• November 21, 2024

என்னது சமண மதம் தான் உருவ வழிபாட்டை கொண்டு வந்ததா? – புதைந்திருக்கும் உண்மைகள்..

 என்னது சமண மதம் தான் உருவ வழிபாட்டை கொண்டு வந்ததா? – புதைந்திருக்கும் உண்மைகள்..

samaṇa

பழந்தமிழர்கள் ஆரம்ப காலகட்டத்தில் நடு கற்களை மட்டும் தான் வழிபட்டு வந்திருக்கிறார்கள். இதனை அடுத்து இந்த தமிழ் மண்ணுக்குள் முதல் முதலாக உருவ வழிபாட்டை கொண்டு வந்து சேர்த்தது சமண மதம் என்று கூறலாம்.

திறந்த வெளிகளில் இருக்கும் நடு கற்களுக்கு படையல் இட்டு சூலமும், வேளும் குத்தி கிடாய் வெட்டு நடத்தி கடவுளை வணங்கி வந்த தமிழர்களுக்கு உருவ வழிபாட்டை அறிமுகப்படுத்தியவர்கள் சமண மதத்தவர்களே.

இந்த சமண மதத்தவர் அறிமுகப்படுத்திய கடவுளான அய்யனார் தான் முதலில் சிலையாக வடிக்கப்பட்டு வழிபட்ட முதல் கடவுள் என்று கூறலாம். சமணர்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் மண்பானை செய்யும் குயவர்கள் தான் இந்த அய்யனார் சிலைகளை முதலில் செய்தார்கள்.

samaṇa
samaṇa

எனவே தான் இன்றும் அய்யனார் கோயில்களில் குயவர்களே பூசாரிகளாக இருக்கிறார்கள். மேலும் சிலப்பதிகாரத்தில் அய்யனார் பற்றிய குறிப்புகள் வந்துள்ளது. அதுபோலவே கண்ணகி கோவிலின் கட்டுமான செய்தியையும் மிக சிறப்பாக சிலப்பதிகாரத்தில் விளக்கி இருக்கிறார்கள்.

காப்பிய காலத்திற்கு முன்பாக தமிழ் மண்ணில் உருவ வழிபாடு என்பது இருந்ததே இல்லை. இதனை அடுத்து தான் இந்த வழிபாடு முறை புகுத்தப்பட்டது. குறிப்பாக அய்யனார் வழிபாடு சமணர்களால் ஏற்பட்டது. இந்த அய்யனார் உருவம் கையில் ஒரு செங்கோல் அல்லது சாட்டையை பிடித்தபடி இருக்கும்.மேலும் குதிரையின் மேல் அமர்ந்தது போல காட்சி அளிக்கும்.

இந்த அய்யனாரை தான் சாத்தான், சாஸ்தா என்று அழைக்கிறார்கள். அய்யனாரின் இருபுறமும் இரு பெண்கள் அமர்ந்திருப்பார்கள். இவர்கள் அவரின் மனைவிகளான பூரணி மற்றும் பொற்கலை என்ற பெயரைக் கொண்டவர்கள்.

samaṇa
samaṇa

தமிழகத்தில் சமண சமயமானது அரச சமயமாக மாறிய சமயத்தில் அய்யனார் என்று அழைக்கப்படக்கூடிய சாஸ்தா வழிபாடு பரவியது. மேலும் நடு கலாலை வணங்கி வந்த இடங்கள் எல்லாம் அய்யனார் என்கிற சாஸ்தாவிற்கு கோயில்கள் கட்டப்பட்டது.

இதனை எதற்காக செய்தார்கள் தெரியுமா? நடுகல் வழிபாட்டில் படைக்கப்படும் படையல்களை தடுக்கவே எந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்றும் ஐயனாருக்கு இரத்தப் படைகள் வைப்பது என்பது கிடையாது. காவல் தெய்வம் என்று கூறப்படும் இவருக்கு சேவல், கிடாய் வெட்டும் கூடிய சமயத்தில் கூட கண்களை கட்டி விடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே ஜீவகாருண்யத்தை வலியுறுத்தக்கூடிய சமண மதமானது, அய்யனாரை படைத்து உயிர் பலியை ஏற்படுத்தாமல் இருக்க இப்படி செய்திருக்கலாம் என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

samaṇa
samaṇa

சமணம் தலைதோங்கிய பிறகு ஒவ்வொரு வழிபாட்டு முறையிலும் சமண மதத்தின் மகத்தான சுவடுகள் பதிந்து இருக்கும். உதாரணமாக சமண சமயத்தில் ஐயன், பூரணி, பொற்கலை அதுபோலவே சைவ மதத்தில் சிவன், கங்கா, கௌரி வைணவத்தை எடுத்துக் கொண்டால் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி கௌமாரத்தை எடுத்துக் கொண்டால் முருகன், வள்ளி, தெய்வானை, கிருஷ்ண மதத்தை எடுத்துக் கொண்டால் கிருஷ்ணன், பாமா, ருக்மணி விநாயகரை எடுத்துக் கொண்டால் விநாயகர், சித்தி, புத்தி இப்படி எல்லா கடவுள்களுக்கும் இரண்டு மனைவிகள் உள்ளார்கள்.

அதுபோலவே சமண மத துறவிகள் அணிந்து கொண்ட உடைகள் கூட சைவ, வைணவ, கௌமார மதங்களில் சிறு மாற்றங்களோடு இன்றும் நடைமுறையில் உள்ளது.

ஜீவகாருண்யத்தை வலியுறுத்தி சமணம் தழைக்க பாரம்பரிய வழிபாட்டு முறைகளை சமணர்கள் ஒழித்தார்கள் என்று தான் கூற வேண்டும்.