“கடையெழு வள்ளல்கள்” – ஓர் ஆய்வு அலசல்..
ஒரு கை கொடுப்பது மற்றொரு கைக்கு தெரியக்கூடாது என்ற ரீதியில் தான தர்மங்களில் சிறப்பான நிலையை எட்டிய கடையெழு வள்ளல்கள் பற்றி தான் இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ள போகிறோம்.
அதற்கு முன்பு கடையேழு வள்ளல்கள் யார்? அவர்களின் பெயர் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.
கடையேழு வள்ளல்கள் பேகன், பாரி, காரி, ஓரி, ஆய், நல்லி ஆகியோர் ஆவார். இந்த ஏழு மன்னர்களும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை மிகச் சிறப்பான முறையில் ஆட்சி செய்திருக்கிறார்கள்.
அது மட்டுமா? மக்களின் தேவையை அறிந்தும் அவர்களின் மன நிலையை உணர்ந்தும் வாரி வழங்கிய கொடை வள்ளல்களாக திகழ்ந்திருக்கிறார்கள்.
அட.. மனிதர்களுக்கு மட்டுமா? வாரி வழங்கி இவர்கள் வள்ளல்களாக மாறினார்கள் என்று கேட்டால் இல்லை இல்லை இந்த மண்ணில் பிறந்த எல்லா உயிரினங்களையும் ஒரே போல பார்த்து இவர்களின் தர்மத்தை நிலை நிறுத்தி இருக்கிறார்கள்.
இதற்கு உதாரணமாக குளிரில் நடுங்கும் மயிலுக்கு போர்வையை வழங்கிய பேகனை கூறலாம். அதுபோலவே முல்லைக்கொடி வாடி நிற்பதைக் கண்டு தன் தேரையே அது பற்றி வளர கொடுத்த மன்னன் பாரி.
மனிதர்களுக்கு எப்போதும் தான் நீண்ட நாள் உயிர் வாழ வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அப்படி நீண்ட நாள் உயிர் வாழ வைக்கக்கூடிய நெல்லிக்கனியை அதியன் உண்ணாமல் அதை ஔவை பாட்டிக்கு கொடுத்து மகிழ்ந்தார்.
இத்தகைய சீர்மிக்க குணங்கள் தான் அவர்களை கடையெழு வள்ளல்கள் என்று கூற வைத்துள்ளது. மேலும் இவர்களின் அளப்பரிய செயல்கள் மூலம் இந்த மண்ணில் நிலையான இடத்தை பிடித்திருக்கிறார்கள்.
திருக்கோவலூரை தலைமை நகராகக் கொண்டு ஆட்சி புரிந்த காரி என்ற மன்னன் திரவலர்களுக்கு குதிரை கொடுத்து புகழ் அடைந்தவன். அது போலவே கடையேழு வள்ளல்களில் ஒருவரான ஆய் தன்னிடம் உதவி வேண்டி வருபவர்களுக்கு ஊர்களை கொடுத்து அகம் மகிழ்ந்தவன்.
நள்ளி தன்னிடம் பொருள் கேட்டு வருபவர்களுக்கு இனி யாரிடமும் போய் பொருள் கேட்கக்கூடாது என்று நினைக்கக் கூடிய அளவு தேவைக்கு மேற்பட்ட பொருட்களை கண்டு மகிழ்ந்தவன்.
ஓரி கூத்தாருக்கு நாடு கொடுத்தவன். வில் வித்தையில் மிக சிறந்த இவர் இசைவானர்களுக்கு யானையையும் பரிசாக வழங்கி இருக்கிறார். பாலர்களுக்கு விருந்து உணவு கொடுத்து வறுமையை போக்கியவன்.
இப்போது உங்களுக்கு மிகவும் சிறப்பாக புரிந்து இருக்கும் கடையேழு வள்ளல்கள் யார்? அவர்கள் எத்தகைய சிறப்புமிக்க தர்மங்களை செய்து கட்டுக்கோப்பாக ஆட்சி செய்து மக்களின் மனதில் சிறப்பான இடத்தை பிடித்திருக்கிறார்கள் என்று.