“சிந்து சமவெளி நாகரிகம் எல்லாம் என்ன மச்சி..! தமிழின் பெயரை உரக்கச் சொல்லும் பொருநை நாகரிகம்..!
உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாக இருக்கும் தமிழ் மொழி பண்ணெடும் காலம் முன்பே தோன்றியது,என்பது அனைவருக்கும் மிகவும் நன்றாகவே தெரியும்.
அதுபோலவே இந்த உலகத்திற்கு நாகரீகத்தை கற்றுக் கொடுத்தவன் தமிழனாகத்தான் இருக்க வேண்டும். அதை விடுத்து வெவ்வேறு நாகரிகங்களை குறித்து ஆய்வுகளையும் மேற்கொண்டு அவற்றைப் பற்றியே நாம் பெருமையாக பேசி வருகிறோம்.
அந்த வகையில் சிந்து சமவெளி நாகரிகத்தின் பெருமைகளை உணர்ந்த நமக்கு நம் இனத்தின் தொன்மை என்ன? என்பதை எடுத்து விளக்கக் கூடிய வகையிலே அண்மையில் நடந்திருக்கும் தொல்லியல் ஆய்வானது உள்ளது.
இந்தத் தொல்லியல் ஆய்வில் பொருநை நாகரிகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த நாகரிகம் குறித்த தொல்லியல் ஆய்வானது தூத்துக்குடிக்கு அருகில் இருக்கும் சிவகலையில் நடைபெற்றது.
இதனை அடுத்து இங்கு கண்டெடுக்கப்பட்ட பல்வேறு வகையான முதுமக்கள் தாழியில் பயன்படுத்தப்பட்ட உமியின் காலம் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று கண்டறியப்பட்டுள்ளதால் பொருநை கரை நாகரிகம், சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முந்தையது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
மேலும் இது நிமித்தமான மாநாடு ஒன்று சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதை ஒட்டி தமிழர்களின் கலாச்சாரத்தின் தாக்கம் என்ற தலைப்பில் தமிழ்நாடு தொல்லியல் துறை ஆலோசகர் தூத்துக்குடி மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்களின் தாழியில் இருந்த உமி சுமார் ஐந்து ஆண்டுகள் பழமையானது என்பதால் தாமிரபரணி கரை நாகரிகம் சிந்து சமவெளி நாகரிகத்தை விட பழமையானது என்ற கருத்தை தெரிவித்திருக்கிறார்.
அதுமட்டுமல்ல சிந்து சமவெளி நாகரிகத்தில் மக்களுக்கு இரும்பின் பயன்பாடு தெரியவில்லை. ஆனால் பொருநை நாகரிக மக்கள் 4500 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பில் ஆயுதங்களை செய்து வாழ்ந்துள்ளார்கள்.
எனவே பொருநை நாகரிகம் மிகவும் பழமையானது மட்டுமல்லாமல் சிறப்பானது என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் கூறி இருக்கிறார்கள்.
இதனை அடுத்து நான்காயிரத்தி ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே பொருநை நதிக்கரையில் வாழ்ந்து வந்த தமிழன் இரும்பு வாள் தயாரித்து பயன்படுத்துகிறான். அதுமட்டுமல்லாமல் இரும்பை எப்படி மண்ணிலிருந்து தனித்து பிரிக்க வேண்டும் என்ற தொழில்நுட்பத்தை அறிந்து வைத்ததினால் தான் அவனால் அந்த இரும்பை ஆயுதமாக மாற்ற முடிந்துள்ளது.
இதனை அடிப்படையாகக் கொண்டால் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பை பற்றிய அறிவு, தொழில்நுட்பம் இவை இரண்டும் தமிழர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால் ஆச்சரியத்தை அளிக்கிறது.
மேலும் உலக மக்களில் முதலாவதாக இரும்பை கண்டறிந்து அதை தமிழன் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற உண்மைச் செய்தியானது, உலக நாடுகளின் பார்வைக்கு விரைவில் வெளிவரும்.
எனவே இனிமேல் சிந்து சமவெளி நாகரிகத்தைப் பற்றி பேசுவதை விடுத்து நமது பொருநை நதி நாகரிகத்தைப் பற்றி பேசுவதோடு நின்றுவிடாமல், மேலும் பல ஆய்வுகளை மேற்கொள்ளும் போது உண்மை நிலை உலகிற்கு வெளிவரும்.