Deep Talks Tamil

 “சாமானிய மக்களின் வாழ்க்கை தரம்..!” – விளக்கும் ஜம்பை கோயில் கல்வெட்டுகள்..

Jambai Temple

பொதுவாகவே கல்வெட்டுகளில் மன்னர்கள் பற்றிய விஷயமும், அவர்கள் செய்த நற்செயல்கள் பற்றிய கருத்துக்களும் அதிக அளவு இடம் பெற்று இருக்கும் என்ற கருத்தை உடைத்து எறிய கூறிய வகையில், ஜம்பை கோயிலில் மன்னர்கள் குறித்த தகவல்கள் மட்டும் இல்லாமல் சாமானிய மக்களின் வாழ்வியலை எடுத்துக்காட்டும் வகையில் சில கல்வெட்டுகள் கிடைத்துள்ளது.

இந்த ஜம்பை கோயிலானது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு கிடைக்கப்பெற்ற கல்வெட்டில் அக்காலத்தில் வாழ்ந்த சாமானிய மக்களின் வாழ்வியல் மட்டுமல்லாமல், அன்று செய்த குற்றங்களுக்கு கொடுத்த தண்டனைகளை பற்றி விரிவாக கூறப்பட்டிருப்பது மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Jambai Temple
Jambai Temple

ஆரம்ப நாட்களில் இந்த ஜம்பை கோயில் ஆனது வாளையூர் நகராக இருந்து பின் ஜம்பை ஆக மாறியது. இந்த நகரில் தான் ஜம்புக நாதஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் முழுவதும் வித்தியாசமான கலை சிற்பங்கள், கலை நுணுக்கத்தோடு செதுக்கப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல் சிங்கமுக தூண்கள் நமது முன்னோர்களின் கலைத்திறனை பறைசாற்றும் வகையில் உள்ளது.

இங்கு கிடைக்கப்பட்ட கல்வெட்டுகளில் தான் சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரம் பற்றிய தகவல்கள் அதிகளவு இடம் பிடித்துள்ளது. திருவண்ணாமலைக்கு அருகில் இருக்கக்கூடிய இந்தப் பகுதியில் தான் 132 கல்வெட்டுகள் உள்ளது.

இதில் 60 சோழர்களின் கல்வெட்டுகளாகவும், 12 கன்னர தேவன் கல்வெட்டுக்களாகவும், 5 கோப்பெரும் சிங்கன் கல்வெட்டுகளாகவும், 6 பாண்டியர்களின் கல்வெட்டுகளாகவும், 13 நாயகர்கள் கால கல்வெட்டுகளாகவும் இதர கல்வெட்டுகள் பெயர் குறிப்பிடப்படாமல் காணப்படுகிறது.

Unlimited High-Quality Audiobooks

Best Devotional Audiobooks

Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.

Listen Devotional

Crime Series

Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.

Discover Crime Series

Rajesh Kumar Collection

Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.

Listen Now
Listen Free on YouTube
Jambai Temple

இந்தக் கல்வெட்டுகள் பெரும்பாலும் கோபுரத்தின் வலது புற சுவரில் உள்ளது. இதில் இந்த கோயிலுக்காக தானம் செய்தவர்கள் குறித்த செய்திகளும் அதிகளவில் இடம் பெற்றுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்த கல்வெட்டுகளில் முதலாம் ராஜாதி ராஜன், இரண்டாம் ராஜேந்திரன், வீரராஜந்திரன், முதலாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன், மூன்றாம் குலோத்துங்கன் காலத்திய பல்வேறு கல்வெட்டுகளையும் காண முடிகிறது.

மேலும் சாமானிய மக்கள் தங்களுக்கு தண்டனை கொடுக்கப்பட்டு இருக்கக்கூடிய செய்திகளும் இந்த கல்வெட்டில் காணப்படுகிறது. இந்த கிராமத்தைச் சேர்ந்த வியாபாரி நாவலூரைச் சார்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்யாமலேயே வாழ்க்கைத் துணையாக ஏற்று  வாழ்க்கை நடத்தினான். ஒரு நாள் இரவு அந்தப் பெண்ணிடம் அங்காடி பொற்றாமன் என்பவர் தவறாக நடந்து கொள்ள முயன்ற போது அந்த வியாபாரி கோபப்பட்டு அவனை குத்திக் கொன்று விடுகிறான்.

Jambai Temple

இதனை அடுத்து வியாபாரி எந்த தவறும் செய்யாத நிலையில் கோயிலுக்குச் சென்று வருந்தி அங்கு விளக்கு எரிக்க 20 மஞ்சாடி பொன் தானமாக வழங்கியதை கல்வெட்டு கூறுகிறது. எனவே தவறு செய்தவர்கள் தானம் வழங்கக்கூடிய ஒரு தண்டனை முறை உள்ளது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

இது போலவே தன்னால் வரி கட்ட முடியாது என்று கூறிய பழங்கூரன் குன்றன் என்பவரின் பற்றிய விஷயம் கல்வெட்டில் உள்ளது. இதை எடுத்து கிராம அலுவலர் பற்றி அரசிடம் அவர் புகார் தெரிவிப்பது போல அதில் செய்திகள் உள்ளது.

Jambai Temple

மேலும் அரசர்களுக்கு வரியாக நெல்லை செலுத்தி இருப்பதற்கான சான்றுகளும் இங்குள்ள கல்வெட்டுகளில் காணப்படுகிறது. அதுபோலவே விக்ரமச்சோழனின் ஆட்சி நடைபெற்ற நிகழ்ச்சிகள் குறிப்பிடப்படுகிறது. மன்றாடி சோழன் பெரியான் என்பவன் தன் மனைவியோடு பேசிக் கொண்டிருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டு அவளை தள்ளும்போது எதிர்பாராத விதமாக இறப்பு நேரிட்டது.

இதை ஊர் சபை கூடி தவறு என்று கூறியதோடு அவருக்கு தண்டனையாக கோயிலுக்கு தானம் கொடுக்க வலியுறுத்திய செய்தியும் இங்குள்ள கல்வெட்டுகளில் காணப்படுகிறது.

Exit mobile version