுற்றி வரும் போது தன் முழு பலத்தையும் பயன்படுத்தி அவரை அப்படியே தள்ளி விட, அவனும் மலைகள் இடையே உருண்டு விழந்து இறந்து விடுகிறான்.
இதை அடுத்து பலரும் தனக்கு அறிவுரை சொன்னதை ஏற்காமல் இவரை திருமணம் செய்ததை நினைத்து அழுது புலம்பியவள், மீண்டும் காவிரிப்பூம்பட்டினம் செல்ல விரும்பாமல் தனது எண்ணம் போல் நடந்து போகிறாள்.
அந்த சமயத்தில் தான் தனது தலை முடியை அவள் பனை மட்டையால் சிரைத்துக்கொண்டாள். இதனை அடுத்து கால் போன போக்கிலே இவர் நடந்து போகும்போது சில புத்த மத துறவிகளை சந்தித்து அவர்களின் போதனைகளை ஏற்று புத்த சமயத்தின் மீது பற்றுடன் விளங்கினார்.
மேலும் துறவறம் பூண்ட இவளுக்கு பின் வளர்ந்த முடி சுருள், சுருளாக வளர்ந்ததின் காரணத்தால் தான் இந்த கதைக்கு குண்டலகேசி என்ற பெயர் சூட்டப்பட்டது.
1 Comment
அருமை
Comments are closed.