“ஆஸ்திரேலியா பூர்வ குடிகளை அழித்த ஐரோப்பியர்கள்..!” – கறை படிந்த வரலாறு..
1788 ஆம் ஆண்டு ஐரோப்பியங்கள் ஆஸ்திரேலியாவின் மீது படையெடுத்துச் சென்றார்கள். அவ்வாறு படையெடுத்துச் செல்லும் போது அங்கு இருந்த பழங்குடி மக்கள் அனைவரையும் அழித்து அதன் பின்பு தான் ஆஸ்திரேலியாவை தனதாக்கி கொண்டார்கள் என்பது எத்துணை பேருக்கு தெரியும்.
பல காலமாக ஆஸ்திரேலியா பழங்குடி மக்கள் ஆஸ்திரேலியா தீவில் அற்புதமான வாழ்க்கை முறையை வாழ்ந்து வந்த நிலையில், அந்நியர்களின் தாக்குதல்களாலும், தொற்று நோயாலும் ஒரு குறிப்பிட்ட இன மக்கள் சிட்னியில் அழிக்கப்பட்ட வரலாற்று கறை இன்னும் நீங்கவில்லை என்று தான் கூற வேண்டும்.
1788 ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலியா தீவு கண்டத்தில் சுமார் 7,50,000 பழங்குடி இன மக்கள் வசித்ததாக தெரியவந்துள்ளது. இந்த தீவை லெப்டினன்ட் ஜேம்ஸ் குக் 1770 ஆம் ஆண்டு அடைந்த போது அந்தத் தீவில் யாரும் இல்லை என்று நம்பினார்.
ஆனால் இவர் இந்த தீவில் காலடி எடுத்து வைக்கும் போது சுமார் 400க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் வசித்து வந்திருக்கிறார்கள். இவர்கள் தீவுக்குள் நுழையும் போது அங்கிருந்த பூர்வகுடி வாசிகள் ஈட்டிகளை அசைத்து கூச்சல் இடுவதை பார்த்ததாக பிலிப் குக் தெரிவித்திருக்கிறார்.
ஐரோப்பியர்கள் வருகைக்கு முன்பே பல நூறு ஆண்டுகளாக வடக்கு சிட்டினியில் பல்வேறு பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். மிக நல்ல முறையில் வாழ்க்கையை வாழ்ந்து வந்த இவர்கள் தேவைக்காக மீனினை வேட்டையாடுவது, உணவினை அறுவடை செய்வது போன்றவற்றை தெரிந்தவர்கள்.
அது மட்டுமல்லாமல் இந்த தீவு மக்கள் பிற கண்டத்தில் இருக்கும் மக்களுடன் வர்த்தக முறையை பின்பற்றி வந்திருக்கிறார்கள். நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 4 முதல் 5 மணி நேரம் வரை வேலை செய்து, பின்பு ஓய்வு நேரத்தில் அவர்கள் வாழ்க்கையை சிறிய முறையில் நடத்தி வந்திருக்கிறார்கள்.
இதனை அடுத்து லெப்டினன்ட் குக் ஆஸ்திரேலியா வந்தவுடன் நியூ சவுத் வேல்ஸ் பகுதியை பிரிட்டன் மன்னனின் சொத்து என்று அறிவித்தார். அங்கு வாழ்ந்து வந்த பூர்வ குடி மக்களைப் பற்றி கவலை கொள்ளாமல் அந்தப் பகுதியில் இந்த ஒரு மக்களும் இல்லை என்ற கட்டுக்கதையை பரப்பினார்.
மேலும் அங்கிருந்த பூர்வ குடி மக்களை பெரிதாக கண்டுகொள்ளாமல் ஆயுத கலாச்சாரத்தின் மூலம் அவர்களை ஒதுக்கியதோடு அங்கிருந்த கங்காருகளை அதிகளவு வேட்டையாடி பழங்குடி மக்களை வறுமையில் வாழக்கூடிய நிலைக்கு தள்ளினார்கள்.
அது மட்டுமல்லாமல் மற்ற நாடுகளில் இருந்து பிரிந்து வளமோடு வாழ்ந்து வந்த இந்த பழங்குடி மக்கள் ஐரோப்பா மற்றும் ஆசியா முழுவதும் பரவி இருந்த அபாயகரமான நோய்களின் தாக்குதல்களை இந்த ஐரோப்பியர்களின் வருகைக்கு பிறகு அவர்களுக்கும் ஏற்பட்டது என்று கூறலாம். குறிப்பாக கப்பலில் இருந்த மாலுமிகள் மூலம் பரவிய பெரியம்மை, சிபிலிஸ் மற்றும் இன்ஃப்ளுயன்சா போன்ற கொடிய வைரஸ் களை எதிர்க்க பழங்குடி மக்களால் முடியவில்லை.
இதனை அடுத்து மிகவும் துடிப்போடு செயல்பட்ட ஆஸ்திரேலிய பழங்குடி இனத்தார் பெரியம்மை நோயின் தாக்குதலால் வெகுவாக பாதிக்கப்பட்டு அந்த குலம் பேரழிவிற்கு தள்ளப்பட்டது.
இந்த சூழ்நிலையில் ஆங்கிலேய காலணி குடியேற்றக்காரர்கள் பரப்பிவிட்ட நோயின் மூலம் பழங்குடி இனம் வெகுவாக குறைந்தது. மேலும் திட்டமிட்டு ஐரோப்பியர்கள் வேட்டையாடிய கங்காரு, ஈமு,டிங்கோ போன்ற விலங்கினதால் இவர்களது விவசாயம் மற்றும் மேய்ச்சல் போன்றவற்றுக்கு இடையூறு ஏற்பட்ட பாதிப்புகளை சந்தித்து அந்த இனம் அழிந்தது என கூறலாம்.
எனவே ஆஸ்திரேலியா பழங்குடி மக்களிடம் இருந்து தான் ஐரோப்பியர்கள் ஆஸ்திரேலியாவை கொள்ளை அடித்தார்கள் என்பது இதன் மூலம் அப்பட்டமாக நாம் தெரிந்து கொள்ளலாம்.