செங்கிஸ்தான் (Genghis Khan) என்ற பெயரை கேட்டாலே சுற்றும் உலகம் ஒரு நிமிடம் அப்படியே நிற்கும். அந்த அளவு ரஷ்யா, சீனா, ஈராக், கொரியா, கிழக்கு ஐரோப்பா மற்றும் இந்தியாவின் பல பகுதிகளை வென்று கிட்டத்தட்ட நான்கு கோடி மக்களுக்குமே கொன்று குவித்த ஒரு மங்கோலிய மன்னன்.
மங்கோலிய நாடோடி இனத்தை சேர்ந்த செங்கிஸ்தான் ஆரம்ப நாட்களில் வறுமையில் வளர்ந்தார். இதனை அடுத்து நாடோடிகள் அனைவரையும் இணைத்து ஒரு படையை திரட்டி 20,000 பேருடன் தாதர்களை அடக்கி,பின் தன் பெரும் படையை கொண்டு உலகை கைப்பற்ற முடிவு செய்தான்.
இந்த வகையில் இவன் பெரும் படையுடன் ஒவ்வொரு பகுதியை கைப்பற்றும் போது அங்கு மூன்று அடிக்கு மேல் வளர்ந்து இருக்கக்கூடிய உயரமான ஆண்களை கொலை செய்ய உத்தரவிடுவதோடு, அங்கு இருக்கும் பல பெண்களோடும் உறவில் ஈடுபடுவான்.
எதிரிகள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் சற்றும் கவலைப்படாத செங்கிஸ்கான் இரக்கம் காட்டாமல் ரத்த வெறி பிடித்த ஒரு போர் வீரனாக எந்த சமயத்திலும் தனக்கு வெற்றியை ஏற்படுத்திட்டு தரக்கூடிய தந்திரமான வழிமுறைகளை பயன்படுத்தி கிட்டத்தட்ட 22 சதவீத உலக நிலத்தை ஒற்றை ஆளாக வென்றெடுத்தான்.
இன்று வரை புரியாத புதிராக இருக்கும் இவனது வாழ்க்கை முறையை பல வரலாற்று ஆசிரியர்கள் இன்னும் ஆய்வு செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். 12 மற்றும் 13ம் நூற்றாண்டுகளில் ஆசியா ஐரோப்பாவில் போர் காரணமாக பல லட்சம் மைல்கள் கடந்து சென்று ஒரு மிகப்பெரிய வழித்தோன்றலை உருவாக்கி இருக்கிறான்.
இந்த சூழ்நிலையில் உலகிலேயே அதிக அளவு பேரன்களைக் கொண்டவர் செங்கிஸ்கான் தான் என்ற கருத்து நிலவுகிறது. சுமார் 16,000 பில்லியன் பேரன்கள் இருப்பதாக 2003 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட வரலாற்று ஆய்வு தெரிவிக்கிறது.
இதற்கு காரணம் இவர் எந்த பகுதிக்கு சென்றாலும், சென்ற இடங்களில் எல்லாம் குழந்தைகளை பெற்றுக் கொண்டது தான் என கூறி வருகிறார்கள். மேலும் செங்கிஸ்கான் இறந்த எட்டு நூற்றாண்டுகள் ஆகிவிட்டாலும், அவனது டிஎன்ஏ அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டுள்ளது தற்போது உறுதியாகி உள்ளது.
மங்கோலிய மாவீரனான செங்கிஸ்கான் ஆண்ட பகுதிகளில் பலருக்கும் இவர் தாத்தாவாக இருக்கிறார். இங்கு இருக்கும் 8 சதவீத ஆண்களுக்கு ஒரே மாதிரியான Y குரோமோசோம் இருப்பதை 2003இல் நடந்த ஆய்வில் கண்டறித்திருக்கிறார்கள்.
எனவே உலக மக்கள் தொகையில் 0.5% செங்கிஸ்தான் பங்களிப்பு இருந்தது என்று கூறலாம். இதன் அடிப்படையில் செங்கிஸ்தான் தனது வாழ்நாளில் எத்தனை குழந்தைகளை கொண்டு இருந்தார் என்ற கணக்கை போடும் போது எண்ணிக்கை நீண்டு கொண்டே செல்கிறது.
அந்த வகையில் உலகில் 200 ஆண்களில் ஒருவர் தனது வழி தோன்றலாக இருக்கக்கூடிய அளவு இனப்பெருக்க பாரம்பரியத்தை உருவாக்கிய செங்கிஸ்கான் பல ஆயிரக்கணக்கான பெண்களோடு தொடர்பில் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. குறைந்தபட்சம் ஆயிரம் பெண்கள் ஆவது இவர் மூலம் கருவுற்று இருக்கலாம்.
இதனை அடுத்து மர்மமான முறையில் இறந்து போன செங்கிஸ்கான் பற்றி பல மர்மமான கதைகளும் நிலவுகிறது. இவரது மரபணுக்களை எடுத்து சோதனை செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால் கட்டாயம் இன்னும் பல ஆச்சரியமான மர்மம் முடிச்சுகள் அவிழ்ந்து உலகிற்கு உண்மை வெளிவரும்.