• November 21, 2024

 “சோம பானம் போதை  பொருள் அல்ல..!” – மனதை சுத்தம் செய்யும் மருந்து..

  “சோம பானம் போதை  பொருள் அல்ல..!” – மனதை சுத்தம் செய்யும் மருந்து..

Soma Banam

பகுத்தறிவு பெருகிவிட்ட இந்த காலகட்டத்தில் நாம் இதிகாசங்களிலும், புராணங்களிலும், வேதங்களிலும் கூறப்பட்டு இருக்கக்கூடிய கருத்துக்களின் உண்மை நிலை தெரியாது பலரும் பல விதமாக பிதட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் சோம பானம் என்பது போதைப் பொருளுக்கு ஈடானது  தற்போது இருக்கும் விஸ்கி, ஒயின் போன்று மனிதர்களுக்கு போதை ஊட்டக்கூடிய பொருள் என்று ஆங்கிலேயன் திரித்துக் கூறி விட்டதை நம்பி தான் நாம் இன்றும் சிக்கல் சிக்கித் தவிக்கிறோம்.

தமிழ் இலக்கியத்தில் மட்டுமல்லாமல் ரிக் வேதத்தின் ஒன்பதாவது மண்டலம் முழுவதுமே சோம பானம் பற்றிய பாடல்களைக் கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த சோம பானம் பற்றி பகவான் கிருஷ்ணன் பகவத் கீதையில் பேசி இருக்கிறார்.

Soma Banam
Soma Banam

இந்த பானத்தை அருந்துபவர்கள் இந்திரலோக பயனை பெறுவார்கள். எனினும் அவர்களால் முக்தி அடைய இது உதவாது என்பதை குறிப்பிட்டு கூறியிருக்கிறார்.

இந்த சோம பானம் ஆனது ஒரு தாவரத்தில் இருந்து எடுக்கப்படக்கூடிய சாறு என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ராஜ சூயம் யாகம் செய்பவர்கள், இந்த சோம ரசத்தை அருந்துவதால் தான் அதற்கு ராஜ சூயம் என்ற பெயர் ஏற்பட்டதாக வடமொழி நூல்கள் கூறுகிறது.

இந்த சோம லதை என்பது பழுப்பு நிறத்தோடு இருக்கும். இதை காய்ச்சி வடித்து அந்தச் சாறினை பாலுடன் கலந்து குடித்திருக்கிறார்கள். சிந்து சமவெளி நாகரிகத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சல்லடை, வடிகட்டி போல் உள்ளது. தற்போது இந்த வடிகட்டியானது அந்த சோம பானத்தை வடிகட்ட பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொள்ள துவங்கி இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை தந்துள்ளது.

வடமொழி இலக்கியங்களில் சோம பானத்தை பற்றி புகழ்ந்து இருக்கிறார்கள். வடமொழி நூலான சதபத பிராமணமும், தைத்ரீய பிராமணமும் சோமபான, சுராபான வேறுபாடுகளை பட்டியலிட்டு காட்டி இருக்கிறது.

Soma Banam
Soma Banam

சோம ரசம் ஆனது வளம் தருவது, உடலுக்கு ஒளியூட்டுவது சத்தியமானது என்ற குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சோம லதத்தை தரக்கூடிய பொருளை கழுகுகள் முஜாஹத் மலையில் இருந்து தூக்கி வந்ததாக குறிப்பிட்டு இருக்கிறார்கள். இந்த சோமக் கொடியை கழுகுகள் ஏன் தூக்கி வர வேண்டும் என்பது இன்று வரை விளங்காமல் உள்ளது.

சோமக் கொடியின் மூலம் செய்யப்படக்கூடிய இந்த சோம பானம் ஆனது ஒரு அபூர்வமான காய சித்தி மூலிகை. எனவே இதை பருகுவதின் மூலம் உடல் தூய்மையாகும் என்று கூறியிருக்கிறார்கள். அதுவும் அல்லாமல் இந்த சோம பானத்தை குடித்த எந்த ரிஷிகளும் குடிபோதையில் ஆடவில்லை என்பதை பராந்தக வீரநாராயணனின் தளவாய் புற கல்வெட்டில் குறிப்பு உள்ளது.

“சோம பானம் சாப்பிட்டு மனோ சுந்தருக்கு காடக சோமயாஜி” 

என்பதுதான் அந்த வரிகள். எனினும் இந்து மதத்திற்கு விரோதமாக செயல்படக்கூடியவர்கள், இந்த சோம பானத்தை கஞ்சா, அபினி போன்ற போதை வஸ்துக்களுக்கு ஒப்பாக  கூறியிருப்பது தவறாகும்.

Soma Banam
Soma Banam

வெளிநாட்டு அறிஞர்களும் விவரம் புரியாமல் நம்மை பிரித்து ஆளக்கூடிய வகையில் அவர்களுக்கு தெரிந்ததை புழுகி சென்று இருக்கிறார்கள். அதை மட்டுமே உண்மை என்று நம்பி நாம் இன்று வரை அடிமைகளாக இருந்தது போதும்.

நமது வேதங்கள் மற்றும் புராணங்களில் இருக்கக்கூடிய அறிவியலின் சாரம்சத்தை கண்டறிய கூடிய முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டோம் என்றால் உலகில் தலை சிறந்த விஞ்ஞானிகளாகவும் புதிய கண்டுபிடிப்பாளர்களாகவும் நாம் கட்டாயம் விளங்குவோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.