“சங்கம் மருவிய பிறகா வடமொழி சமஸ்கிருத மொழியானது..!” – ஓர் ஆய்வு அலசல்..
உலகிலேயே மிக தொன்மையான மொழிகளில் சமஸ்கிருதம் உள்ளது என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இந்த மொழியை கடவுளின் மொழி என்று அழைக்கிறார்கள். உலகம் மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாக இந்த மொழி உள்ளது என்று பல வகையில் புகழப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சமஸ்கிருதத்தை தமிழோடு ஒப்பிட்டு பார்க்கும்போது சமஸ்கிருத மொழியின் உண்மை நிலை என்ன என்பதை பற்றி ஒரு விரிவான ஆய்வு அலசலை இந்த கட்டுரையில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
சமஸ்கிருத மொழியைத்தான் தமிழில் வடமொழி என அழைக்கிறார்கள். சங்ககாலத்தில் வடமொழி என்பது பிராகிருத மொழியை குறிக்க பயன்பட்ட சொல்லாக இருந்து உள்ளது. அதுமட்டுமல்லாமல் சங்கம் மருவிய காலத்துக்குப் பிறகு தான் வடமொழி என்பது சமஸ்கிருத மொழியாக சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த சமஸ்கிருத மொழியான வடமொழியை சமஸ்கிருத பண்டிதர்கள் இரண்டு வகையாக பிரித்திருக்கிறார்கள். சமஸ்கிருதத்தின் தந்தை என அழைக்கப்படக்கூடிய பாணினி அவர்களின் முந்தைய வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் வரை இருந்த பண்டைய கால வேத மொழியை வைதிக மொழி எனவும் அதற்குப் பிந்தைய மொழியைத்தான் சமஸ்கிருத மொழியாக கூறி இருப்பதாக கா.கைலாசநாதர் குருக்கள் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
எனவே பிரா கிருதம் முந்தைய மொழி எனவும் அதை சீர் செய்த பின் உண்டான மொழி தான் சமஸ்கிருதம் என இதன் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும் பிராகிருத மொழியயை சீர் செய்து பாணினி உருவாக்கிய மொழிதான் சமஸ்கிருதம். எனவேதான் இவரை சமஸ்கிருதத்தின் தந்தை என்று அழைக்கிறார்கள்.
உண்மையில் சமஸ்கிருதமும் ஒரு இந்து ஐரோப்பிய மொழிதான். வேதகால வைதீக மொழியான ஈரானின் அவெத்தான் (Avestan) மொழியோடு இது பலவகையில் ஒத்துப் போவதாக மொழியியல் ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள்.
மேலும் இந்த மொழி தான் இந்தியாவில் பேசப்படும் மொழிகளான ஹிந்தி, வங்காளி, குஜராத்தி, மராட்டி, காஷ்மீரி, நேபாளி ஒரியா, கொங்கணி, சிந்து பஞ்சாபி போன்ற வடமொழி மொழிகளுக்கு மூலமாக கருதப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் தென்னிந்திய மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்றவற்றிற்கு தமிழ் எப்படி மூல மொழியாக உள்ளதோ இந்த மொழிகளிலும் அதிகளவு வடமொழிச் சொற்கள் உள்ளது.
எனவே மேற்கூறிய கருத்துக்களின் படி சமஸ்கிருத மொழியானது எப்படி உருவானது என்பதை பாணினியின் இலக்கண நூல் மூலம் அறிந்து கொள்ளலாம். இவரின் கருத்துக்கு முன்பு வேதங்களின் இலக்கணமாக பிராகித சாக்கியங்கள் இருந்துள்ளது, பின்னர் தான் இது திருத்தப்பட்டது.
இவரின் காலம் பற்றிய நம்பகத்தக்க சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை. எனினும் கிபி ஏழாம் நூற்றாண்டை சேர்ந்த ஆதிசங்கரரின் நூலில் பாணினி பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது. இதனை அடுத்து சிலர் இவர் மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்தவராக இருக்கலாம் என பெரிடேல் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.