“குறை பிரசவ குழந்தைகளுக்கு இன்குபேஷன் முறை..!” – முன்னோர்கள் விட்டுச் சென்ற சான்று..
பண்டைய கோயில்களில் புதைந்து இருக்கக்கூடிய விஷயங்கள் ஏராளமாக உள்ளது. சிற்பங்களில் எல்லாவிதமான செயல்களையும் வடித்துக்காட்டி இருக்கக்கூடிய திறன் படைத்த நமது முன்னோர்களின் மூளை அளப்பரியது என்று கூறலாம்.
அந்த வகையில் தற்போது ஒரு கோவிலில் படம் பிடிக்கப்பட்ட சிற்பத்தில் ஒரு குழந்தை அதுவும் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையாக இருக்கலாம், என்று தோன்றக்கூடிய எண்ணத்தில் கீழே படுத்த நிலையில் இரண்டு பெண்கள் அருகில் இருக்கும் வண்ணம் இந்த சிற்பம் அமைந்துள்ளது.
மேலும் இன்றைய காலகட்டத்தில் குறை பிரசவத்தில் பிறக்கக்கூடிய குழந்தைகளை வெதுவெதுப்பாக வைத்துக்கொள்ள இங்குபேஷன் முறையை பின்பற்றுவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். அந்த இன்குபேஷன் பகுதியில் குழந்தைகளை வைத்து பாதுகாத்து பின் கொடுப்பார்கள்.
அந்த முறையைப் போலத்தான் இந்த சிற்பம் இருப்பதைப் பார்க்கும்போது நமது முன்னோர்கள் அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை காப்பாற்றி இருப்பார்களா? என்று எண்ணத் தோன்றக்கூடிய வகையில் உள்ளது.
ஏற்கனவே நமது முன்னோர்கள் அறிவியல் தொழில்நுட்பம் வளராத காலத்திலேயே வானியல் மட்டும் அல்லாமல் மருத்துவ துறையிலும் வியக்கத்தகு, கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
அந்த வகையில் இந்த சிற்பம் விளக்கக்கூடிய கருத்து, இன்குபேஷன் டெக்னாலஜியாக இருக்கக் கூடாதா? என்ற எண்ணத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைந்துள்ளது.
நீங்களும் இந்த படத்தை உற்று நோக்கினால் நான் கூறுவதில் உண்மை உள்ளது என்பதை மிகத் தெளிவாக உங்களுக்கு புரியும். இது போன்ற உயர்ந்த தொழில் நுட்பங்களை அன்றே அவர்கள் பயன்படுத்த சாதிய கூறுகளும் இருந்திருக்கலாம்.
அந்த வகையில் பன்னிடும் காலம் முன்பே பெண்களுக்கு உதவக் கூடிய வகையில் இந்த இங்கு இன்குபேஷன் தொழில்நுட்பத்தை நம் முன்னோர்கள் பயன்படுத்தி இருப்பது நமக்கு மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது போன்ற தொழில்நுட்பங்கள் மட்டுமல்லாமல் செயற்கை முறையில் கருத்தரித்தல், டெஸ்ட் டியூப் பேபி போன்ற செயல்களிலும் அவர்கள் முன்னேறி இருந்திருக்கிறார்கள் என்று சொல்ல நிறைய சான்றுகள் உள்ளது.
எனவே பண்டைய நூல்களை சரியான முறையில் ஆய்வு செய்து பார்க்கும் போது இன்றைய கண்டுபிடிப்புகளின் முன்னோடிகளாக நமது முன்னோர்கள் இருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.
நீங்களும் கட்டாயம் இது சம்பந்தமான உங்கள் கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.