“பசி போக்குபவன் ஒரு மருத்துவன்” – விவசாயி என புகழாரம் சூட்டிய சங்க இலக்கியம் எது தெரியுமா?
நாகரீகம் எவ்வளவு வளர்ந்து இருந்தாலும், நாசா வேறு கிரகங்களுக்கு மனிதர்களை அனுப்பி வந்தாலும் கணினியில் இருந்து அரிசியை டவுன்லோடு பண்ண முடியாது என்பதை கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் குறிப்பாக மனிதர்களுக்கு உணவை வழங்கக்கூடிய பணியை செய்யும் விவசாயிகளை பாராட்டாமல் இருக்க முடியாது.
மேலும் நவீன எந்திரங்களை கொண்டு நம்மால் விதைகளை விதைக்காமல் உணவை சுயமாக தர முடியுமா என்பதை யோசித்துப் பாருங்கள். இந்த உண்மை நிலையை புரிந்து தான் சங்க இலக்கியத்தில் பசித்தவர்க்கு உணவை தருபவன் தான் மருத்துவன் என்று கூறியிருக்கிறார்கள். இங்கு மருத்துவன் என்று கூறப்பட்டிருப்பது உணவினை உண்டாக்க தேவையான பொருட்களை உழவு செய்து தரும் விவசாயிகளே.
அது மட்டுமல்லாமல் திருவள்ளுவர் உழவு என்ற தலைப்பில் தனது கருத்துக்களை மிகச் சிறப்பான முறையில் பதிவிட்டு இருக்கிறார். குறிப்பாக சுழன்றும் ஏர் பின்னது உலகம் ஆதலால் உழுதும் உழவே தலை என்ற குறல் எவ்வளவு தொழில்கள் செய்தாலும் ஏர் தொழிலின் பின், தான் இந்த உலகமே நிற்கிறது என்பதை மிக அழகான முறையிலே கூறியிருக்கிறார்.
மேலும் பல தமிழர்கள் உண்டி கொடுத்தோர் ,உயிர் கொடுத்தோர் என்ற பழமொழியை கூறியிருக்கிறார்கள். உழவு செய்து மனிதனுக்கு உணவு கொடுக்கின்ற தொழில் மிகவும் அருமை வாய்ந்தது என்றுமே அழியாது என்று அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
தொழிலுக்கு வரி போட்டாலும், உழவுத் தொழிலுக்கு வரி போடக்கூடாது என்று சங்கப் புலவர்கள் தங்களது சங்க பாடல்களில் அவர்களின் கருத்தை கூறி இருக்கிறார்கள். இது தான் ஒவ்வொரு தமிழர்களது வீடுகளில் நடக்கும் மங்கள மற்றும் அமங்கல நிகழ்வுகளில் இந்த நெல்லுக்கு ஒரு மிக முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
சங்கப் புலவர்களில் பெரும்பாலோர் விவசாயம் சார்ந்த அறிவியல் நிறைந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் .எனவே தான் கம்பராமாயணத்தில் கூட கழிவுப்பொருட்களை பயனுள்ள வகையில் வேளாண்மைக்கு மாற்றாக்க வேண்டும் என்பதை அன்றே கூறியிருக்கிறார்கள்.
முட்டில் அட்டில் தொடங்கும் பாடல் வரிகளின் இடையே கழு நீர் என்ற ஒரு வார்த்தை வரும் இந்த வார்த்தையானது வீட்டுக்கு கழிவு நீரை வயலுக்கு விட்டு வளர்க்கலாம் என்று கம்பன் சொல்லி இருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் ஊழல் என்ற கருவியைப் பற்றி அகநானூறில் கூறி இருக்கிறார்கள். அவ்வையாரும் நீர் பாய்ச்சும் பற்றி நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடி என்ற பாடல்கள் மூலம் விளக்கி இருக்கிறார்.
இதன் மூலம் விவசாயத்தை செய்கின்றவர்களையும், விவசாய முறையையும் சங்க காலத்தில் தமிழர்கள் எப்படி பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.