பாமாயிலுக்கு பதில் மாற்று எண்ணெய்..! – PALM-ALT புதிய கண்டுபிடிப்பு..
நான் அன்றாட வாழ்க்கையை சமையலுக்கு பல்வேறு வகையான எண்ணெய்களை பயன்படுத்தி வருகிறோம். அந்த வகையில் அடித்தட்டு மக்களால் அதிகளவு பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகளில் ஒன்று தான் பாமாயில்.
இந்த எண்ணெயின் தேவை நாளுக்கு நாள் அதிகரிப்பதை அடுத்து பூமத்திய ரேகைக்கு அருகில் இருக்கும் பனை மரங்கள் பெரும்பாலும் வெட்டப்பட்டு இயற்கையான காட்டுப் பகுதிகள் அழிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த பாமாயில் மூலம் சோப்பு, ஷாம்பு போன்ற கழிவறை பொருட்கள் முதல் நாம் உண்ணும் குறுந்தீனி பொருட்களில் இதன் பயன்பாடு அதிகளவு உள்ளது. மக்களால் அதிகளவு பயன்படுத்தக்கூடிய இந்த பாமாயிலுக்கு நிகரான மற்றொரு எண்ணையை விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இந்த மாற்று எண்ணெயை எடின்பரோவில் உள்ள குயின் மார்க்கெட் பல்கலைக்கழகத்தின் உணவு நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த எண்ணெய் 100 சதவீதம் தாவரத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும், எழுபது சதவீதம் சுற்றுச்சூழலுக்கு ஏற்றது என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
இந்த எண்ணெய்க்கு பாம் ஏஎல்டி (PALM – ALT) என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் 80 சதவீதத்துக்கு குறைவான நிறைவுற்ற கொழுப்பு மற்றும் 30% குறைவான கலோரிகளைக் கொண்ட ஒரு ஆரோக்கியமான எண்ணெயாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறி இருக்கிறார்கள்.
மாற்று எண்ணையானது பாமாயிலின் சுவையைப் போலவே இருக்கும் என்று அந்த குழுவில் இருக்கும் முன்னணி ஆய்வாளர்களில் ஒருவரான கேட்ரியோனா லிடில் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
இயற்கையான பாமாயிலுக்கும், செயற்கையாக தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த எண்ணெய்க்கும் இடையே உள்ள வேற்றுமையை எவராலும் கண்டறிய முடியவில்லை. மேலும் இந்த செயற்கை PALM – ALT மயோனைஸ் போன்ற திடப்பொருளை கொண்டு இருப்பதாக கூறி இருக்கிறார்கள்.
பனை மற்றும் தேங்காய் பொருட்கள் இதில் இல்லை. கூடுதல் சுவை ஊட்டிகளாக சர்க்கரை, செயற்கை இனிப்பான்கள் மற்றும் பதப்படுத்தும் ரசாயனங்கள் போன்றவையும் இந்த எண்ணெயில் இல்லை.
இந்த எண்ணெய்யானது ஆளி விதை தொழிற்சாலை கழிவுகள், ராப் சீட் (RAPESEED) எண்ணெய் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
உலகில் அதிக அளவு உற்பத்தி செய்யப்படுகின்ற எண்ணெயாக பாமாயில் உள்ளது. மேலும் இந்த தாவர எண்ணெய் ஆனது உலகளாவிய பயன்பாட்டில் சுமார் 40% இடம் பிடித்துள்ளது.
தற்போது பாமாயிலின் தேவை அதிகரித்து வருவதால் அதற்கு ஒரு மாற்று எண்ணெய் நிச்சயம் தேவை. அந்த வகையில் எந்த கண்டுபிடிப்பு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. பாமாயிலை அதிக அளவு சாகுபடி செய்யும் நாடுகளில் 85 சதவீதம் மலேசியா மற்றும் இந்தோனேசியா செய்கிறது.
இந்த சூழ்நிலையில் பாம் ஏஎல்டி (PALM – ALT) க்கு சர்வதேச அறிவு சொத்துரிமை கோரி விண்ணப்பித்து இருக்கிறார்கள். இதனை அடுத்து இந்த குழு வருங்கால உற்பத்தியாளர்களுடன் இணைந்து இந்த மாற்று எண்ணெயை உற்பத்தி செய்யக்கூடும் என்ற நிலை உள்ளது.