பிரிட்டிஷ் அரசு சூட்டிய பெயர் தானா இந்தியா? – உண்மை நிலவரம் என்ன..
இந்தியா என்ற பெயரை சுதந்திரத்திற்கு பிறகு நமக்கு கொடுத்தது பிரிட்டிஷ் காரர்களா? இந்த பெயரின் தோற்றம் எப்படி ஏற்பட்டது என்று பல ஆய்வுகள் நடந்தேறி உள்ளது.
அதன் அடிப்படையில் இந்தியா என்ற பெயர் பிரிட்டிஷ்காரர்களால் நம் நிலப்பரப்புக்கு அளிக்கப்பட்ட பெயராக பலரும் கருதுகிறார்கள்.ஆனால் நீண்ட நெடும் காலமாகவே இந்தியா என்ற பெயர் நமது பரந்த நிலப்பரப்பை குறிக்க பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இதற்கு முன்பு கிமு ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டில் தற்போதைய ஈரான் நாட்டுப்பகுதியை அகெமீனியப் பேரரசு என்று அழைத்திருக்கிறார்கள். மேலும் இந்த பேரரசில் மகா தேவியஸ் என்ற மன்னன் ஆண்ட போது இந்தியாவை அவன் வெற்றி கொண்டிருப்பதற்கான கல்வெட்டுக் குறிப்புகள் காணப்படுகிறது.
இந்தியாவை பொருத்தவரை ஆசியாவில் மனிதர்கள் வசிக்கிறார்கள். அதற்கு அப்பால் உள்ள கிழக்கு பகுதியில் யாரும் இல்லை என ஹெரொடோட்டஸ் கூறியிருக்கிறார்.
மேலும் இந்தியா என்ற பெயர் கிமு 4 நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்கப் பயணியான மெகஸ்தனிசின் இண்டிகா என்ற நூலில் இடம் பெற்றுள்ளது. இது கிழக்கிலும், தெற்கிலும் கடல் சூழ்ந்த பகுதியும் மேற்கில் சிந்து நதி பாய்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
வட இந்திய பகுதிகள் பலவற்றை சித்திரங்களாக இந்த நூலில் கிமு 310-தில் பதிவு செய்து இருக்கிறார். இந்திய துணைக்கண்ட பரப்பை இந்தியா என்றே அந்த நூலில் குறிப்பிட்டு இருக்கிறார்.
எனவே கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே சிந்து நதிக்கு அப்பால் இருக்கின்ற நிலப்பரப்புகளை இந்தியா என்ற சொல் கொண்டு அழைக்க ஆரம்பித்து விட்டார்கள் என கூறலாம்.
“சிந்து” என்ற சமஸ்கிருத வார்த்தை பல அர்த்தங்களை கொண்டுள்ளது. இதற்கு ஆறு என்ற அர்த்தமும் உள்ளது. இந்த சொல் ஒலிப்பானது “S” பெர்சிய மொழியில் “H” ஆக மாறும்.
உதாரணமாக போதை ஏற்றும் பானமான “சோம பானம்” பெர்சிய மொழியில் “போமா” என்று மாறியுள்ளது. அதுபோலவே “சிந்து” என்ற வார்த்தை “ஹிந்து”வாக மாறி இருக்கலாம். இந்த வார்த்தை மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து கிரேக்கத்திற்கு செல்லும் போது “H” என்ற ஒலிப்பு நீங்கி “இந்த்” என மாறி இருக்கலாம்.
இதுவே ஐரோப்பிய மொழிகளில் பரவி இருக்க வேண்டும். எனவே ஏழு நதிகள் பாயும் பிரதேசத்திற்கு அப்பால் உள்ள பகுதியை “இந்த்” இந்தியா என்று அழைத்திருக்கலாம்.
எப்படி சிந்து என்ற வார்த்தையானது கிரேக்க மொழியில் இருந்து ஐரோப்பிய மொழிக்கு செல்லும்போது, “இந்த்” என்று மாறியதோ, அதுபோல பெர்ஷிய, அரேபிய மொழிகளில் “ஹிந்த்” நீடித்து கிட்டத்தட்ட மூன்றாம் நூற்றாண்டு வாக்கில் அது ஹிந்துஸ்தான் என்ற வார்த்தையாக இடம் பெற்றதாக ஈரானில் உள்ள பேரரசர் முதலாம் ஷபூர் கால கல்வெட்டுகளில் ஹிந்துஸ்தான் என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை அடுத்து தான் இஸ்லாமிய அரசர்கள் இந்தியாவை ஆண்ட போது எந்த நிலப்பரப்பை ஹிந்துஸ்தான் என்ற வார்த்தையில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அக்பர் மற்றும் பாபர் காலத்தில் ஹிந்துஸ்தான் என்ற வார்த்தை தான் வழக்கத்தில் இருந்தது.
இப்போது பிரிட்டிஷார் கிழக்கு இந்திய கம்பெனியை நிறுவி வியாபார நோக்கத்தோடு கடல் வழியாக மத்திய அமெரிக்க தீவுகளை கொலம்பஸ் இந்தியா என குறிப்பிட்டாரோ அப்போது அங்கிருந்த மக்களுக்கு லாஸீ இன்டீயோஸ் என்ற பெயரை கொடுத்தார்கள்.
மேலும் 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கீழ் திசையில் வர்த்தகம் செய்ய விரும்பிய நாடுகள் அனைத்தும் கிழக்கிந்திய வார்த்தையை பயன்படுத்திய பிறகு 17,18 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் கிழக்கு இந்திய நிறுவனம் இந்தியாவில் வலுவான ஒரு இடத்தை பிடித்த பிறகு இந்திய துணைக்கண்ட நிலப்பரப்பு அனைத்துமே இந்தியா என்று அழைக்கப்பட்டது.
இதனை அடுத்து இந்த பெயரை இயல்பான புழக்கத்திற்கு வந்தது என கூறலாம். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1947 ல் இந்தியா பாகிஸ்தான் என்று இரண்டு நாடுகள் பிறந்தது. முகமது அலி ஜின்னா உள்ளிட்ட முஸ்லீம் தலைவர்கள் இந்தியாவில் இருந்து பிரிந்து செல்லும் போது தங்கள் நாட்டுக்கு பாகிஸ்தான் என்ற பெயரை முடிவு செய்து விட்டார்கள். ஆனால் இந்திய பகுதி இந்தியா என்று அழைக்கப்படும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
இதற்கு காரணம் இந்த பெயரை பிரிட்டிஷ்காரரின் கீழ் இருந்த நாட்டில் யாரும் விரும்ப மாட்டார்கள் என்று நினைத்தார்கள். ஆனால் தங்கள் நாட்டில் இந்தியா என்ற பெயர் நீடிக்க வேண்டும் என்ற நேருவின் கோரிக்கையை பிரிட்டிஷ் அரசின் கடைசி வைஸ்ராயான மௌண்ட் பேட்டன் ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து தான் இந்தியாவிற்கு இந்தியா என்ற பெயர் தற்போது வரை உள்ளது.