“ஆயிரம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருக்கும் பேபி சூரியன் (BABY SUN)..!” – மேஜிக் செய்த ஜேம்ஸ் வெப்..
ஜேம்ஸ் வெப் என்பது ஒரு தொலைநோக்கி என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த தொலைநோக்கியானது விண்வெளி ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. தற்போது இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி புதிதாகப் பிறந்த சூரியன் ஒன்றை கண்டுபிடித்துள்ளது.
இந்த சூரியன் பார்ப்பதற்கு நமது சூரியனைப் போலவே இருப்பதால் இதற்கு பேபி சன் என்ற பெயரை விஞ்ஞானிகள் சூட்டி இருக்கிறார்கள். மனிதனின் வானவியல் தேடலில் புதிதாக கண்டுபிடித்து இருக்கும் இந்த பேபி சன் விஞ்ஞானிகளின் மத்தியில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பூமியானது சூரிய குடும்பம், அண்டம், பால்வழி மண்டலம், விண்மீன், திரள்கள், பிரபஞ்சம் போன்றவற்றை உள் அடக்கியது. இவற்றை தற்போது ஆய்வு செய்வதில் மனித இனம் ஒரு புதிய சகாப்தத்தை எட்டிப் பிடித்துள்ளது என்று கூறலாம். இதற்கு காரணம் இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி தான்.
இந்தப் பிரபஞ்சமானது பெருவெடிப்பு எனும் BIG BANG என்ற நிகழ்வின் மூலம் தான் பிறந்துள்ளது. இதனை அடுத்து தான் சூரிய குடும்பம், பூமி, உயிரினங்கள், மனிதர்கள் என மெல்ல மெல்ல ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்த பெரு வெடிப்பு நிகழ்ந்த போது என்ன நடந்தது என்பதை பற்றி ஆய்வு செய்ய ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி உதவி செய்கிறது. இந்த ஆய்வில் நேற்று சில தகவல்கள் வந்து சேர்ந்ததை அடுத்து இந்த பிரபஞ்சத்துக்கு புதிதாக வந்திருக்கும் சூரியனைப் பற்றி ஜேம்ஸ் வெப் அழகான புகைப்படங்களை அனுப்பி உள்ளது.
இந்த புதிய சூரியன் உருவாகி ஒரு சில ஆயிரம் ஆண்டுகள் தான் ஆகி இருக்கும். நமது சூரியனுக்கு தற்போதைய வயது விஞ்ஞானிகளின் கணக்குப்படி 450 கோடி ஆண்டுகள் இருக்கலாம். அப்படி இருக்கையில் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவான இந்த சூரியன் விஞ்ஞானிகளின் மத்தியில் மகிழ்ச்சி ஏற்படுத்தி இருப்பதோடு, பேபி சன் என்று அதனை அழைக்கிறார்கள். இது சுமார் 1000 ஒளி ஆண்டுகளின் தொலைவில் அமைந்துள்ளது.
நமது சூரியனின் அளவைவிட 92 மடங்கு குறைவான அளவை கொண்டிருக்கும் இது இன்னும் சில கோடி ஆண்டுகளில் நமது சூரியனைப் போலவே வளரும் தன்மை கொண்டுள்ளது. இதில் கார்பன் மோனாக்சைடு, சிலிக்கான் மோலாக்ஸைடு மற்றும் நைட்ரஜன் மூலக்கூறுகள் அதிகளவு காணப்படுவதாக கண்டுபிடித்து உள்ளார்கள்.
அதுமட்டுமல்லாமல் தற்போது கண்டுபிடித்திருக்கும் இந்த பேபி சூரியன், ஒரு பைனரி நட்சத்திரம் என கூறியிருக்கிறார்கள். பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து விதமான நட்சத்திரங்களும் இரண்டாகத்தான் இருக்கும். எனவே தான் இதனை பைனரி என்று அழைக்கிறார்கள்.