Site icon Deep Talks Tamil

“தமிழ் கடவுள் முருகன்..!” – இவரின் சரவணபவ மந்திரத்தின் பொருள்…

Saravanabava

Saravanabava

சிவனாரிடம் இருந்து முருகன் தோன்றியதால் சிவமும், முருகரும் ஒன்றே என்ற தத்துவத்தை சைவ சித்தாந்தம் ஒரு கூறாகவே கூறுகிறது. மேலும் தென்னாட்டில் முருகப்பெருமான் கிரியா சக்தியான தெய்வானையை மணந்த ஞான சக்தியாகவும், வடநாட்டில் பிரம்மச்சாரியாக அதாவது கார்த்திகேயன் ஆக வழிபடப்படுகிறான். 

இந்த முருகபெருமான் சரவணப்பொய்கையில் உதித்த சண்முக கடவுளாக திகழ்கிறார். இவரை கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால் கார்த்திகேயன் என்று அழைக்கப்படுவதோடு, கார்த்திகை நட்சத்திரம் முருகப்பெருமானுக்கு உரிய நட்சத்திரமாக கூறப்படுகிறது.

Saravanabava
Saravanabava

மேலும் ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம், ஆடிக்கிருத்திகை போன்ற தினங்களில் முருகப்பெருமானை போற்றி சிறப்பித்துக் கொண்டாடுகிறோம். 

எனவே கார்த்திகை நட்சத்திரம் தோறும் விரதம் இருந்து, தை கிருத்திகை அன்று விரதம் முடிப்பவர்களுக்கு எம்பெருமான் முருகன் பயன் கிட்டும் என்பது வரலாறு. 

திருமுருகனின் ஷடாட்சர மந்திரம் சரவணபவன் என்பதாகும். சரவணபவன்  என்றால் கடல் சூழ்ந்த பொய்கையில் உதித்தவன் என்று பொருள். சரவணபவ மந்திரத்தின் தத்துவம் பின்வருமாறு விளக்கப்படுகிறது.

Unlimited High-Quality Audiobooks

Best Devotional Audiobooks

Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.

Listen Devotional

Crime Series

Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.

Discover Crime Series

Rajesh Kumar Collection

Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.

Listen Now
Listen Free on YouTube
Saravanabava
Saravanabava

இதில் ச என்ற எழுத்து செல்வத்தையும், ரா என்ற எழுத்து கல்வியும், வ என்ற எழுத்து முக்தியையும், ண என்ற எழுத்து பகைவர்களையும், ப என்ற எழுத்து காலம் கடந்த நிலையையும், வ என்ற  எழுத்து ஆரோக்கியத்தையும் குறிக்கிறது. 

முருகப்பெருமானின் எந்திரம் ஷட்கோண வடிவானது. சூரபத்மன் போன்ற அசுரர்களுக்கு வில் வித்தையைக் கற்றுக் கொடுத்த இடும்பன் பின் முருகனின் கருணையை பெறவேண்டி அகத்தியரின் ஆணைப்படி சிவகிரி, சக்திகிரி ஆகிய இரு மலைகளையும் பிரம்ம தண்டத்தின் இருபுறமும் பாம்புகளை உரியாக கட்டி கழுத்தில் தண்டாயுதபாணியாக முருகனை கொள்வதாகவே தன்னைப் போல் காவடி சுமந்து வரும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்று வரம் பெற்றான்.  

இதே மந்திரத்திற்கு இன்னொரு பொருளும் கூறலாம். சரவணபவ என்ற மந்திரத்தின் பொருள் என்னவென்றால் பொய்கையில் சரவணன் பிறந்தமையால் அந்த இடத்துக்கு சரவண பொய்கை என்று பெயர் வந்தது. 

Saravanabava
Saravanabava

சரவணன் என்றால் தர்ப்பை, பவ என்றால் தோன்றுதல் தர்ப்பைக் காட்டில் முருகன் தோன்றியதால் சரவணபவ என்ற பெயர் வந்தது. இதற்கு இன்னொரு பொருளும் உண்டு. ச – லட்சுமி கடாட்சம், ர-என்றால் சரஸ்வதி கடாச்சம், வ-என்றால் மோட்சம், ண-என்றால் சத்ரு ஜெயம், ப-என்றால் இந்துத்துவம், வ-என்றால் நோயற்ற வாழ்வு சரவணபவன் பொருள். இப்போது உங்களுக்கு சரவணபவா என்ற மந்திரத்தின் பொருள் நன்கு புரிந்து இருக்கும். புரிந்தவர்கள் கட்டாயம் சரவணனை வணங்கி வருவார்கள்.

இனி மேல் சரவண பவயனும் மந்திரத்தை தினமும் நீங்கள் உச்சரிக்கும் போது தீராத வினை தீரும். ஆராத நோயும் மாறும். உங்களுக்கு மனநிம்மதி கிடைக்க இந்த ஆறெழுத்தை தினமும் பாராயணம் செய்தால் போதும். சரவணன் இருக்கபயமேன். ஓம் சரவணபவ.

Exit mobile version