• November 22, 2024

தமிழ் இலக்கியத்தில் காவேரி..! – தமிழர்களின் நீர் மேலாண்மை..

 தமிழ் இலக்கியத்தில் காவேரி..! – தமிழர்களின் நீர் மேலாண்மை..

kaveri

இந்த வையம் செழித்து வாழ, மழை என்பது மிக முக்கியமான ஒன்று என்பதை திருவள்ளுவர் வான் சிறப்பு என்ற அதிகாரத்தில் மிக நேர்த்தியான முறையில் விளக்கி இருப்பார்.

 

அது மட்டுமல்லாமல் தமிழர்கள் நீரில் மேலாண்மையை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மிகச்சிறப்பான முறையில் கையாண்டு இருப்பதாக சங்க கால பாடல்களில் குறிப்புகள் அதிகளவு காணப்படுகிறது.

kaveri
kaveri

அதுமட்டுமல்லாமல் நீரின் நுட்பத்தை அறிந்து கொண்டு அந்த நீரை எடுத்துச் செல்லும் நதிகளையும் மிக சிறப்பான முறையில் கணித்திருந்த தமிழன், தமிழ்நாட்டை செழிக்க வைத்த காவிரியின் அழகையும் அவசியத்தையும் சங்க பாடல்களில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

 

அந்த வகையில் பட்டின பாலை நூலில் வரும் பாடல் வரிகளான

“வசையில் புகழ் வயங்கு வெண்மீன்,

திசைதிரிந்து செற்கேகினும்

தற்பாடிய களியுணவின்,

புட்டேம்பப் புயன்மாறி

வான் பொய்யினும் தான் பொய்யா,

மலைத்தலை இய கடற்காவிரி..

 

என்ற வரிகள் மூலம் வானமே மழையை தர மறுத்தாலும், நீரினை தேவையான அளவு தருகின்ற தன்மை காவிரிக்கு உள்ளது என்பதை மிக அழகான முறையில் கூறி இருக்கிறார்கள்.

 

மேலும் குடகு மலைகில் தோன்றும் இந்த காவேரி கடலில் கலப்பதற்கு முன்பு தேவையான நீர் முழுவதையும் தரக்கூடிய ஆற்றல் படைத்தது என்பதை விளக்கி இருக்கிறார்கள்.

kaveri
kaveri

இதுபோலவே புறநானூறு, பத்துப்பாட்டு போன்றவற்றில் காவிரியின் சிறப்புக்கள் மிகத் தெளிவான முறையில் கூறப்பட்டுள்ளது. காவிரியின் மகிமையால் தான் சோழ நாடு நெல் களஞ்சியமாக மாறியது என்பதை பொருநராற்றுப்படையில் 

 

“சாலி நெல்லினா சிறை கொள்வேலி காவேரிபுரக்கு நாடு கிழவோனே..

என்ற பாடல் விளக்குகிறது.

 

அதுமட்டுமல்லாமல் சிலப்பதிகார ஆசிரியர் காவிரியாறு வாழி காலம் வரை சோழ நாட்டிற்கு தன் வற்றாத வளஞ்சுரக்கும் ஈகையினை அழகுற மொழிந்துள்ளார்.

 

அதுமட்டுமல்லாமல் மற்றொரு பாடலில் 

 

“வாழி அவன் தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி

ஊழி உய்க்கும் தேருதவி ஒழியாய் வாழி காவேரி ..

 

என்று காவிரியின் வளத்தை மிகச் சிறப்பாக இளங்கோ அடிகள் கூறுகிறார்.

kaveri
kaveri

மேலும் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாக திகழும் மணிமேகலையின் ஆசிரியரான சீத்தலைச்சாத்தனார் காவிரி பற்றி கூறும் போது தண்தமிழ்ப்பாவாய் என்று கூறுகிறார்.

 

கம்பராயணத்தில் காவிரி நாட்டினை கழனி நாடு என்றே கம்பர் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் நதி என்றாலே அது காவிரி நதியை மட்டும் தான் குறிக்கும். அத்தகைய சிறப்புமிக்க காவிரி சங்க இலக்கியப் புலவர்களால் பெரிதளவு பேசப்பட்டுள்ளது. மேலும் இந்த காவேரி நதியை கம்பர் தெய்வ பொன்னி என்று கூட கூறியிருக்கிறார்.