மிதவை படகால் கூடங்குளத்திற்கு ஆபத்தா..! – உண்மை நிலை என்ன?
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணு மின் நிலையத்தில் ஒன்று மற்றும் இரண்டாவது அணு உலைகள் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் இங்கு இருக்கும் மூன்று, நான்கு, ஐந்தாவது மற்றும் ஆறாவது அணு உலைகளை அமைக்கக்கூடிய பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த புதிய அணு உலைகளை கட்டுமானம் செய்வதற்கான தளவாடப் பொருட்கள் ரஷ்யாவில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்படுகிறது. அதற்காக பார்ஜ் (Barge) என்று அழைக்கப்படும் மிதவை படகுகளில் அந்த சரக்குகள் எற்றப்பட்டு சிறிய இழுவைப் படகுகள் மூலம் கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் படகு இறங்கு தளத்திற்கு கொண்டுவரப்படுகிறது.
இந்தப் பணியின் போது தான் படகு இறங்குதலத்தின் பக்கத்தில் மிதவை படகு வந்த போது இழுவை படகிற்கும், மிதவை படகுக்கும் இடையே உள்ள கயிறு அறுந்து மிதவைப் படகு கடல் அலைகளின் திசையில் அடித்துச் செல்லப்பட்டு பாறைகள் நிறைந்த கடற்கரைப் பகுதியில் தரைதட்டி நின்றது.
இதனை அடுத்து இந்த படகை மீட்பதற்கான முயற்சிகள் பல நாட்களாக நடந்து வரும் வேளையில் வங்கக்கடலின் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதோடு கடல் நீர்மட்டமும் தாழ்வாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து இரண்டு நீராவி என்ஜின்கள் ஏற்றப்பட்ட மிதவை படகு அணு மின் நிலைய வளாகத்தின் அருகே சுமார் 300 மீட்டர் தொலைவில் தரைதட்டி நிக்கக்கூடிய நிலையில், பாதுகாப்பாகவும் உள்ளதாக கூறியிருக்கிறார்கள்.
இதனை அடுத்து அணுசக்திக்கு எதிரான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வரும் சுப. உதயகுமார் தரை தட்டி நிக்கும் இந்த மிதவை படகில் இருக்கக்கூடிய பொருள் என்ன? இதனால் சுற்றுச்சூழலுக்கும், கடலுக்கும், மக்களுக்கும் ஆபத்து ஏற்படுமா? என்பது போன்ற கேள்விகளை கிளப்பி வருகிறார்.
அது மட்டுமல்லாமல் சுமார் 670 கோடி மதிப்புடைய நீராவி ஜெனரேட்டர்களை பாதுகாக்க முடியாத இவர்களால், எப்படி வருங்காலங்களில் அணு கழிவுகளை கையாள முடியும். இங்கிருக்கும் மக்களை எப்படி பாதுகாக்க முடியும் என்பது போன்ற கேள்விகளை சரமாரியாக முன்வைத்து இருக்கிறார்.
இதனை அடுத்து முன்பு எப்போதும் இல்லாதது விட ஐந்து மற்றும் ஆறாவது அணு உலகளுக்கான கட்டுமான செலவு செய்யப்பட்டு வருவதாகவும், அதைப்பற்றி மக்கள் மத்தியில் அணுசக்தி துறை தெளிவாக விளக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைத்திருக்கிறார்.