எவராலும் வீழ்த்த முடியாத பெண் இளவரசி குத்லுன்..! – செங்கிஸ்கான் வம்சமா?
மார்க்கோபோலோ தனது புத்தகமான “ஆப்ஸ் வொண்டர்” என்ற நூலில் உலகின் சக்தி வாய்ந்த இளவரசையாக குத்லுன் என்று அழைக்கப்பட்ட பெண்ணை பற்றி மிகச் சிறப்பான செய்திகளை பகிர்ந்திருக்கிறார்.
இவரை மார்க்கோ போலோ ஐகியார்னே என்ற பெயரால் அழைத்திருக்கிறார். மங்கோலிய தேர்வலானது ஹங்கேரியன் எல்லைகளில் இருந்து கிழக்குச் சீனக் கடல் வரை நீண்டிருந்தது. எந்தப் பகுதியை கெங்கிஸ்தானின் வழித்தோன்றல்கள் ஆட்சி செய்தார்கள் என அறியப்படுகிறது இவர்கள் சுமார் 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கலாம் என வரலாற்று ஆசிரியர்கள் கூறியிருக்கிறார்கள்.
அந்த வகையில் கெங்கிஸ்தானின் எள்ளு பேத்தியும் கெங்கிஸ்தானே தனிப்பட்ட முறையில் நியமித்த வாரிசாக ஒகோடையின் கொள்ளுப்பேத்தியும் ஆவார். இவரது தந்தை சக்தி வாய்ந்த மங்கோலிய கான்களில் ஒருவராக திகழ்ந்தார்.
இவர் தனது மூதாதையரை விட தனித்துவத்தோடு ஆட்சி செய்ததன் காரணத்தால் தான் இவரது ஆளுமையை மார்க்கோ போலோ புகழ்ந்து தள்ளி இருக்கிறார் இவர் போர்க்களத்தில் பிறரை போல தனித்து நின்றது மட்டுமல்லாமல் தன்னை தோற்கடிக்க கூடிய ஒரு நல்ல மனிதரை கண்டுபிடிக்கும் வரை திருமணம் செய்து கொள்வதில்லை என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்.
இது அவ்வளவு எளிமையான காரியம் அல்ல ஏனெனில் மங்கோலியர்கள் அனைவருமே சிறந்த வில்லாளிகள் குதிரை வீரர்கள் என உங்களுக்கு மிக நன்றாக தெரியும் மேலும் மல்யுத்தத்தை மிகச் சிறப்பான முறையில் இவர்கள் கற்றவர்கள்.
எனவே மங்கோலியங்கள் யாராவது ஒரு பெண்ணை காதலித்தால் அந்த காதலில் வெற்றி கொண்டு அவளை திருமணம் செய்து கொள்ள போரிடுவார்கள் அந்த போரில் அவர்கள் வென்றால் அவளை திருமணம் செய்து கொள்வார்கள் இல்லையெனில் 100 குதிரைகளை அந்த பெண்ணிற்கு கொடுப்பார்கள்.
இந்தச் செய்தியானது பல ராஜ்யங்களுக்கும் பரவி இந்த சவாலை பலரும் செய்து தோல்வி அடைந்த காரணத்தால் இளவரசி குத்லுன் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குதிரைகளை வைத்திருந்ததாக மார்க்கோபோலோ எழுதி இருக்கிறார்.
மேலும் இந்த இளவரசி ஒரு இளவரசரை சந்திக்கும் போது 100 குதிரைகளுக்கு பதில் ஆயிரம் குதிரைகளை அந்த இளவரசர் பந்தயம் கட்டினார். ஏனெனில் அவன் விரும்பியது இளவரசியின் இதயத்தை தான்.
இந்த சூழ்நிலையில் இளவரசியின் தந்தையான காய்டு ஆந்த இளவரசன் தன் மகளை மணக்க வேண்டும் என்பதற்காக தன் மகளிடம் அவனை வெல்ல விடு என்று கெஞ்சிக் கூத்தாடி இருக்கிறார் ஆனால் இளவரசி அதற்கு உடன்படவில்லை.
இதை அடுத்து குத்லுன் சண்டையிடுவதற்கு தயாரானால் அந்த இளவரசனும் இளவரசியும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து அழகான முறையில் சண்டையிட ஆரம்பித்தார்கள் எனினும் இளவரசன் தோற்று விடுகிறான்.
இதை எடுத்து இளவரசியிடம் ஆயிரம் குதிரைகளை கொடுத்து விட்டு வெட்கத்தோடு தன் நாட்டுக்கு அந்த இளவரசன் திரும்பி விடுகிறான் இது நம்ம நம்பகத்தக்க விஷயமா என்பது தெரியவில்லை.
இளவரசி குத்லுன் தன்னோடு 14 சகோதரர்கள் பிறந்திருந்தாலும் கூட அரசவையில் அரசியல் ஆலோசகராக போர்க்களத்தில் யுக்திகளை வகுத்துக் கொடுக்கக்கூடிய சிறந்த புத்தி கூர்மையோடு இருந்திருக்கிறார்.
மன்னரின் உறவினரான குப்பாய்க்கான் இளவரசியை சீனாவின் அனைத்து பகுதிகளுக்கும் கூட்டி சென்று போரிடும் போது எப்படி இருக்க வேண்டும் என்பதை நேரடியாக பார்க்க கற்றுக் கொடுத்திருக்கிறார்.
மேலும் மார்க்கோ போலோ இவரது வீரத்தை பற்றி பேசுகையில் ஒரு மனிதனைப் பிடித்து தனது தந்தையிடம் கொண்டு செல்லும்போது ஒரு பருந்து ஒரு பறவையின் மீது பாய்வது போல மிகத் திறமையாக இவர் நடந்து கொள்வார் என விளக்கியிருக்கிறார். அதுபோலவே இவரது உடல் அமைப்பைப் பற்றி சில குறிப்புக்களை கூறியிருக்கிறார். இதை இளவரசி மிகவும் உயரமானவராகவும் வலு மிக்கவராகவும் பார்ப்பதற்கு அழகாகவும் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
எனினும் இளவரசி திருமணம் செய்து கொண்டாரா அவரது கணவர் யார் என்பது பற்றிய எந்த குறிப்புகளும் கூறப்படவில்லை. ஆனால் இளவரசி ரஷீத், குத்லுன் கஜானை நேசித்தார் என்று கூறப்பட்டுள்ளது. இவர் 1295ல் பாரசீக கான் ஆனார் ஆனால் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
வரலாற்று ஆய்வாளர்கள் பெரும்பாலும் குளித்தலை தனது வாரிசாக விரும்பியதாகவும் ராஜ்ஜியத்தை அவர் ஆள வைக்க வேண்டும் என நினைத்ததாகவும் கூறியிருக்கிறார்கள் எனினும் குத்லுன் 1306 ஆம் ஆண்டில் தோற்கடிக்க முடியாத வீராங்கனையாகவே உயிரிழந்திருக்கிறார் இவரது உயிரிழப்புக்கு காரணம் என்ன என்றும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த குத்லுன் தற்போது ஒரு மிகப்பெரிய நபராக விளங்குகிறார். பல கதைகள் மட்டுமல்லாமல் காமிக்ஸ் வீடியோ கேம்களில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறாள்.