
யானை எவ்வளவு பெரியதோ அதைப்போல யானையைக் குறிக்கின்ற சங்கத் தமிழ்ப் பெயர்களின் பட்டியலும் மிகப் பெரியதே!
களிறு, புகர்முகம், கயவாய், பிடி, வேழம், கைம்மா(ன்), ஒருத்தல், கயமுனி, கோட்டுமா, கயந்தலை, கயமா, பொங்கடி, பிணிமுகம், மதமா, தோல், கறையடி, உம்பல், வாரணம், நாகம், பூட்கை, குஞ்சரம், கரி முதலான 23 வகையான பெயர்களைச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. பெயர் மட்டும் இல்லை. இந்த பெயரின் ஒவ்வொன்றிக்கும் விளக்கத்தையும் வைத்திருக்கிறான் தமிழன்.
- கருமைநிறம் கொண்ட தாக்கும் இயல்புடைய யானை – களிறு
- முகத்தில் நிறைய புள்ளிகளை உடைய யானை – புகர்முகம்
- பெரிய வாயினை உடைய யானை – கயவாய்
- கையால் பிடித்துவைத்ததைப்போல் சிறிய மருப்புடைய பெண்யானை – பிடி
- கரும்பையும் மூங்கிலையும் விரும்பித் தின்னும் யானை – வேழம்
- தும்பிக்கை கொண்ட யானை – கைம்மா(ன்)
- அளப்பரிய வலிமை கொண்ட தனியொரு ஆண் யானை – ஒருத்தல்
- பெரும்துன்பம் தரக்கூடிய சினங்கொண்ட யானை – கயமுனி
- தந்தம் உடைய யானை – கோட்டுமா
- பெரிய தலையினை உடைய யானை – கயந்தலை
- மிகப் பெரிய அடியினைக் கொண்ட யானை – பொங்கடி
- நோயினால் அழுது வருந்துவதைப் போன்ற முகமுடைய யானை – பிணிமுகம்
- மதம் பிடிக்கின்ற யானை – மதமா
- துருத்திபோன்ற தும்பிக்கையைக் கொண்ட யானை – தோல்
- உரல் போன்ற காலடியினைக் கொண்ட யானை – கறையடி
- நல்ல உயர்ச்சியைக் கொண்ட வலிமையான யானை – உம்பல்
- கடல்போல் ஆர்ப்பரிப்பதும் சங்குபோல் கூரிய வெண்மருப்புடையதுமான யானை – வாரணம்
- மேகம்போல் ஒலியை எழுப்புவதும் பாம்புபோல் வளைவதுமான துதிக்கையை உடைய யானை – நாகம்
- புழையுடையதும் வலிமைமிக்கதுமான தும்பிக்கையைக் கொண்ட யானை – பூட்கை
- வளைந்து தொங்கும் தும்பிக்கையைக் கொண்ட யானை – குஞ்சரம்
- கருமையும் பெருமையும் கொண்ட யானை – கரி

வழுக்கு சொல் யானையின் பெயர்கள்
அரசயானை, அறுகோட்டுயானை, அறைபறையானை, அடற்கோட்டுயானை, அண்ணல்யானை, ஆடியல்யானை, ஆள்கொல்யானை, இருமருப்புயானை, இருங்களிற்றுயானை, இழையணியானை, இளமையானை, இறைஇகல்யானை, இனமணியானை, இனக்களிற்றுயானை, இனம்சால்யானை, உருகெழுயானை, உரற்கால்யானை, உயர்மருப்புயானை, உயங்கல்யானை, ஊனில்யானை, எழில்யானை, ஏந்துகோட்டுயானை, ஒல்லார்யானை, ஓங்கல்யானை, ஓங்கியல்யானை, ஓங்குஎழில்யானை, ஓங்குமருப்புயானை, ஓடையானை, கச்சையானை, கடுநடையானை, கடுங்கண்யானை, கடுங்களியானை, கடக்களியானை, கடும்பகட்டுயானை, கடுங்களிற்றுயானை, கடம்திகழ்யானை, கடாஅயானை, களியானை, களியியல்யானை, களங்கொள்யானை, கருங்கையானை, கல்லாயானை, கயம்நாடுயானை, கழைதின்யானை, கறையடியானை, கதன்அடங்குயானை, கவளம்கொள்யானை, கண்காணாயானை, கைவல்யானை, கானயானை, காய்சினயானை, கொல்யானை, கொலைவல்யானை, கொல்களிற்றுயானை, கொன்றயானை, கோடுமுற்றுயானை.
சிறுகண்யானை, செந்நுதல்யானை, சுரம்செல்யானை, சூழியானை, சேற்றுள்செல்யானை, தடக்கையானை, தடமருப்புயானை, தண்படாயானை, தொடிமருப்புயானை, தொடர்கொள்யானை, துகள்சூழ்யானை, துஞ்சும்யானை, துவன்றியயானை, தொழில்நவில்யானை, தொழில்புகல்யானை, நல்யானை, நெடுநல்யானை, நெடுங்கையானை, நெடுந்தாள்யானை, நிழத்தயானை, நிவந்தயானை, நிறையழியானை, நிறப்படைக்கு ஒல்காயானை, நீலயானை, பள்ளியானை, பருமயானை, பழிதீர்யானை, படுமணியானை, பசித்தயானை, பணைத்தாள்யானை, பாவடியானை, பெருங்கையானை, பெருமலையானை, பேதையானை, பொருதயானை, பொருதுமுரண்யானை, பொருதுதொலையானை, பொன்னணியானை, போர்யானை, போர்வல்யானை, புத்தியானை, புதுக்கோள்யானை, புண்கூர்யானை, புலம்தேர்யானை, புன்செய்யானை, பூநுதல்யானை, பூம்பொறியானை, பைங்கண்யானை.
மண்யானை, மணியானை, மணியணியானை, மதயானை, மால்யானை, மராஅயானை, மாரியானை, மயங்கியல்யானை, மதவலியானை, மதன்அழியானை, மலைமருள்யானை, மலைஉறழ்யானை, மையல்யானை, மையணியானை, மாண்வினையானை, மாசறக் கழீஇயயானை, முறஞ்செவியானை, வம்பணியானை, வரிநுதல்யானை, வினைவல்யானை, வினைநவில்யானை, விலங்குமருப்புயானை, வெள்யானை, வெண்கோட்டுயானை, வேகயானை, வீயுகுயானை, வெஞ்சினயானை, வேந்தூர்யானை.
Unlimited High-Quality Audiobooks
Best Devotional Audiobooks
Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.
Listen DevotionalCrime Series
Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.
Discover Crime SeriesRajesh Kumar Collection
Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.
Listen Nowஒருசில விளக்கம்
கண்கள் சிறியவை அதனால் சிறுகண் யானை
மருப்பு ஏந்தி இருக்கும் அதனால் ஏந்துகோட்டுயானை
பெருங்கை வலிமையானது அதனால் தடமருப்புயானை
கால்கள் உரல்போல் இருக்கும் அதனால் உரற்கால்யானை
நெற்றி மென்மையாக இருக்கும் அதனால் பூநுதல்யானை
செவிகள் முறம்போல இருக்கும் அதனால் முறஞ்செவியானை
மொத்தத்தில் மலை போலத் தோன்றும் அதனால் மலையுறழ்யானை
அகநானூற்றுப் பாடல்களில் மட்டும் 167 பாடல்களிலும், புறநானூற்றுப் பாடல்களில் மட்டும் 144 பாடல்களிலும்,
இவை தவிர பழந்தமிழ்ப் பரப்பில் சற்றொப்ப 200 இடங்களில் யானைகள் பற்றி பேசப்பட்டுள்ளன.
ஒப்பீட்டு ஆய்வுக்காக:
மேலே தரப்பட்டுள்ள 132 அடையாளங்களும் பழந்தமிழில் எந்தெந்த இடங்களில் இருந்து எடுக்கப் பெற்றுள்ளன என்பதனை ஆய்வுத் தேவைக்காக அறிய விரும்புவோர் கேட்டுப் பெறலாம் (thakkar.avaiyam@gmail.com) நன்றி : http://poovulagu.in/
Great work congratulations