“குழந்தைகளுக்கு காது குத்துவது சடங்கல்ல..!” – காது குத்துவதால் ஏற்படும் நன்மைகள்..
குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே காது குத்தும் சடங்கை பொதுவாக அனைவரும் மேற்கொள்கிறார்கள். இவ்வாறு காது குத்துவது அழகினைக் கூட்டுவதற்கு மட்டுமல்ல. குழந்தைகளின் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய விஷயம் இதில் பொதிந்துள்ளது என்பது பலருக்கும் தெரியாது.
காலம் காலமாக தொடரக்கூடிய இந்த வழக்கம் குழந்தை பிறந்து மூன்று மாதம் முதல் ஒரு வருடத்திற்குள் அல்லது மூன்று ஐந்து என ஒற்றை இலக்கங்களில் வருடங்கள் வரும் போது அவரவர் வழக்கப்படி காது குத்தும் சம்பிரதாயம் உள்ளது.
குழந்தைகளுக்கு காது குத்தும் போது அவர்கள் பஞ்சு போன்று இருக்கக்கூடிய மென்மையான காதுகளுக்கு ஏற்ப தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களில் எடை குறைவான வகையில் தோடுகளை செய்து போடுவதின் மூலம் அவர்கள் சருமங்களில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.
மேலும் காது குத்துவதன் மூலம் செவித்திறன் நரம்புகள் தூண்டப்பட்டு செவித்திறன் மேம்படக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது. குழந்தைகளின் உட்புற காது மிக சிறந்த வகையில் கேட்கும் திறனை ஏற்படுத்தி கொடுக்க இது உதவி செய்கிறது.
செவித்திறனை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல், மூளையோடு நேரடியாக காது மடல்களில் இருக்கக்கூடிய நரம்புகளுக்கு தொடர்பு உள்ளது. குறிப்பிட்ட அந்த புள்ளியில் நாம் காதினை குத்தும்போது மூளையின் இரண்டு பக்கமும் சிறப்பாக வேலை செய்ய காது குத்தும் நிகழ்வானது ஒரு தூண்டலை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
காதுகளில் இருக்கக்கூடிய அக்குபிரஷர் புள்ளிகள் நுரையீரல் மற்றும் சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய தன்மை கொண்டது. இதனால் சுவாச சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடைபடும்.
இது மட்டுமா காது குத்தும் இடத்தில் இருக்கக்கூடிய அந்த மர்ம புள்ளி ஆண்மை மற்றும் பெண் இருபாலரது இனப்பெருக்கத்திற்கு உதவி செய்யக் கூடியது. கண் பார்வைக்கு மிக சிறப்பான பலனை கொடுக்கிறது.
பண்டைய கால அறுவை சிகிச்சை நிபுணரான சுஷ்ருதா விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், குடல் இறக்கத்திற்கு சிகிச்சை அளிக்கவும், காது குத்துவதை பரிந்துரை செய்திருப்பதாக சில செய்திகள் கூறப்பட்டுள்ளது.
மனிதர்களின் மனநலத்தை மேம்படுத்தவும், படபடப்பு, பதட்டம் போன்றவற்றை குறைக்கவும், காது குத்துதல் உதவி செய்கிறது. இதன் மூலம் உடல் முழுவதும் ஒரு சீரான ஆற்றல் ஏற்படும் என ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது.