“தமிழர்கள் வணங்கிய பெண் தெய்வங்கள்..!” – வரலாறு சொல்லும் உண்மைகள்..
தமிழ் மக்கள் வணங்கிய பெண் தெய்வங்கள் யார்? யார்? எதற்காக பெண் தெய்வ வழிபாடு ஊருக்குள் ஏற்பட்டது.. இதனால் என்ன நன்மைகள் அங்கு நடந்தது. இந்த நாட்டுபுற பெண் தெய்வங்களை ஏன் வழிபட வேண்டும்? என்பது பற்றிய விரிவான தகவல்களை இந்த கட்டுரையில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
நாட்டுப்புற மக்களின் வாழ்வியலில் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கும் இந்த பெண் தெய்வங்கள் அவர்கள் வாழ்வின் எல்லா நிகழ்வுகளிலும் ஒரு முக்கிய அங்கத்தை வகிப்பதோடு வழிபாட்டிலும் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறார்கள்.
நாட்டுப்புற மக்களால் வழிபாடு செய்யப்பட்ட இந்த கடவுள்கள் தான் நாட்டுப்புற தெய்வங்கள் என்று அழைக்கிறோம். இந்த தெய்வத்தின் தோற்றங்களை பற்றி ஆய்வு செய்து பார்க்கும்போது நமக்கு வியப்புதான் ஏற்படுகிறது.
இந்த தெய்வங்கள் அனைத்துமே அந்தந்த ஊர்களில் மக்களோடு மக்களாக வாழ்ந்தவர்கள். ஒரு குறிப்பிட்ட காரணத்தால் வன்கொலை செய்யப்பட்டு உயிரிழந்தவர்கள் தான் கடவுளாக வழிபாடு செய்யப்பட்டார்கள் என்ற அதிர்ச்சியான தகவல்களை புரிந்து கொள்ள வேண்டும்.
பெரும்பாலான பெண் தெய்வங்கள் கொல்லப்பட்டு இறந்தவர்கள் என்பது முக்கியமான குறிப்பாக உள்ளது. மேலும் அந்த ஊரில் ஏற்படும் மழை, நோய் போன்றவற்றுக்கு இந்த தெய்வத்தின் கோபமே காரணம் என்பதை அவர்கள் நம்பி இருக்கிறார்கள்.
எனவே தான் அவற்றை சாந்தி படுத்த வழிபாடுகளை செய்து அங்கிருக்கும் மக்கள் வழிபட்டு வந்திருக்கிறார்கள். இந்தப் பெண் தெய்வங்களில் ஊர் தெய்வங்கள், பொது தெய்வங்கள்,
இன தெய்வங்கள், குலதெய்வங்கள், பத்தினி தெய்வங்கள், வீட்டு தெய்வங்கள், காவல் தெய்வங்கள், எல்லை தெய்வங்கள் என்று பல வகைகள் காணப்படுகிறது.
பொதுவாக இந்த தெய்வங்களை அம்மன் என்ற பெயரில்தான் சமூகத்தில் அழைத்து வருவதோடு அந்த தெய்வங்களுக்கு உரிய பூஜைகளையும் செய்து வருகிறார்கள்.
ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் அல்லது நீர் நிலை இருக்கக்கூடிய பகுதிகளில் இந்த தெய்வங்கள் இருக்கும். இவை சிலை வடிவமாகவோ அல்லது சாதாரண கல்லாகவோ, மரமாகவோ வழிபடப்பட்டு வருகிறது.
இந்தப் பெண் தெய்வங்களுக்கு விரதம் இருந்து உயிர்பலி கொடுத்து வழிபாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் நேர்த்திக்கடன், தீ மிதித்தல், தேர் இழுத்தல் போன்றவை நடைமுறையில் உள்ளது. சாதி, இன, மொழி பாகுபாடு இல்லாமல் ஊர் மக்களால் இயன்ற தெய்வம் வழிபாடு நடந்து வருகிறது.