“கொரிய மொழியில் மண்டி கிடக்கும் தமிழ் வார்த்தைகள்..!” – எப்படி சென்றது..
கொரிய மொழியில் இந்த அளவு தமிழ் வார்த்தைகள் உள்ளதா? என்று ஆச்சிரியத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் இந்த இரண்டு பகுதிகளுக்கும் இடையே என்ன பந்தம் இருந்தது. எப்படி? இந்த சொற்கள் அங்கு சென்றது என்பது பற்றி ஒரு விரிவான அலசலை இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும் கொரியா மக்களின் இசை மற்றும் சினிமாவில் நமது பண்பாடு, மொழி, கலாச்சாரம், விருந்தோம்பல் போன்றவற்றின் நீட்சி சற்று பிரதிபலிக்கிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்தவர்களின் பின்னணி அதிக அளவு காணப்படுவதாக கூறலாம்.
இங்கு வாழக்கூடிய மக்கள் கிட்டத்தட்ட பார்த்து பில்லியனுக்கும் மேலான மக்கள் தங்களது பெயரின் கடைசியாக “கிம்” என்ற சொல்லை பயன்படுத்துகிறார்கள். இதற்கு காரணம் இந்த 10 பில்லியன் மக்களின் 4.5 பில்லியன் பேர் “கிம்ஹே” என்ற இனத்தை சேர்ந்தவர்கள்.
இந்த இனமானது சுறு அரசர் தோற்றுவித்த கரக் என்ற ராஜ வம்சத்தில் இருந்து வந்ததாக கருதப்படுகிறது. இதில் ஆச்சரியமான உண்மை என்னவென்றால் இந்த “கரக்” என்ற ராஜ வம்சத்தின் அரசி “ஹியோ ஹ்வாங் ஓக்” இந்தியாவைச் சேர்ந்தவர் என தி நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் கொரியா ஹிஸ்டரி என்ற இணையதளம் தகவலை தெரிவித்துள்ளது.
மேலும் இந்த இளவரசி ஆயுத என்ற இடத்தில் இருந்து 20 பேருடன் கொரியா சென்று இருக்கிறார். கொரியா வந்த இளவரசி அரசர் சுராவை திருமணம் செய்து கொண்ட பிறகு இவர்களுக்கு 12 குழந்தைகள் பிறந்துள்ளது. இதில் பார்த்து குழந்தைகளின் பெயருக்கு பின்னால் “கிம்” என்ற பெயரும் இரண்டு குழந்தைகளின் பெயருக்கு பின்னால் ஹியோ என்ற பெயரும் வைக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து இந்த இளவரசி இந்தியாவில் இருக்கும் அயோத்தியாவை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற வாதங்கள் ஒருபுறம் நடக்கும்போது, மறுபுறம் இவர் தென்னிந்திய பகுதியான கன்னியாகுமரியில் இருக்கும் அயுதா இடத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்தியாவின் வடக்கு மாகாணத்தில் இருக்கும் அயோத்தியாவிலிருந்து எந்த விதமான கப்பல் போக்குவரத்தும் பண்டைய காலத்தில் இல்லாததால் கன்னியாகுமரி பகுதியில் இருந்த கப்பல் போக்குவரத்து மூலம் தமிழகத்தைச் சேர்ந்த இவர் கொரியா சென்று இளவரசையாக மாறி திருமணம் முடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் கொரியாவில் பேசப்படும் மொழிகளில் கிட்டத்தட்ட 500 வார்த்தைகள் நம் தமிழ் மொழியோடு ஒத்துப் போகிறது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழில் நாம் பயன்படுத்தும் அம்மா, அப்பா, அண்ணி போன்ற வார்த்தைகள் கொரிய மொழியில் அப்படியே உள்ளது.