“ஹிட்லருக்குள் ஒளிந்திருந்த மனிதம்..!” – நம்மைப் போல தானா.. வரலாற்று பேசும் உண்மைகள்..
ஒரு பக்கம் வரலாற்றில் ஹிட்லர் என்றாலே சர்வாதிகாரி மாபெரும் இனத்தை அழித்தவன் என்ற பல தகவல்களை கேள்விப்பட்டிருக்கும் நாம், ஹிட்லருக்குள் ஒரு சாதாரண மனிதன் இருந்திருக்கிறார். அவரும் நம்மை போலவே சிரித்த வண்ணம், பாசத்தோடு பழகக் கூடிய மனிதராக வாழ்ந்து இருக்கிறார் என்ற செய்தியை சொன்னால் நம்ப முடியுமா?.
ஆனால் ஹிட்லரின் ஒரு பக்கம் அப்படிப்பட்ட ஆச்சரியப்படக்கூடிய பக்கங்களாக இருந்துள்ளது. எனவே அவரது வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்ள நீங்கள் ஆவலோடு இந்த கட்டுரையை படித்தாலே உங்களுக்கு மிக நன்றாக புரிந்து விடும்.
இரண்டாம் உலகப்போர் நடந்த சமயத்தில் 60 லட்சம் யூத மக்களை வதை முகாம்களில் அடைத்து கொன்றழித்த சர்வாதிகாரி என்று நாம் நினைத்து வந்த ஹிட்லர் தனது சொந்த வாழ்வில் தனது மனைவியான எவா ப்ரெளன் எடுத்த வீடியோக்களின் பிம்பங்களை பார்க்கும் போது ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.
ஹிட்லர் அவர் தனது மனைவியுடன், குடும்பத்துடன் நண்பர்களுடன் சிரித்துப் பழகி மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய காட்சிகளை பார்த்து தனி வாழ்வில் ஹிட்லர் இவ்வளவு சிறந்த மனிதராக இருந்தாரா? என கேட்கத் தோன்றும்.
இறுக்கமான ஹிட்லரின் முகத்தை மட்டுமே நம் முன் காட்டியிருக்கும் வரலாற்றை பற்றி நாம் என்ன என்று கூறுவது.. 1970களில் ஹிட்லரின் மனைவி எவா எடுத்த வீடியோ காட்சிகள் வெளியான போது அவற்றை மக்கள் பெரும் அதிர்ச்சியோடு பார்த்து மகிழ்ந்திருக்கிறார்கள்.
காரணம் ஹிட்லர் இந்த வீடியோக்களில் சிரித்த வண்ணம் இருப்பது தான். இவர் நெருங்கிய நட்பு வட்டத்தோடு மிகச் சிறப்பான முறையில் தொடர்பு கொண்டிருக்கிறார். மேலும் நண்பர்கள், மனைவி என செலவிடும் நேரங்களில் சாதாரண மனிதனைப் போலத்தான் இருந்திருக்கிறார்.
இயல்பான இந்த மனிதரை ஏன் சோகமான மனிதர் என்று வரலாறு பிரகடனப்படுத்தியது என தெரியவில்லை. யாரிடமும் அன்பு செலுத்தாத மிருகமாக சித்தரிக்கப்பட்ட இவர் அன்பும், பாசமும் நிறைந்த மனிதராக இருந்திருக்கிறார் என கூறலாம்.
மேலும் ஹிட்லர் ஆப்ஸ் மலைத்தொடரில் இருக்கும் மலைவாச தலத்தில் விடுமுறை மாளிகையில் தன் மனைவியோடு இருந்த புகைப்படங்கள் வெளிவந்துள்ளது. இவை 1930 ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்டவை.
அது மட்டுமல்லாமல் தனது கணவர் ஹிட்லர் நண்பர்களோடு தனிப்பட்ட முறையில் கழித்த நாட்களை வீடியோ எடுத்து இருக்கிறார். இந்த வீடியோக்கள் வரலாற்றை புரட்டிப் போடக் கூடிய வகையில் ஹிட்லரின் இயல்பான மனநிலையை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் படி உள்ளது.
அவரும் சிரித்தபடி சந்தோஷமாக தனது மனைவி மற்றும் நட்பு வட்டாரங்களோடு இருந்திருக்கிறார். அவருக்குள்ளும் ஒரு மனிதம் இருந்தது. என்பதற்கு சான்றாக அந்த வீடியோக்கள் அனைத்தும் உள்ளது என கூறலாம்.
எனவே இனிமேலாவது ஹிட்லரை ஒரு சர்வாதிகாரியாகவும் மனிதநேயம் இல்லாத மனிதராக சித்தரிப்பதை விடுத்து பல வகை கோணங்களில் ஆய்வு செய்து அவரின் உண்மை நிலையை அறிய வைப்பது வரலாற்று ஆய்வாளர்களின் கடமை என்பதை கூற வேண்டும்.