“பண்டைய இந்திய வேதியல் அறிவியலாளர் நாகார்ஜுனா..! – ரசவாதத்தின் தந்தை..
புதிய, புதிய கண்டுபிடிப்புகளை வெளிநாட்டவர்கள் நிகழ்த்தும் போது அவற்றை எண்ணி நாம் பெருமிதம் கொள்கிறோம். எனினும் நம் நாட்டிலேயே அவர்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பு அந்த கண்டுபிடிப்புகளை போல உள்ள சாரா அம்சங்களை தெளிவான முறையில் கூறிய இந்திய அறிவியல் மேதைகள் பற்றிய ஆழ்ந்த அறிவு நம்மிடையே குறைந்து தான் காணப்படுகிறது.
அந்த வகையில் இந்த கட்டுரையில் இந்திய வேதியலின் தந்தை அவ்வளவு ஏன், உலோகவியலின் உலக தந்தை என்று அழைக்கப்பட கூடிய ஆச்சாரியார் நாகார்ஜுனாவை பற்றிய அறிய தகவல்களை தான் இந்த கட்டுரையில் பார்க்க போகிறோம்.
கிபி ஒன்றாம் நூற்றாண்டில் மகாராஷ்டிராவில் இருக்கும் நாகல்வாடி கிராமத்தில் ஸ்ரீபூர் நகரில் பிறந்தவர் தான் இந்த ரசவாத தந்தையான நாகார்ஜுனா.
இவர் ஒரு மிகச்சிறந்த வேதியியலாளர் மட்டுமல்லாமல் உலோகவியாளரும் கூட. மருத்துவ அறிவியல் துறையில் பல புத்தகங்களை எழுதி இருக்கிறார். அதில் குறிப்பிடத்தக்க புத்தங்கள் ஆரோக்கிய மஞ்சரி, யோகா சார் ,யோகஷ்டகா,கக்ஷ்புத்தந்திரம் ஆகும்.
தன் அபார திறமையின் மூலம் நாளந்தா பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்ட இவர், தங்கம் செய்யும் முறை, பாதரசம் சம்பந்தப்பட்ட பல ஆய்வகச் சோதனைகளை நடத்தி இருந்தால் என்றால் உங்களுக்கு வியப்பாக இருக்கும்.
தூய பாதரசத்தை பிரித்தெடுக்கக்கூடிய செயல்முறைகள் மற்றும் உலோகத்தின் சிகிச்சை பயன்பாடுகள் பற்றி ஆழமான ஆய்வுகளை செய்ததோடு மட்டுமல்லாமல் உலோக கலவைகளை உருவாக்கவும் பாதரசம் மற்றும் பிற உலோகங்களை சுத்தப்படுத்தவும் செயல்முறைகளை உருவாக்கினார்
ரசாயனங்களை ஏறக்குறைய எட்டு முக்கிய வகைகளாக வகைப்படுத்தியவர். அவை முறையே மகாராஸ்,உப்ராஸ்,ஜெனரல்கள், அடிப்படைகள். ரத்தின கற்கள், உலோகங்கள், விஷங்கள், அமிலங்கள், உப்புக்கள், பாஸ்மா ஆகும்.
இதன் முறைப்படி இந்தியர்களுக்கு காய்ச்சி வடித்தல் பற்றிய அறிவு நன்கு இருந்ததோடு, வாசனை திரவிய தொழில்களிலும் ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்த வகையில் வேதியியல் அறிஞரான நாகார்ஜுனாவின் ஆய்வுகள் இந்திய வேதியல் அறிவை உலகிற்கு பறை சாற்றி உள்ளது.
இப்போது கூறுங்கள் வேதியல் முறையில் அன்றே உலோகங்களை பிரித்தெரியக்கூடிய மிக அற்புதமான தொழில்நுட்பத்தை உலகிற்கு கற்றுக் கொடுத்த நாகார்ஜுனாவின் புகழ் வெள்ளைக்காரனுக்கு தெரிந்த அளவு கூட நமக்கு தெரியாதது வருத்ததிற்கு உரிய விஷயம் தான்.
இனியாவது நமது பாடத்திட்டங்களில் இந்தியாவில் இதுபோன்ற சாதனைகள் புரிந்த பண்டைய அறிவியலாளர்களின் பாடத்தை கற்றுக் கொடுக்கும் போது, நமது முன்னோர்களின் திறமைகள் நமக்கு தெரிய வருவதோடு நாமும் அதுபோன்ற ஆய்வுகளில் ஈடுபடுவதற்கு நமக்கு ஒரு ஊக்கத்தை அளிக்கும் விதமாக இருக்கும் என்பதை அரசும் புரிந்து கொள்ள வேண்டும்.