என்னையா சொல்றீங்க.. வள்ளலார் சமஸ்கிருதம் படிக்க சொன்னாரா? – இங்கிலீஷ் படிக்க சொன்னாரா? – இவங்க அலப்பறை தாங்கல..
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை என்று ஜீவகாருண்யத்தை வலியுறுத்திய வள்ளலார் பற்றி உங்களுக்கு அதிகம் கூற வேண்டிய அவசியம் இல்லை. அண்மையில் இவரது 200 வது பிறந்தநாள் விழாவில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நமது பாரதப் பிரதமர் பேசியிருந்தார்.
இந்த பேச்சு தான் தற்போது வைரலாக மாறி உள்ளது. இவர் பேசும்போது வள்ளலாரை பற்றி மிக சிறப்பாக கூறியிருந்தார். மேலும் எல்லா உயிர்களிடமும் அக்கறை காட்டக்கூடிய தன்மையை நினைவு கூற வேண்டும் என்று ஜீவகாருண்யத்தை வலியுறுத்தி இருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பாடிய வள்ளல் பெருந்தகையில் வாழ்க்கை முறையை நாம் பின்பற்றி வாழ்வதின் மூலம் எண்ணற்ற நன்மையை அடைக்கலாம் என்று கூறிய அவர், பசியை போக்கியதில் வள்ளலாரின் பங்கு ஒரு மிகப்பெரிய ஆற்றல் நிறைந்தது என கூறியுள்ளார்.
ஒரு மனிதன் வெறும் வயிற்றோடு படுக்கைக்கு செல்வதை விட வேதனை படக்கூடிய வேறு விஷயங்கள் இந்த உலகத்தில் இல்லை என்று வள்ளல் பெருந்தகை கூறியதோடு பசித்தவர்களுக்கு உணவை பகிர்வது தர வேண்டும் என கூறியது இரக்க குணங்களில் உன்னதமானது என வள்ளலார் நம்பி இருக்கிறார்.
எனவே அவரது குறிக்கோளை இந்த அரசு உறுதி பூண்டு செயல்படுத்தி வருவதாகவும் கூறிய இவர், கோவிட் பெரும் தொற்று காலத்தில் சுமார் 800 கோடி பேருக்கு உணவு தானியங்களை வழங்கி நிவாரணம் கொடுத்ததை நினைவுபடுத்தி இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் நவீன பாடத்திட்டங்களில் வள்ளல் பெருந்தகையின் நம்பிக்கையை செயல்படுத்தும் வகையில் பாடத்திட்டம் இருக்கும் என கூறியதோடு மட்டுமல்லாமல் திருக்குறளை பிரபலப்படுத்த வள்ளலார் முயற்சி செய்திருக்கிறார் என கூறி இருக்கிறார்.
இப்போது இருக்கும் இந்த கல்விக் கொள்கையில் கட்டாயம் மாற்றத்தை கொண்டு வருவதின் மூலம் தான் இந்த காலத்துக்கு தக்கபடி இந்திய மாணவர்கள் வெளிநாட்டு மாணவர்களின் பாடத்திட்டங்களுக்கு ஈடு கொடுத்து அவர்களை விட ஒரு படி முன்னேறிச் செல்வார்கள் என்பதை உறுதி செய்து இருக்கிறார்.
அதற்காக கல்வியில் உட் கட்டமைப்புகளை மாற்ற அரசு மிகப் பெரிய நடவடிக்கைகளையும், முயற்சிகளிலும் ஈடுபட்டு உள்ளது என்பதை தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் இந்திய இளைஞர்கள் அனைவரும் தமிழ் சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டும் என வள்ளல் பெருந்தகை விரும்பியதாகவும் அவரது விருப்பத்தை பூர்த்தி செய்யும் விதமாக புதிய தேசிய கல்விக் கொள்கை இருக்கும் என உறுதியளித்திருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் இந்த புதிய கல்விக் கொள்கையின் மூலம் புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள் மேலும் கல்வி மேம்பாட்டில் கவனம் செலுத்துவதோடு கடந்த 9 ஆண்டுகளில் நிறுவப்பட்ட பல்கலைக்கழகங்கள் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து வெளிவரும் மாணவர்கள் சிறந்த இந்தியாவை உருவாக்குவார்கள் என கூறி இருக்கிறார்கள்.
மேலும் சமுதாய சீர்திருத்தத்தில் வள்ளலார் முன்னிலையில் இருந்தார் என்றும், அவரின் கடவுள் மீதான பார்வை மதம், ஜாதி, இனம் இவற்றையெல்லாம் கடந்தது என்று கூறியதோடு இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொரு அணுவிலும் கடவுளை கண்டவர் வள்ளலார் என்பதை கூறியிருக்கிறார்.
எனவே வள்ளலாரின் போதனைகள் சமத்துவ சமுதாயத்திற்கான மிக முக்கியமான கருத்துகளை கொண்டுள்ளது என்றும் அவரின் நம்பிக்கையை வலிமையாக அனைவரும் இணைந்து முயற்சி செய்ய வேண்டும்.
அது மட்டுமல்லாமல் சட்டப்பேரவையில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்கும் மசோதா நிறைவேறி இருக்கும் இந்த நேரத்தில் வள்ளலார் கண்டிப்பாக அதை ஆசீர்வதிப்பார் எனக் கூறியிருக்கிறார்.
மேலும் வள்ளலார் படைப்புகள், எளிமையானதாகவும் படிக்க அறிந்து கொள்ள சிறப்பாக இருக்கும் சிக்கலான ஆன்மீகத்தை எளிய சொற்களால் வெளிப்படுத்தியவர் என்றும் காலத்தாலும் இடத்தாலும் இந்திய கலாச்சாரத்தில் அவருக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருப்பதாக கூறி இருக்கிறார்கள்.
எனவே அதனால் வள்ளலார் உணர்த்திய அன்பு, கருணை மற்றும் ஜீவகாருண்யத்தை நமது தேசத்தில் பரப்ப வேண்டும். அதற்காக கடினமாக உழைத்து பட்டினி கொடுமை யாருக்கும் ஏற்படாமல் தரமான கல்வியை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என இந்த சமயத்தில் கூறுவதோடு அவருக்கு மரியாதை செலுத்துகிறேன் என கூறியிருக்கிறார்.