தமிழர்களும், கேரளா முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியும். என்னவெல்லாம் செய்திருக்கிறார் இவர்?
இந்திய அரசியல் களத்தில் கேரளாவைச் சார்ந்த உம்மன் சாண்டி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இவர் 1970 ஆம் ஆண்டு புதுப்பள்ளி சட்டசபை தொகுதியில் முதல் முதலில் வெற்றி பெற்றவர்.
மேலும் இவர் அக்டோபர் 31ஆம் தேதி 1943 இல் கேரளாவில் பிறந்தவர். பொருளாதார துறையில் இளம் கலை பட்டப் படிப்பை பெற்ற, இவர் அனைத்து கட்சிகளோடும் நட்பு முறையில் பழகக்கூடிய தன்மை கொண்டவர்.
இதனை அடுத்து சுமார் 11 முறை புதுப்பள்ளி தொகுதியில் வெற்றி கொண்டவர். 2013 ஆம் ஆண்டில் உம்மன் சாண்டிக்கு ஐநா சபையின் பொது சேவை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அவருக்கு கிடைத்த மிகப்பெரிய அந்தஸ்தாக கருதப்படுகிறது.
பொது வாழ்க்கையில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஊழலை தடுக்கக்கூடிய முயற்சியை மேற்கொண்டதற்காக இந்த விருது அவருக்கு கிடைத்தது. இரண்டு முறை கேரள முதல்வராக இருந்திருக்கக் கூடிய இவர், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள புதுப்பள்ளி தொகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றி பெற்றவர்.
இரண்டு முறை கேரள முதல்வராக திகழ்ந்தவர், எதிர்க்கட்சி தலைவராகவும் விளங்கியிருக்கிறார். 50 ஆண்டுகால கேரளா சட்டமன்ற வரலாற்றில் நான்கு முறை மாநில அமைச்சராகவும் இவர் திகழ்ந்து இருக்கிறார்.
Read This Also
- ” உலகம் போற்றும் இசைஞானி இளையராஜா..!” – பற்றிய சில சுவாரசிய தகவல்கள்…
- ” காவி உடை சன்னியாசி..!” – உ.பி முதல்வர்.. யாரும் அறியாத கலக்கல் தகவல்கள்..
- ” சோழர்களின் கோட்டைகளை சூறையாடி வம்சத்தையே கருவறுத்த மாறவர்மன் சுந்தரபாண்டியன்..!” – தமிழ் பற்று..!
- ” வாழ்க்கையில் வெற்றி பெற குட்டிக் குட்டி டிப்ஸ்..!”- நீங்களும் ஃபாலோ பண்ணி பாருங்க..!
- “2000 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய கப்பல்..!” ரோபோட்டுகளை பயன்படுத்தி ஜாடிகள் மீட்கப்படுமா?
- “60 ஆண்டுகளுக்குப் பின் கென்னடி படுகொலையில் அதிர்ச்சி திருப்பம்..!” – முன்னாள் அதிகாரியின் பரபரப்பு தகவல்..
இவரது ஆட்சிக் காலத்தில் கேரளாவில் இருக்கும் கண்ணூர் சர்வதேச விமான நிலையம், திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம், வல்லார் பாடம் பிரண்ட்ஷிப்மென்ட் டெர்மினல், ஸ்மார்ட் சிட்டி, மெட்ரோ ரயில், கேரள மாநில போக்குவரத்துத் திட்டம் போன்ற உள் கட்டமைப்பு வசதிகளை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்.
இவர் இரண்டாவது முறை முதல்வராக இருந்தபோது சோலார் ஊழல் மூலம் மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளானவர். சரிதா நாயரின் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக உம்மன் சாண்டிக்கு மத்திய புலனாய்வு அமைப்பு கிளீன் சிட் வழங்கியது. கேரளாவில் ஒரு மாபெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
முல்லைப் பெரியாறு பிரச்சனையில் தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயத்தை சரியான முறையில் தராததோடு, தமிழக மக்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்ளவில்லை என்று கூறலாம். மேலும் பழைய அணையால் பூகம்பம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்று உம்மன் சாண்டி வலியுறுத்தியது அனைவருக்கும் நன்றாக நினைவில் இருக்கலாம்.
அதுமட்டுமல்லாமல் திமுக தலைமையில் ஆன கூட்டணி சார்பில் கோயம்புத்தூர் தெற்கு தொகுதி வேட்பாளர் ஆதரித்து கேரள முன்னால் முதல்வரான உம்மன் சாண்டி கோயம்புத்தூரில் பிரச்சாரம் மேற்கொண்டது, இவருக்கும் திமுகவுக்கும் இடையே உள்ள வலுவான நட்பை வெளிப்படுத்தியது.
ஊழலை தடுக்க பாடுபட்டவர் என்று ஐநா சபையில் விருதினை வாங்கிய இவரை, சோலார் ஊழல் மற்றும் பாலியல் வழக்குகளில் சம்பந்தப்பட்டதும் முல்லைப் பெரியார் அணை விஷயத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் நடந்து கொண்டதோடு மட்டுமல்லாமல், அரசியலில் யாரும் நிரந்தர நண்பர்களும் நிரந்தர எதிரிகளும் இல்லை என்று கூறும் விதமாக, கோவையில் நடந்த தேர்தல் பரப்புரையில் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டதன் மூலம் இவரது சாயம் வெளுத்தது எனக் கூறலாம்.
இதனை அடுத்து உம்மன் சாண்டி உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் இருக்கும் மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (July 18, 2023) அதிகாலை அவரது உயிர் பிரிந்தது. தற்போது இவரது மறைவுக்கு பல்வேறு கட்சிகளை சார்ந்த தலைவர்கள் இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.